Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Thandakaaranyam : அட்டகத்தி தினேஷ் – கலையரசனின் ‘தண்டகாரண்யம்’ பட ரிலீஸ் அப்டேட்!

Thandakaaranyam Movie Release Update : இயக்குநர் பா. ரஞ்சித் தயாரிப்பில் உருவாகியிருக்கும் படம் தண்டகாரண்யம். இதில் அட்டகத்தி தினேஷ் மற்றும் கலையரசன் இணைந்து நடித்துள்ளனர். இந்நிலையில், இப்படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பை இயக்குநர் பா. ரஞ்சித் வெளியிட்டுள்ளார். இது தற்போது இணையத்தில் வைரலாகிவருகிறது.

Thandakaaranyam : அட்டகத்தி தினேஷ் – கலையரசனின் ‘தண்டகாரண்யம்’ பட ரிலீஸ் அப்டேட்!
தண்டகாரண்யம் படம்Image Source: Social Media
Barath Murugan
Barath Murugan | Published: 17 Aug 2025 18:25 PM

தமிழ் சினிமாவில் பிரபல இயக்குநராகவும், தயாரிப்பாளராகவும் படங்களைத் தயாரித்து வருபவர் பா. ரஞ்சித் (Pa. Ranjith). இவரின் இயக்கத்தில் இறுதியாக தங்கலான் என்ற திரைப்படம் வெளியானது. இதில் சியான் விக்ரம் (Chiyaan Vikram) முன்னணி நாயகனாக நடித்திருந்தார். இதை அடுத்து வேட்டுவம் என்ற படத்தையும் இயக்கி வருகிறார். இவர் படங்களை இயக்குவது மட்டுமில்லாமல் , தயாரித்தும் வருகிறார். இவரின் தயாரிப்பில், இயக்குநர் அதியன் அதிரையின் (Athiyan Athirai) இயக்கத்தில் உருவாகியுள்ள படம் தண்டகாரண்யம் (Thandakaaranyam). இதில் நடிகர்கள் கலையரசன் மற்றும் ஆட்டத்தில் தினேஷ் முன்னணி வேடத்தில் நடித்துள்ளனர். இப்படமானது முற்றிலும் ஆக்ஷ்ன் படமாக உருவாகியுள்ளதாம்.

தற்போது இப்படத்தின் ரிலீஸ் தேதி பற்றிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி நாளை 2025, ஆகஸ்ட் 18 ஆம் தேதி மாலை 6 மணிக்கு இப்படத்தின் , ரிலீஸ் தேதி அறிவிக்கப்படவுள்ளது.  இந்த தகவல் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

இதையும் படிங்க : தளபதி விஜய்யின் ‘லியோ’ வசூலை முந்தியதா ‘கூலி’?… 3 நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?

இயக்குநர் பா. ரஞ்சித் வெளியிட்ட தண்டகாரண்யம் பட ரிலீஸ் அப்டேட் :

இந்த தண்டகாரண்யம் படத்தை அறிமுக இயக்குநர் அதியன் ஆதிரை இயக்கியுள்ளார். இவர் ஏற்கனவே இரண்டாம் உலகப்போரின் கடைசிக் குண்டு என்ற படத்தை இயக்கியுள்ளார். இந்தப் படத்தில் அட்டகத்தி தினேஷ் மற்றும் கலையரசன் முக்கிய வேடத்தில் நடிக்க, ரித்விகா பன்னீர்செல்வம், பாலா சரவணன், சரண்யா ரவிசந்திரன், அருள்தாஸ் மற்றும் ஷபீர் கல்லரக்கல் என பல்வேறு பிரபலங்கள் இணைந்து நடித்துள்ளனர்.

இதையும் படிங்க : பிரமாண்ட இயக்குநர் சங்கருக்கு பிறந்த நாள் வாழ்த்துகள்!

இந்த படத்திற்கு இசையமைப்பாளர் ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்துள்ளார். இவரின் இசையமைப்பில் இப்படத்திலிருந்து, முதல் பாடல் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது. இதை அடுத்ததாக தற்போது இப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பும் வெளியாகவுள்ளது. அதன்படி, இப்படமானது வரும் 2025, செப்டம்பர் மாதத்தில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வேட்டுவம் திரைப்படம் :

நடிகர் அட்டகத்தி தினேஷ் இந்த படத்தை அடுத்து, இயக்குநர் பா. ரஞ்சித்தின் இயக்கத்தில் வேட்டுவம் படத்திலும் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தின் படப்பிடிப்பில்தான், ஸ்டண்ட் மாஸ்டர் ஒருவர் சமீபத்தில் விபத்தில் சிக்கிப் பலியானார். அதை தொடர்ந்து பல நாட்கள் ஷூட்டிங் நிறுத்திவைக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது மீண்டும் தொடங்கி நடைபெற்று வருகிறது. இப்படத்தில் அட்டகத்தி தினேஷுடன் நடிகர் ஆர்யாவும் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார். இப்படமானது 2025ம் ஆண்டு இறுதியில் அல்லது, 2026ம் ஆண்டு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.