Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

9 வருடங்களை கடந்த தர்மதுரை படம்… எந்த ஓடிடியில் பார்க்கலாம்?

9 Years Of Dharma Durai Movie: நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றப் படம் தர்மதுரை. இந்தப் படம் தற்போது திரையரங்குகளில் வெளியாகி தற்போது 9 வருடங்களை நிறைவு செய்துள்ளது. இதனை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

9 வருடங்களை கடந்த தர்மதுரை படம்… எந்த ஓடிடியில் பார்க்கலாம்?
தர்மதுரை Image Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 19 Aug 2025 19:29 PM

நடிகர் விஜய் சேதுபதி (Vijay Sethupathi) நாயகனாக நடித்து கடந்த 19-ம் தேதி ஆகஸ்ட் மாதம் 2016-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியான படம் தர்மதுரை. இயக்குநர் சீனு ராமசாமி இந்தப் படத்தை எழுதி இயக்கி இருந்தார். இதில் நடிகர் விஜய் சேதுபதி உடன் இணைந்து நடிகர்கள் தமன்னா பாட்டியா, ஐஸ்வர்யா ராஜேஷ், ஸ்ருஷ்டி டாங்கே, கஞ்சா கருப்பு, எம்.எஸ்.பாஸ்கர், அருள்தாஸ், பி.எஸ்.கணேஷ் ராஜேஷ், ராதிகா சரத்குமார், சௌந்தரராஜா, மதுவந்தி அருண், விசாலினி, அபி நட்சத்திரம், புளோரன்ட் பெரேரா, சரவண சக்தி, ஜீவா சுப்ரமணியன் என பலர் இந்தப் படத்தில் நடித்து இருந்தனர். ஃபேமிலி ட்ராமாவாக உருவாகி இருந்த இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாகி தற்போது 9 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது. இதனை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

மேலும் இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் சங்கர் இசையமைத்து இருந்தார். படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது போல பாடல்களும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்தப் படத்தை தயாரிப்பு நிறுவனமான ஸ்டூடியோ 9 சார்பாக தயாரிப்பாளர் ஆர்.கே.சுரேஷ் படத்தை தயாரித்து இருந்தார்.

தர்மதுரை படத்தின் கதை என்ன?

முதல் தலைமுறை பட்டதாரியாக நடிகர் விஜய் சேதுபதி டாக்டர்க்கு படித்துவிட்டும் டாக்டராக பணிபுரியாமல் குடித்துவிட்டு ஊருக்குள் சுற்றி வருகிறார். இவரது அண்ணன் மற்றும் தம்பி இருவரும் இவரைத் திட்டிக்கொண்டே இருக்கும் சூழலில் அம்மா ராதிகா மட்டும் விஜய் சேதுபதிக்கு ஆதரவாக இருக்கிறார். ஒரு கட்டத்தில் விஜய் சேதுபதியின் தொல்லை தாங்காமல் அவரை வீட்டுக்குள்ளே வைத்து அடைத்து வைக்கிறார்கள் அவரது சகோதரர்கள். அப்போது அம்மா ராதிகா அவரை வீட்டில் இருந்து தப்பிக்க வைக்க உதவுகிறார்.

இதனைத் தொடர்ந்து தன்னுடன் கல்லூரியில் படத்தவர்களை தேடி செல்கிறார் விஜய் சேதுபதி. அதில் கல்லூரியில் தன்னை காதலித்த ஸ்ருஷ்டி டாங்கே விபத்தில் இறந்ததைத் தெரிந்துக்கொள்கிறார். அதனைத் தொடர்ந்து தன்னுடைய இன்னொரு தோழியான தமன்னாவைத் தேடித் செல்கிறார். அவர் திருமணம் ஆகி அந்த திருமண வாழ்க்கை சரியாக இல்லாத்தால் தனியாக வாழ்கிறார். அவரை சந்தித்த விஜய் சேதுபதி தனது வாழ்க்கையில் நடந்தது என்ன என்பது குறித்தும் ஒரு ஃப்ளாஸ்பேக் காட்சி காட்டப்படும். இதனைத் தொடர்ந்து இவர்களின் வாழ்க்கை எப்படி மாறியது என்பதே படத்தின் கதை. இந்தப் படம் தற்போது சன் நெக்ஸ்ட், அமேசான் ப்ரைம் ஆகிய ஓடிடி தளத்தில் காணக் கிடைக்கின்றது.

Also Read… சூர்யா 46 படத்தில் அனில் கபூரா? வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த வெங்கி அட்லூரி

தயாரிப்பாளர் ஆர்.கே.சுரேஷ் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவு:

Also Read… பரியேறும் பெருமாள் படத்தை மிஸ்பன்னத நினைத்து வருத்தப்பட்டேன் – நடிகை அனுபமா பரமேசுவரன்