Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

வடிவேலு – ஃபகத் பாசிலின் மாரீசன் படத்தின் ஓடிடி ரிலீஸ் எப்போது? வைரலாகும் அப்டேட்!

Maareesan Movie OTT: நடிகர்கள் ஃபகத் பாசில் மற்றும் வடிவேலு நடிப்பில் சமீபத்தில் திரையரங்குகளில் வெளியான படம் மாரீசன். இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது இந்தப் படம். இதனைத் தொடர்ந்து படம் எப்போது ஓடிடியில் வெளியாகும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துகொண்டிருந்த நிலையில் அப்டேட் வைரலாகி வருகின்றது.

வடிவேலு – ஃபகத் பாசிலின் மாரீசன் படத்தின் ஓடிடி ரிலீஸ் எப்போது? வைரலாகும் அப்டேட்!
மாரீசன்Image Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 17 Aug 2025 16:48 PM

இயக்குநர் சுதீஷ் சங்கர் (Director Sudeesh Sankar) இயக்கத்தில் வெளியான படம் மாரீசன். இந்தப் படத்தின் கதையை எழுத்தாளர் வி. கிருஷ்ண மூர்த்தி எழுதி இருந்தது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்தப் படம் கடந்த ஜூலை மாதம் 25-ம் தேதி 2025-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தில் நடிகர்கள் ஃபகத் பாசில் மற்றும் வடிவேலு முக்கிய வேடங்களில் நடித்து இருந்தனர். இவர்களுடன் இணைந்து நடிகர்கள் கோவை சரளா, விவேக் பிரசன்னா, சித்தாரா, பி.எல்.தேனப்பன், லிவிங்ஸ்டன், ரேணுகா, சரவண சுப்பையா, கிருஷ்ணா, ஹரிதா, தொலைபேசி ராஜா, ஸ்ரீநிவாஸ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்தப் படத்தை பிரபல தயாரிப்பு நிறுவனமான சூப்பர் குட் ஃபிலிம்ஸ் சார்பில் தயாரிப்பாளர் ஆர். பி. சௌத்ரி தயாரித்து இருந்தார். மேலும் இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைத்து இருந்தார். படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது போல பாடல்களும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.

நெட்ஃபிளிக்ஸ் ஓடிடியில் வெளியாகும் மாரீசன் படம்:

அதன்படி இந்தப் படத்தில் ஞாபக மறதி உள்ள வடிவேலு ஒரு எதிர்பாராத சூழலில் நடிகர் ஃபகத் பாசிலை சந்திக்கிறார். இவர்கள் இருவரும் ஒரு சாலை பயணத்தை மேற்கொள்கிறார்கள். இந்த சூழலில் நடிகர் வடிவேலுவிடம் இருந்து அவரது பணத்தை திருடுவதே ஃபகத் பாசிலின் நோக்கமாக உள்ளது. இதன் காரணமாகவே அவர் வடிவேலு உடன் பயணிக்கிறார். இறுதியில் வடிவேலுவிடம் இருந்து ஃபகத் பாசில் பணத்தை திருடினாரா இல்லையா என்ன நடந்தது என்பதே படத்தின் கதை.

இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றப் பிறகு படம் எப்போது ஓடிடியில் வெளியாகும் என்று ரசிகர்கள் ஆவளுடன் எதிர்பார்த்து காத்திருந்தனர். இந்த நிலையில் படத்தின் ஓடிடி வெளியீடு குறித்த அப்டேட் தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி படம் வருகின்ற 22-ம் தேதி ஆகஸ்ட் மாதம் 2025-ம் ஆண்டு நெட்ஃபிளிக்ஸ் ஓடிடியில் வெளியாக உள்ளது என்று அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. இது ரசிகர்களிடையே தற்போது மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Also Read… எல்லாத்துக்கும் சாண்டி மாஸ்டர்தான் காரணம் – நடிகர் சௌபின் ஷாகிர்!

நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி நிறுவனம் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவு:

Also Read… ஏழாம் அறிவு படம் குறித்து விஜய் சொன்ன கமெண்ட்… கலகலப்பாக கூறிய ஏ.ஆர்.முருகதாஸ்!