ஜீ 5 ஓடிடியில் காணக் கிடைக்கும் மாமன் படம் எப்படி இருக்கு? விமர்சனம் இதோ!
Maaman Movie OTT Review: நடிகர் சூரி நாயகனாக நடித்து திரையரங்குகளில் வெளியான படம் மாமன். திரையரங்குகளில் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்ற மாமன் படம் தற்போது ஜீ 5 ஓடிடியில் காணக் கிடைக்கின்றது. இந்த நிலையில் இந்தப் படம் எப்படி இருக்கிறது என்பதை தற்போது பார்க்கலாம்.

தமிழ் சினிமாவில் பெயரிடப்படாத கதப்பாத்திரங்களில் நடித்து பிறகு காமெடியனாக கலக்கி தற்போது நாயனகான வெற்றி நடைப் போடுகிறார் நடிகர் சூரி Actor Soori). இவர் நாயகனாக நடிக்கத் தொடங்கியதில் இருந்து தற்போது வரை இவரது நடிப்பில் வெளியான படங்கள் அனைத்தும் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்து வருவது குறிப்பிடத்தக்கது. நாயகனாக நடிக்கத் தொடங்கியதில் இருந்து தொடர்ந்து சீரியசாக நடித்த நடிகர் சூரி இறுதியாக திரையரங்குகளில் வெளியனா மாமன் (Maaman Movie) படத்தின் மூலம் அந்த தொடர்ச்சியை ப்ரேக் செய்துள்ளார். அதன்படி முழுக்க முழுக்க காமெடி மற்றும் செண்டிமெண்டை மையமாக வைத்து வெளியனா மாமன் படம் திரையரங்குகளில் ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் மாபெரும் வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.
இயக்குநர் பாண்டிராஜ் இந்தப் படத்தை இயக்கி இருந்த நிலையில் படத்திற்கு நடிகர் சூரி திரைக்கதை எழுதி இருந்தார். இதன் மூலம் சினிமாவில் தற்போது திரைக்கதை ஆசிரியராக உருவெடுத்துள்ளார் சூரி. இந்தப் படத்தில் நடிகர் சூரி நாயகனாக நடித்து இருந்த நிலையில் நடிகை ஐஸ்வர்ய லட்சுமி நாயகியாக நடித்து இருந்தார். இவர்களுடன் இணைந்து நடிகர்கள் ராஜ் கிரண், சுவாசிகா, பாபா பாஸ்கர், ஜெயபிரகாஷ், பால சரவணன், கீதா கைலாசம், விஜி சந்திரசேகர், கலைவாணி பாஸ்கர் என பலர் இந்தப் படத்தில் நடித்து இருந்தனர்.




சூரி நடிப்பில் ஹிட் அடித்த மாமன் படத்தின் கதை என்ன?
கீதா கைலாசத்தின் கணவர் உயிரிழந்த நிலையில் அவர் தனது மகன் சூரி மற்றும் மகள் ஸ்வாசிகா உடன் வாழ்த்து வருகிறார். சுவாஸிகா சூரியின் அக்காவாக இந்தப் படத்தில் நடித்துள்ளார். சுவாஸிகாவின் கணவர் பாபா பாஸ்கர் ஹோட்டல் ஒன்றை நடத்தி வருகிறார். இவர்களுக்கு திருமணம் ஆகி 10 ஆண்டுகள் ஆகியும் குழந்தை இல்லாததால் அவர்களின் உறவினர்கள் அனைவரும் சுவாஸிகாவின் காதுபடவே அவரை தவறாக பேசுகிறார்கள்.
அதன்படி படத்தின் முதல் காட்சியிலேயே குடும்ப நிகழ்ச்சி ஒன்றில் பாபா பாஸ்கரின் அம்மா சுவாஸிகா குறித்தும் அவரது தம்பி சூரி குறித்தும் தவறாக பேசுகிறார். அப்போது அதைக் கேட்டு அவரிடம் சண்டை போடுவதற்காக சுவாஸிகா வரும்போது அவருக்கு வாந்தி வந்துவிடுகிறது. இதனைப் பார்த்த உறவினர்கள் அவர் கர்பமாக இருப்பதை உறுதி செய்கின்றனர்.
வீட்டிலேயே பிரகனென்ஸி கிட் வைத்து செக் பன்னிய சுவாஸிகாவிற்கு தான் கர்ப்பமாக இருப்பது தெரியவருகிறது. இந்த நிலையில் தனது அம்மா மற்றும் தம்பியுடன் மருத்துவமனை சென்றபோது அங்கு சீனியர் டாக்டர் சரியாக செக் செய்யாமல் ஃபேக் பிரக்னன்சி என்கிறார். ஆனால் அங்கு வேலை செய்யும் ஐஸ்வர்யா லட்சுமி அவர்களுக்கு தைரியம் சொல்லி மீண்டும் செக் செய்கிறார் அதில் ஸ்வாசிகா கர்பமாக இருப்பது உறுதியாகிறது.
Also Read… Rajinikanth: 50 வருட சினிமா பயணம்.. நன்றி தெரிவித்து ரஜினிகாந்த் அறிக்கை!
இதனைத் தொடர்ந்து அடிக்கடி அக்காவின் செக்கப்பிற்காக மருத்துவமனை செல்லும் சூரி டாக்டர் ஐஸ்வர்யா லட்சுமி உடன் காதலில் விழுகிறார். இவர்கள் இருவரும் திருமணம் செய்துக்கொள்கினறன. அதே நேரத்தில் பல ஆண்டுகளுக்கு பிறகு பிறந்த அக்கா மகன் மீது உயிராக இருக்கும் சூரிக்கு திருமணத்திற்கு பிறகு வாழ்க்கையை எப்படி கொண்டு செல்வது என்று தெரியாமல் குழப்பத்தில் ஆழ்கிறார். எப்போதும் மாமா உடன் இருக்க நினைக்கும் ஸ்வாசிகாவின் மகனால் சூரி மற்றும் ஐஸ்வர்யா இடையே பிரச்னை ஏற்பட்டு பிரிக்கின்றனர். இறுதியில் அவர்கள் எப்படி இணைந்தார்கள் என்பதே படத்தின் கதை. இந்தப் படம் கடந்த 8-ம் தேதி ஆகஸ்ட் மாதம் 2025-ம் ஆண்டு முதல் ஜீ 5 ஓடிடியில் காணக் கிடைக்கின்றது.
ஜீ 5 ஓடிடி நிறுவனம் வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:
மாமன் வந்தாச்சு உங்கள் இல்லம் தேடி🥰
Watch the biggest family blockbuster, #Maaman, now streaming on ZEE5 @sooriofficial @p_santh @HeshamAWmusic @kumarkarupannan @larkstudios1 @AishuL #Swasika #RajKiran #JayaPrakash @Bala_actor #BabaBaskar @ActorViji @nikhila_sankar_… pic.twitter.com/dDp25YhaCc
— ZEE5 Tamil (@ZEE5Tamil) August 7, 2025
Also Read… AR Murugadoss : மதராஸி படத்தின் கதை இதுதான்.. ஏ.ஆர். முருகதாஸ் கொடுத்த விளக்கம்!