பிரமாண்ட இயக்குநர் சங்கருக்கு பிறந்த நாள் வாழ்த்துகள்!
Happy Birthday Director Shankar : தமிழ் சினிமா மட்டும் இன்றி இந்தியா சினிமா முழுவதும் பிரமாண்ட இயக்குநர் என்று ரசிகர்களால் கொண்டாடப்படுபவர் இயக்குநர் சங்கர். இவரது இயக்கத்தில் வெளியான பலப் படங்கள் ரசிகர்களிடையே சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது குறிப்பிடத்தக்கது.

தமிழ் சினிமா மட்டும் இன்றி இந்தியா முழுவதும் பிரபல இயக்குநராக இருப்பவர் இயக்குநர் சங்கர் (Director Shankar). இவரது இயக்கத்தில் வெளியான பல படங்கள் ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. தமிழ் சினிமா மட்டும் இந்தி பான் இந்திய அளவில் உள்ள சினிமா பிரபலங்கள் பலர் இயக்குநர் சங்கர் இயக்கத்தில் நடிக்க வேண்டும் என்று தங்களது விருப்பங்களை பல இடங்களில் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. கடந்த சில படங்கள் இயக்குநர் சங்கருக்கு எதிர்பார்த்த வெற்றியைக் கொடுக்கவில்லை என்றாலும் அவரது இயக்கத்தில் முன்பாக வெளியான படங்கள் இன்னும் பலருக்கு சினிமாவில் இயக்குநராக ஆக வேண்டும் என்ற ஆசையை தூண்டும் விதமாகவே உள்ளது. இயக்குநர் சங்கர் இயக்கத்தில் அடுத்ததாக என்னப் படம் வெளியாகும் என்று அவரது ரசிகர்கள் ஆவளுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
இந்திய சினிமாவின் பிரமாண்ட இயக்குநர் சங்கர்:
இயக்குநர் சங்கர் இயக்குநரும் நடிகர் விஜயின் தந்தையுமான எஸ்.ஏ.சந்திரசேகரிடம் உதவி இயக்குநராக பணியாற்றி பிறகு தமிழ் சினிமாவில் இயக்குநராக மாறினார் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் கடந்த 1993-ம் ஆண்டு வெளியான ஜென்டில்மேன் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகம் ஆனார். இந்தப் படத்தில் ஆக்ஷன் கிங் அர்ஜுன் நாயகனாக நடித்து இருந்தார். மேலும் நடிகை மதுபாலா நாயகியாக நடித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் மாபெரும் வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. இயக்குநர் சங்கருக்கு அறிமுகம் ஆன முதல் படமே மாபெரும் வெற்றியைப் பெற்றதால் தமிழ் சினிமாவில் இவருக்கு அடுத்தடுத்தப் படங்களின் வாய்ப்புகள் குவியத் தொடங்கியது.
அதன்படி இயக்குநர் சங்கர் இயக்கத்தில் தொடர்ந்து காதலன், இந்தியன், ஜீன்ஸ், முதல்வன், பாய்ஸ், அந்நியன், சிவாஜி தி பாஸ், எந்திரன், நண்பன், ஐ, எந்திரன் 2, இந்தியன் 2 மற்றும் கேம் சேஞ்சர் ஆகிய படங்கள் தொடர்ந்து வெளியானது. இதில் இறுதியாக இயக்குநர் சங்கர் இயக்கத்தில் வெளியான இந்தியன் 2 மற்றும் கேம் சேஞ்சர் ஆகிய படங்கள் ரசிகர்களிடையே விமர்சன ரீதியாக வரவேற்பைப் பெற தவறியது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் இயக்குநர் சங்கர் தற்போது இந்தியன் படத்தின் 3-ம் பாகத்தின் படப்பிடிப்பு பணிகளில் பிசியாக இருக்கிறார். இந்தப் படம் நிச்சயமாக வெற்றியடையும் என்று படக்குழு நம்பிக்கையுடன் உள்ளது. இந்த நிலையில் இன்று 17-ம் தேதி ஆகஸ்ட் மாதம் 2025-ம் ஆண்டு இயக்குநர் சங்கர் தனது 62-வது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு திரையுலக பிரபலங்கள் உட்பட ரசிகர்கள் பலரும் தங்களது பிறந்த நாள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
இயக்குநர் சங்கரின் சமீபத்திய எக்ஸ் தள பதிவு:
Dear @rajinikanth sir
The awe I felt from the day I first saw you on screen in Moondru Mudichu, seeing you in person on the sets of Johnny, meeting you as a director, narrating my stories, making Sivaji, Endhiran, 2.0 and up until a couple of weeks ago when I saw you last- 50…
— Shankar Shanmugham (@shankarshanmugh) August 13, 2025
Also Read… Pooja Hegde : தென்னிந்தியப் படங்களில் நடிப்பது எனக்கு மிகவும் மகிழ்ச்சி – பூஜா ஹெக்டே பேச்சு!