ஒரு வருடத்தை கடந்த மலையாளத்தில் சூப்பர் ஹிட் அடித்த வாழ படம் – 2-ம் பாகத்திற்கான மாஸ் அப்டேட்டை கொடுத்த படக்குழு
Vaazha – Biopic of a Billion Boys 2: மலையாள சினிமாவில் கடந்த 2024-ம் ஆண்டு வெளியாகி ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றப் படம் வாழ. இந்தப் படம் வெளியாகி ஓர் ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில் படத்தின் இரண்டாம் பாகம் குறித்து அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அது ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்று வருகின்றது.

கடந்த 2024-ம் ஆண்டு மலையாள சினிமாவில் பலப் படங்கள் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது குறிப்பிடத்தக்கது. பெரிய பட்ஜெட் படங்கள் மற்றும் சிரிய பட்ஜெட் படங்கள் என எந்த பாகுபாடும் இன்றி பலப் படங்கள் மலையாளத்தில் நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்தப் படங்கள் அனைத்தும் மலையாள சினிமா மட்டும் இன்றி தென்னிந்திய மொழி சினிமாவிலும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. அந்த வரிசையில் இடம் பிடித்தப் படம் தான் வாழ (Vaazha – Biopic of a Billion Boys). இந்தப் படம் மலையாள சினிமாவில் கடந்த ஆகஸ்ட் மாதம் 15-ம் தேதி 2024-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாகி விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.
இந்தப் படத்தை இயக்குநர் ஆனந்த் மேனன் இயக்கி இருந்த நிலையில் விபின் தான் திரைக்கதை எழுதி இருந்தார். மேலும் இந்தப் படத்தை WBTS புரொடக்ஷன்ஸ், இமேஜின் சினிமாஸ், சிக்னேச்சர் ஸ்டுடியோஸ், ஐகான் ஸ்டுடியோஸ் ஆகிய தயாரிப்பு நிறுவனங்கள் கீழ் தயாரிப்பாளர்கள் விபின் தாஸ், ஹாரிஸ் டெசோம், பி.பி. அனிஷ், ஆதர்ஷ் நாராயண் ஆகியோர் இணைந்து தயாரித்து இருந்தது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்தப் படத்தில் நடிகர்கள் சிஜு சன்னி, அமித் மோகன், ஜோமன் ஜோதிர், அனுராஜ் ஓ. பி, அன்ஷித் அனு, சாஃப், பசில் ஜோசப், ஜெகதீஷ், அஸீஸ் நெடுமங்காடு, கோட்டயம் நசீர், நோபி மார்கோஸ், அருண்சோல், ஜிபின் கோபிநாத், ஸ்மினு சிஜோ, பிரியா ஸ்ரீஜித், மீனாட்சி உன்னிகிருஷ்ணன், ஸ்ருதி மணிகண்டன், ஹாஷிர், கௌரி சங்கர் என பலர் இந்தப் படத்தில் நடித்து இருந்தனர்.




சூப்பர் ஹிட் அடித்த வாழ படத்தின் கதை என்ன?
அதன்படி கேரளாவில் உள்ள ஒரு கிராமத்தில் 5 இளைஞர்கள் சிறு வயதில் இருந்தே ஒன்றாக படித்து வளர்கிறார்கள். இவர்களின் வாழ்க்கையை சுற்றியே இந்தப் படம் நகர்கிறது. இவர்கள் வாழ்க்கையில் சிறு வயதில் இருந்து என்ன எல்லாம் நடந்தது என்பதே படத்தின் கதை. இவர்கள் பள்ளி படிக்கும் போது இருந்தே என்ன பிரச்னைகள் எல்லாம் கொண்டு வருகிறார்கள் இதனால் இவர்களின் பெற்றோரிடம் எப்படி வசவு வாங்குகிறார்கள் என்பதை மையமாக வைத்து இயக்குநர் இந்தப் படத்தை காமெடியாக இயக்கி இருந்தார்.
இந்தப் படதில் இறுதியாக அந்த இளைஞர்களின் வாழ்க்கை என்ன ஆனது என்பதே படத்தின் கதை. இந்தப் படம் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றதை தொடர்ந்து இந்தப் படத்தின் இரண்டாம் பாகம் எப்போது வெளியாகும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கும் நிலையில் படக்குழு புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அது தற்போது ரசிகர்களிடையே வைரலாகி வருகின்றது.
Also Read… த்ரிஷாவின் சினிமா வளர்ச்சி குறித்து பெருமையாக பேசிய சிம்ரன்!
வாழ 2 குறித்து படக்குழு வெளியிட்டுள்ள இன்ஸ்டாகிராம் பதிவு:
View this post on Instagram
Also Read… சிவகார்த்திகேயனுக்கு ஒரு வித்தியாசமான கதாபாத்திரப் படமாக இருக்கும் – வெங்கட் பிரபு கொடுத்த அப்டேட்!