Coolie vs Leo : தளபதி விஜய்யின் ‘லியோ’ வசூலை முந்தியதா ‘கூலி’?… 3 நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?
Coolie Movie 3rd Day Collection : இந்த 2025ம் ஆண்டு கோலிவுட் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வந்த திரைப்படம்தான் கூலி. ரஜினிகாந்த்தின் இப்படம் கடந்த 2025, ஆகஸ்ட் 14ம் தேதியில் வெளியாகியிருந்தது. 3 நாட்களில் விஜய்யின் லியோ படத்தின் வசூலை முந்தியதாகக் கூறப்படுகிறது.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் (Rajinikanth) நடிப்பில், தமிழ் சினிமாவில் மிகப் பிரம்மாண்டமாக வெளியான படம் கூலி (Coolie). இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க, இயக்குநர் லோகேஷ் கனகராஜ் (Lokesh Kanagaraj) இயக்கியிருந்தார். இந்த படமானது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான 6வது படமாகும். இப்படத்திற்கு முன் தளபதி விஜய்யின் (Thalapathy Vijay) ) நடிப்பில் லியோ (Leo) என்ற திரைப்படத்தை இயக்கியிருந்தார். இந்த படமானது கடந்த 2023 ஆம் ஆண்டு வெளியாகியிருந்தது. இந்த படமானது வெளியானபோது கலவையான விமர்சனங்களைப் பெற்றிருந்தாலும் , வசூல் ரீதியாக வெற்றிப்படமாக அமைந்ததாக கூறப்படுகிறது. இந்த படத்தை அடுத்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்துடன் இந்த கூலி படத்தில் இணைந்தார் லோகேஷ் கனகராஜ். இந்த படமானது கடந்த 2025, ஆகஸ்ட் 14 ஆம் தேதியில் உலகமெங்கும் வெளியானது.
இதில் ரஜினிகாந்த்துடன் பான் இந்தியப் பிரபலங்கள் பலரும் நடித்திருந்தனர். இந்நிலையில் கூலி படம் வெளியாகி 3 நாட்கள் ஆன நிலையில், மொத்தம் இதுவரை சுமார் ரூ 300 கோடிகளுக்கு மேல் வசூல் செய்துள்ளதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், விஜய்யின் லியோ படத்தின் 5 நாட்கள் வசூலை, கூலி படமானது 3 நாட்களிலேயே முந்தியதாகக் கூறப்படுகிறது. மேலும் இப்படத்தின் முதல் நாள் வசூலும் லியோ படத்தின் வசூலைக் கடந்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், இந்த தகவலானது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.




இதையும் படிங்க : ஒரு வருடத்தை கடந்த மலையாளத்தில் சூப்பர் ஹிட் அடித்த வாழ படம் – 2-ம் பாகத்திற்கான மாஸ் அப்டேட்டை கொடுத்த படக்குழு
கூலி படக்குழு வெளியிட்ட நியூ போஸ்டர் :
Unstoppable roar in theatres across the world🔥😎#Coolie ruling in theatres worldwide🌟@rajinikanth @Dir_Lokesh @anirudhofficial #AamirKhan @iamnagarjuna @nimmaupendra #SathyaRaj #SoubinShahir @shrutihaasan @hegdepooja @Reba_Monica @monishablessyb @anbariv @girishganges… pic.twitter.com/3WdKGiH9vQ
— Sun Pictures (@sunpictures) August 17, 2025
லியோ படத்தின் வசூலை முந்திய கூலி?
கடந்த 2023 ஆம் ஆண்டு வெளியான லியோ படமானது முதல் நாளில் சுமார் ரூ 148. 5 கோடிகளுக்கு மேல் வசூல் செய்திருந்தது. அந்த வகையில், இந்த 2025 ஆம் ஆண்டு லோகேஷின் இயக்கத்தில் வெளியான கூலி படம் முதல் நாளிலே சுமார் ரூ 151 கோடிகளுக்கு மேல் வசூல் செய்துள்ளது. இந்நிலையில், லியோ படத்தை முதல் நாளிலே முந்தியது எனக் குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், லியோ படமானது 5 நாட்களில் சுமார் ரூ 300 கோடிகளுக்கு மேல் வசூல் செய்திருந்ததாகக் கூறப்பட்டநிலையில், கூலி படமானது அதை 3 நாட்களிலே முந்தியிருக்கிறது.
இதையும் படிங்க : சேகர் கம்முலா படத்திற்காக 3-வது முறையாக இணையும் நானி – சாய்பல்லவி கூட்டணி? வைரலாகும் தகவல்
இந்நிலையில், ரஜினிகாந்தின் இந்த கூலி படத்துடன், வார் 2 திரைப்படமும் வெளியாகியிருந்தது. ஆனால் இப்படமானது கலவையான விமர்சனங்களைப் பெற்று இதுவரை சுமார் ரூ 200 கோடிகளுக்கு மேல் வசூல் செய்துள்ளதாம். இந்நிலையில், இந்த வசூல் போட்டியில், தற்போது, இயக்குநர் லோகேஷ் கனகராஜின் கூலி படமானது முன்னிலை வகிப்பதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், சுதந்திர தின தொடர் விடுமுறையை ஒட்டி, மொத்தமாக ரூ 350 கோடிகளுக்கு மேல் வசூல் செய்வதற்கு அதிக வாய்ப்புகள் இருப்பதாகக் கூறப்படுகிறது.