Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Marshal Movie : மார்ஷல் படத்தில் கார்த்திக்கு வில்லனாகும் பிரபல நடிகர்? அட இவரா!

Karthis Marshal Movie Update : தமிழ் சினிமாவில் பிரபல முன்னணி நடிகர்களில் ஒருவர்தான் கார்த்தி. இவரின் முன்னணி நடிப்பில், தமிழ் சினிமாவில் மிக பிரம்மாண்டமாக உருவாகிவரும் படம் மார்ஷல். இப்படத்தில் கார்த்திக்கு வில்லனாக நடிக்கும் நடிகர் பற்றிய அப்டேட் வெளியாகியுள்ளது. இதுகுறித்து விவரமாக பார்க்கலாம்.

Marshal Movie : மார்ஷல் படத்தில் கார்த்திக்கு வில்லனாகும் பிரபல நடிகர்? அட இவரா!
கார்த்தியின் மார்ஷல் திரைப்படம்Image Source: X
Barath Murugan
Barath Murugan | Published: 18 Aug 2025 21:21 PM

நடிகர் கார்த்தியின் (Karthi) நடிப்பில் தமிழில் இறுதியாக வெளியான படம் மெய்யழகன் (Meiyazhagan). இப்படமானது கடந்த 2024 ஆம் ஆண்டு வெளியாகி மக்களிடையே பாசிடிவ் விமர்சனங்களைப் பெற்றிருந்தது. இதை அடுத்து இவரின் நடிப்பில் வா வாத்தியார் (Vaa vaathiyaar) மற்றும் சர்தார் 2 (Sardar 2) என இரு படங்கள் உருவாகிவந்தது. இப்படங்கள் தற்போது போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகளில் இருக்கிறது. இதனையடுத்து இவர், இயக்குநரும் நடிகருமான தமிழ் (Tamizh) இயக்கத்தில் மார்ஷல் (Marshal) என்ற படத்தில் இணைந்துள்ளார். இந்த படத்திற்கு முன் இயக்குநர் தமிழ், டாணாக்காரன் என்ற படத்தை இயக்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மார்ஷல் படமானது கடல் சார்ந்த கதைக்களம் கொண்ட படமாக உருவாகியுள்ளது.

இந்த படத்தில் கார்த்திக்கு வில்லனாக ஆரம்பத்தில், நடிகர் நிவின் பாலி (Nivil Pauly) நடிக்கவுள்ளார் எனக் கூறப்பட்டது. இந்நிலையில் அவர் இப்படத்திலிருந்து விலகியதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், பிரபல நடிகர் ஜீவா (Jiiva) இப்படத்தில் வில்லனாக நடிக்கவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகி வருகிறது. இந்த தகவலானது எந்த அளவிற்கு உண்மை என்று தெரியவில்லை. விரைவில் இது குறித்த அறிவிப்புகள் வெளியாகவும் எனக் கூறப்படுகிறது.

இதையும் படிங்க : தமிழ் படங்கள் ரூ.1000 கோடிகள் வசூலிக்காததற்குக் காரணம் இதுதான்- ஏ.ஆர். முருகதாஸ் பேச்சு!

மார்ஷல் படக்குழு வெளியிட்ட ஷூட்டிங் பூஜை புகைப்படங்கள் பதிவு :

இந்த மார்ஷல் படமானது கார்த்தியின் 29வது படமாக, கடந்த 2024ம் ஆண்டு இறுதியில் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த படத்தை டாணாக்காரன் என்ற படத்தின் மூலம் பிரபலமான இயக்குநர் தமிழ் இயக்கவுள்ளார். இப்படத்தின் ஷூட்டிங் பூஜைகள் கடந்த 2025, ஜூன் மாதத்தில் சிறப்பாக நடைபெற்றிருந்தது. இந்த படத்தில் கார்த்தி முன்னணி கதாநாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக மலையாள நடிகை கல்யாணி பிரியதர்ஷன் இணைந்து நடிக்கவுள்ளார்.

இதையும் படிங்க : ஐயா எப்படியாவது இத ஹிட் படமா கொடுங்கனு விஜய் சேதுபதி சொன்னார்… தலைவன் தலைவி இயக்குநர் சொன்ன விசயம்!

மேலும் நடிகர் சத்யராஜ் இப்படத்தின் முக்கிய வேடத்தில் நடிக்கவுள்ளார். இந்த மார்ஷல் படத்திற்கு இளம் இசையமைப்பாளர் சாய் அபயங்கர் இசையமைத்து வருகிறார். இந்த மார்ஷல் திரைப்படத்தை ட்ரீம் வாரியர் பிக்ச்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.

மார்ஷல் படத்தின் கதைக்களம் ;

இந்த மார்ஷல் திரைப்படமானது முழுவதும், கடல் சார்ந்த கதைக்களத்துடன் உருவாகவுள்ளதாம். இப்படமானது கடலில் படகு போட்டி மற்றும் போதைப் பொருள் கடத்தல் தொடர்பான கதைக்களம் கொண்டு உருவாகவுள்ளதாக கூறப்படுகிறது.. இப்படத்தை முதற்கட்ட ஷூட்டிங் சென்னையிலும், அடுத்தகட்ட ஷூட்டிங் ராமேஸ்வரத்தில் நடைபெறவுள்ளதாகக் கூறப்படுகிறது. இப்படத்தை வரும் 2026ம் ஆண்டு கோடைக்காலத்தில் வெளியிடப் படக்குழு திட்டமிட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.