Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

7 ஆண்டுகளை நிறைவு செய்தது நயன்தாராவின் கோலமாவு கோகிலா படம்!

Kolamaavu Kokila: இயக்குநர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் நடிகை நயன்தாரா நாயகியாக நடித்து திரையரங்குகளில் வெளியான படம் கோலமாவு கோகிலா. டார்க் காமெடி க்ரைம் ஜானரில் வெளியான கோலமாவு கோகிலா படம் திரையரங்குகளில் ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.

7 ஆண்டுகளை நிறைவு செய்தது நயன்தாராவின் கோலமாவு கோகிலா படம்!
கோலமாவு கோகிலாImage Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 17 Aug 2025 19:10 PM

தமிழ் சினிமாவில் தற்போது முன்னணி இயக்குநர்களின் பட்டியலில் இருப்பவர் இயக்குநர் நெல்சன் திலீப் குமார் (Director Nelson Dilipkumar). தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்களான நடிகர்கள் விஜய் மற்றும் ரஜினிகாந்தின் படங்களை இயக்கி டாப் இயக்குநர்களின் பட்டியளில் இருக்கிறார் இயக்குநர் நெல்சன் திலீப் குமார். இந்த நிலையில் இவர் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகம் ஆன கோலமாவு கோகிலா படம் இன்றுடன் 7 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது. அதன்படி கடந்த ஆக்ஸ்ட் மாதம் 17-ம் தேதி 2018-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியான படம் கோலமாவு கோகிலா. இந்தப் படத்தில் நடிகை நயன்தாரா முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்து இருந்தார். இவருடன் இணைந்து நடிகர்கள் சரண்யா பொன்வண்ணன், சரவணன், யோகி பாபு, ஜாக்குலின் லிடியா, ஆர்.எஸ். சிவாஜி, ஹரீஷ் பெராடி, சார்லஸ் வினோத், ராஜேந்திரன், சீனு மோகன், அன்பு தாசன், அறந்தாங்கி நிஷா, வடிவேல் பாலாஜி, ரெடின் கிங்ஸ்லி, அருண் அலெக்சாண்டர், பில்லி முரளி என பலர் இந்தப் படத்தில் நடித்துள்ளனர்.

மேலும் இந்தப் படத்தை பிரபல தயாரிப்பு நிறுவனமான லைகா புரொடக்ஷன்ஸ் சார்பில் தயாரிப்பாளர் சுபாஸ்கரன் அல்லிராஜா தயாரித்து இருந்தார். இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்திரன் இசையமைத்து இருந்தார். படம் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றது போல படத்தில் வந்த பாடல்களும் நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.

7 ஆண்டுகளை நிறைவு செய்த கோலமாவு கோகிலா:

நடிகை நயன்தாரா தற்போது தொடர்ந்து நாயகியை மையமாக வைத்து உருவாகும் படங்களில் நடித்து வருகிறார். அதற்கு ஆரம்ப புள்ளி இந்த கோலமாவு கோகிலா என்று கூறலாம். மிடில் கிளாஸ் ஃபேமிலியில் மூத்த மகளாக இருக்கும் நடிகை நயன்தாரா உடல்நலக் குறைவால் இருக்கு பெற்றோர்கள் மற்றும் கல்லூரியில் படிக்கும் தங்கை என மொத்த குடும்ப பொருப்பையும் ஏற்று பார்த்துக்கொள்கிறார்.

இவரை துரத்தி துரத்தி காதலிக்கும் மளிகைக் கடைக்காரராக நடிகர் யோகி பாபு நடித்து இருந்தார். கோலமாவு விற்பனை செய்வது போல நடிகை நயன்தாரா குடும்பத்தினருடன் போதைப் பொருள் விற்பனை செய்கிறார். இந்த நிலையில் சில ரவுடிகளால் நடிகை நயன்தாராவிற்கு பிரச்னை ஏற்படும் போது எதிர்பாராத விதமாக அந்தப் பிரச்னையில் நடிகர் யோகிபாவும் மாட்டிக் கொள்கிறார். அதனைத் தொடர்ந்து என்ன நடந்தது என்பதே படத்தின் கதை. இந்த நிலையில் இந்தப் படம் வெளியாகி தற்போது 7 ஆண்டுகள் நிறைவடைந்ததை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

Also Read… தல என்று அழைக்காதீர்கள் என சொன்ன அஜித் – ஏ.ஆர்.முருகதாஸின் ரியாக்‌ஷன் என்ன?

கோலமாவு கோகிலா படத்தின் ட்ரெய்லர் இதோ:

Also Read… துப்பாக்கி தான் இரண்டாம் பாகம் எடுக்க சரியா இருக்கும் – ஏ.ஆர்.முருகதாஸ் சொன்ன விசயம்