பரியேறும் பெருமாள் படத்தை மிஸ்பன்னத நினைத்து வருத்தப்பட்டேன் – நடிகை அனுபமா பரமேசுவரன்
Anupama Parameswaran: மலையாள சினிமாவில் நடிகையாக அறிமுகம் ஆகி தற்போது தமிழ், தெலுங்கு என தென்னிந்திய மொழிகளில் தொடர்ந்து முன்னணி நடிகையாக இருப்பவர் நடிகை அனுபமா பரமேசுவரன். இவர் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் பரியேறும் பெருமாள் படம் குறித்து பேசியது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

மலையாளத்தில் வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தப் பிரேமம் படத்தின் மூலம் சினிமாவில் நடிகையாக அறிமுகம் ஆனார் நடிகை அனுபமா பரமேசுவரன் (Anupama Parameswaran). அதனைத் தொடர்ந்து மலையாளம் மட்டும் இந்தி தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளிலும் தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார். இந்த நிலையில் தமிழில் இறுதியாக இவர் ட்ராகன் படத்தில் நடித்து இருந்தார். இவரது கதாப்பாத்திரம் ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. அதனைத் தொடர்ந்து மலையாளத்தில் இவரது நடிப்பில் இறுதியாக வெளியான படம் ஜானவி வெர்சஸ் ஸ்டேட் ஆஃப் கேரளா. மிகவும் சீரியசான கதாப்பாத்திரத்தை ஏற்று இந்தப் படத்தில் நடிகை அனுபமா பரமேசுவரன் நடித்து இருந்தார். இதில் நடிகர் சுரேஷ் கோபி முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.
இதனைத் தொடர்ந்து தற்போது நடிகை அனுபமா பரமேசுவரன் நடிப்பில் தெலுங்கு சினிமாவில் வெளியாக உள்ள படம் பரதா. இவருடன் இணைந்து நடிகைகள் சங்கீதா மற்றும் தர்ஷனா ராஜேந்திரனும் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்தப் படத்தை இயக்குநர் பிரவீன் காண்ட்ரேகுலா இயக்கி உள்ள நிலையில் படம் வருகின்ற ஆகஸ்ட் மாதம் 22-ம் தேதி 2025-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்த நிலையில் படத்தின் புரமோஷன் பணிகளில் படக்குழு தீவிரமாக ஈடுபட்டு வருகின்றது. அந்த வகையில் சமீபத்தில் நடிகை அனுபமா பரமேசுவரன் அளித்தப் பேட்டி தற்போது வைரலாகி வருகின்றது.
பரியேறும் பெருமாள் படத்தின் நான் தான் நடிக்க வேண்டியது:
நடிகை அனுபமா பரமேசுவரன் பேசுகையில் இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் முன்னதாக வெளியான பரியேறும் பெருமாள் படம் முதலில் எனக்குதான் வந்தது. ஆனால் அப்போது மிகவும் பிசியாக இருந்ததால் என்னால் அந்தப் படத்தில் நடிக்க முடியாமல் போனது. அதன்பிறகு நான் மிகவும் வருத்தப்பட்டேன்.
அதே போலதான் மாமன்னன் படத்திற்காகவும் மாரிசெல்வராஜ் என்னை அனுகினார். என்னால் அதையும் பண்ணமுடியாமல் போனது. தொடர்ந்து மூன்றாவது முறையாக பைசன் படத்திற்காக அவர் என்னை பார்க்கும் போது இதை நான் கண்டிப்பாக மிஸ் செய்யக்கூடாது என்று நினைத்தேன். அதில் நடித்துவிட்டேன் என்று நடிகை அனுபமா பரமேசுவரன் அந்தப் பேட்டியில் தெரிவித்து இருந்தார்.
Also Read… 3 ஆண்டுகளை நிறைவு செய்த தனுஷின் திருச்சிற்றம்பலம் படத்தை எந்த ஓடிடியில் பார்க்கலாம்?
இணையத்தில் கவனம் பெறும் அனுபமா பரமேசுவரனின் பேட்டி:
“I was first preference of #PariyerumPerumal, but I’m very sad that I was busy🙁. Later he Narrated #Maamannan, again I’m busy. When he narrated #BISON I’m excited, it helped me evolve as an actor🛐. Bison will be one of best of MariSelvaraj🔥”
– #Anupama pic.twitter.com/n74Q4Q5VOJ— AmuthaBharathi (@CinemaWithAB) August 19, 2025