சூர்யா 46 படத்தில் அனில் கபூரா? வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த வெங்கி அட்லூரி
Director Venky Atluri: லக்கி பாஸ்கர் படத்தின் வெற்றிக்கு பிறகு இயக்குநர் வெங்கி அட்லூரி எந்த நடிகரை வைத்து படம் இயக்க உள்ளார் என்று ரசிகர்கள் அதிகம் எதிர்பார்த்து காத்திருந்தனர். அவர்களை உற்சாகத்தில் ஆழ்த்தும் விதமாக சூர்யாவின் 46-வது படத்தை வெங்கி அட்லூரி இயக்க உள்ளதாக அறிவிப்பு வெளியானது.

நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான வாத்தி படத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களிடையே அறிமுகம் ஆனவர் இயக்குநர் வெங்கி அட்லூரி (Director Venky Atluri). இதனைத் தொடர்ந்து இவரது இயக்கத்தில் வெளியான லக்கி பாஸ்கர் படம் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது. நடிகர் துல்கர் சல்மான் நாயகனாக நடித்த இந்தப் படம் தெலுங்கு சினிமாவில் மட்டும் இன்றி தமிழ், மலையாளம் கன்னடம் மற்றும் இந்தி என பான் இந்திய அளவில் ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது. மேலும் நெட்ஃபிளிக்ஸ் ஓடிடியில் வெளியான இந்த லக்கி பாஸ்கர் படம் தென்னிந்திய மொழிகளில் எந்தப் படமும் படைக்காத சாதனையை படைத்தது. அது என்ன என்றால் அதிக நாட்களுக்கு இந்தப் படம் ஓடிடியில் ட்ரெண்டிங்கில் இருந்தது குறிப்பிடத்தது.
இந்தப் படத்தை தொடர்ந்து இயக்குநர் வெங்கி அட்லூரி எந்த நடிகருடன் கூட்டணி வைப்பார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து காத்து இருந்தனர். அப்போது ரெட்ரோ படத்தின் வெளியீட்டிற்கு முன்னதாக ஹைதராபாத்திற்கு புரமோஷன் பணிக்காக சென்றபோது நடிகர் சூர்யா இயக்குநர் வெங்கி அட்லூரி உடன் கூட்டணி அமைப்பது குறித்து அப்டேட் கொடுத்தார். அதனைத் தொடர்ந்து படக்குழு இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டது. மேலும் படத்தின் படப்பிடிப்பையும் பூஜையுடன் தொடங்கினர்.
சூர்யா 46 படத்தில் அனிமல் பட நடிகர் அனில் கபூர் நடிக்கவில்லை:
இந்தப் படத்தில் நடிகர் சூர்யா உடன் இணைந்து நடிகை மமிதா பைஜு, ரவீனா தண்டன் மற்றும் ராதிகா சரத்குமார் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்து வருகின்றனர். மேலும் இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். இவர் மூன்றாவது முறையாக தொடர்ந்து வெங்கி அட்லூரியின் படத்திற்கு இசையமைக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
படம் குறித்து அதிகாரப்பூர்வ அப்டேட்டை படக்குழு தொடர்ந்து வெளியிட்டு வருகின்றது. ஆனால் சில தகவல்களும் தொடர்ந்து சினிமா வட்டாரங்களில் வைரலாகி வருகின்றது. அந்த வரிசையில் அனிமல் படத்தில் நடித்த பிரபல பாலிவுட் நடிகர் அனில் கபூர் இந்தப் படத்தில் நடிப்பதாக தகவல் ஒன்று சினிமா வட்டாரங்களில் வைரலாகி வந்தது. ஆனால் அது உண்மை இல்லை என்று இயக்குநர் வெங்கி அட்லூரி சமீபத்திய பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். இது தற்போது கவனத்தை ஈர்த்து வருகின்றது.
சூர்யா 46 படக்குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:
#Suriya46 💥💥@Suriya_offl – #VenkyAtluri – @Vamsi84 – @SitharaEnts ❤️🔥❤️🔥 🎥 pic.twitter.com/CD7XEkRz6h
— Sithara Entertainments (@SitharaEnts) April 26, 2025
Also Read… 3 ஆண்டுகளை நிறைவு செய்த தனுஷின் திருச்சிற்றம்பலம் படத்தை எந்த ஓடிடியில் பார்க்கலாம்?