Soori : வெற்றிமாறன் சொன்ன அந்த விஷயம்.. காமெடி கேரக்டர் குறித்து சூரி பேச்சு!
Soori Talk About Vetrimaaran : தமிழ் சினிமாவில் வளர்ந்துவரும் நட்சத்திர பிரபலங்களில் ஒருவர்தான் சூரி. இவர் சினிமாவில் முன்னணி கதாநாயகனாக நடித்து வருகிறார். இந்நிலையில், முன்னதை பேசிய நேர்காணல் ஒன்றில், வெற்றிமாறன் தன்னிடம் சொன்னது அப்படியே நடந்த விஷயம் என்ன என்பதைப் பற்றி ஓபனாக பேசியுள்ளார்.

நடிகர் சூரி (Soori) சினிமாவில் அங்கரிக்கக் அங்கீகரிக்கபடாத கதாபாத்திரங்களில் நடித்து வந்தார். அதன் பின் முன்னணி பிரபலங்களின் படங்களில், துணை வேடங்கள் மற்றும் நகைச்சுவை நடிகராகத் தனது வாழ்க்கையைத் தொடங்கினார். இவர் தளபதி விஜய் (Thalapathy Vijay) முதல் அஜித் குமார் (Ajith Kumar) வரை பல முன்னணி நடிகர்களின் படங்களில் நகைச்சுவை கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார். இதைத் தொடர்ந்து இயக்குநர் வெற்றிமாறனின் (Vetrimaaran) படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். கடந்த 2023ம் ஆண்டு வெளியான விடுதலை (Viduthalai) என்ற படத்தின் மூலம் தமிழில் கதாநாயகனாக அறிமுகமானார் நடிகர் சூரி. இந்த படத்தில் நடிகை பவானி ஸ்ரீ நடித்திருந்தார். இந்த படமானது சூரியின் அருகம் திரைப்படம் என்றாலும் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்று சூப்பர் ஹிட் படமாக அமைந்திருந்தது. இந்த படத்தைத் தொடர்ந்துதான் நடிகர் சூரி தமிழில் கதாநாயகனாக அடுத்தடுத்த படங்களில் நடிக்கத் தொடங்கினார்.
இவரின் நடிப்பில் இறுதியாக வெளியான திரைப்படம் மாமன் (Maaman). இயக்குநர் பிரசாந்த் பாண்டியராஜ் இயக்கத்தில் வெளியான இப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது. இந்த படம் சூப்பர் ஹிட் படமாகச் சூரிக்கு அமைந்திருந்தது என்றே கூறலாம். இந்நிலையில், நடிகர் சூரி முன்னதாக நேர்காணல் ஒன்றில், வெற்றிமாறன் இனி உன்னை யாரும் நகைச்சுவை நடிகராக நடிக்கக் கூப்பிடமாட்டார்கள் எனக் கூறியது இப்படியே நடந்தது என்பதைப் பற்றிப் பேசியுள்ளார்.




இதையும் படிங்க :நடிகர் சித்தார்த் எனது படத்தில் நடிக்க மறுத்தார் – இயக்குநர் சேகர் கம்முலா ஓபன் டாக்
வெற்றிமாறனைப் பற்றிப் பேசிய சூரி :
அந்த நேர்காணலில் இயக்குநர் வெற்றிமாறனைப் பற்றி பேசிய சூரி, ” வெற்றிமாறன் அண்ணன் என்னிடம் சொன்னாரு, சூரி ஹீரோவாக மட்டுமே இருந்து விடாதீர்கள், ஒரு வருடத்திற்கு காமெடியன் மற்றும் கதாநாயகனாகவும் நடிங்க என என்னிடம் கூறினார். விடுதலை படத்தின் ரிலீசிற்கு பின் அவரே என்னிடம் சொன்னாரு, ” வாய்ப்பில்லை சூரி அப்டினு சொன்னாரு”, பின் இனி உங்களை காமெடிக்கு யாரும் கூப்பிடமாட்டார்கள் என நானா நினைக்கிறேன் என வெற்றிமாறன் கூறினார். அவர் சொன்னது போல ஒரு இயக்குநர்கள் கூட என்னை காமெடி படத்தில் நடிக்க கூப்பிடவில்லை” எனச் சூரி ஓபனாக பேசியிருந்தார்.
இதையும் படிங்க :ஜெய் பீம் படம் குறித்து மனம் திறந்து பேசிய நடிகை லிஜோமோல் ஜோஸ்!
நடிகர் சூரியின் லேட்டஸ்ட் இன்ஸ்டாகிடாம் பதிவு :
View this post on Instagram
சூரியின் புதிய திரைப்படம் :
நடிகர் சூரி மாமன் படத்தை அடுத்தாக, அறிமுக இயக்குநர் புகழேந்தி மதிமாறன் இயக்கத்தில் புதிய படத்தில் இணைந்துள்ளார். இந்த படத்தய் வெற்றிமாறன் தயாரிக்கும் நிலையில், மண்டாடி என படக்குழு டைட்டில் வைத்துள்ளது. இந்த படத்தில் சூரி கதாநாயகன் மற்றும் வில்லனாகவும் நடித்துவருகிறார். இந்த படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், வரும் 2026ம் ஆண்டு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.