Nagarjuna : கூலி படத்தில் வில்லனாக மிரட்டிய நாகார்ஜுனா..! தமிழ் ரசிகர்கள் உற்சாக வரவேற்பு
Nagarjunas Coolie Movie : தென்னிந்திய சினிமாவில், பிரபல நடிகர்களில் ஒருவராக இருந்து வந்தவர் நாகார்ஜுனா. இவர் சமீபத்தில் வெளியான கூலி படத்தில் வில்லனாக நடித்திருந்தார். இந்நிலையில், மிரட்டல் வில்லனாக அவரது நடித்து தமிழ் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

நடிகர் நாகார்ஜுனா (Nagarjuna) தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருந்து வருகிறார். தமிழ், இந்தி மற்றும் தெலுங்கு போன்ற மொழிகளிலும் முன்னணி வேடத்தில் நடித்துள்ளார். இவர் சமீபத்தில் நடிகர் தனுஷின் (Dhanush) குபேரா (Kuberaa) படத்தில் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார். அந்தப் படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இதனையடுத்து இவர் வில்லனாக களமிறங்கியிருக்கும் படம் தான் கூலி (Coolie). சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் (Rajinikanth) கூலி படத்தில் மிரட்டல் வில்லனாக நடித்து அசத்தியிருந்தார். குறிப்பாக இவரது நடிப்பு தமிழ் ரசிகர்களிடையே இவரது நடிப்பு நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
இந்த கூலி படத்தில் சைமன் (Simon) என்ற கதாபாத்திரத்தில் நடித்து, ஒட்டுமொத்த இந்தியாவையும் திரும்பிப் பார்க்கவைத்திருக்கிறார் நாகார்ஜுனா. அவரது கதாப்பாத்திரத்துக்கு விமர்சகர்களிடையேயும் ரசிகர்களிடையேயும் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. இந்த கூலி படமானது வெளியாகி 4 நாட்களைக் கடந்திருக்கும் நிலையில், இதுவரை மொத்தமாக சுமார் ரூ 400 கோடிகளுக்கு மேல் வசூல் செய்திருப்பதாகக் கூறப்படுகிறது.




இதையும் படிங்க : நடிகை சுவாசிகா குறித்து புகழ்ந்து பேசிய லப்பர் பந்து பட இயக்குநர்!
கூலி படக்குழு வெளியிட்ட புதிய அறிவிப்பு
The Reign continues 😎 #Coolie#Coolie ruling in theatres worldwide🌟@rajinikanth @Dir_Lokesh @anirudhofficial #AamirKhan @iamnagarjuna @nimmaupendra #SathyaRaj #SoubinShahir @shrutihaasan @hegdepooja @Reba_Monica @monishablessyb @anbariv @girishganges @philoedit @ArtSathees… pic.twitter.com/7MngxXYpZP
— Sun Pictures (@sunpictures) August 18, 2025
கூலியில் சைமனாக அசத்திய நாகார்ஜுனா
இந்த கூலி படத்தில் நடிகர் நாகார்ஜுனா, சைமன் என்ற வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்த கதாபாத்திரமானது கூலி படத்துக்கு கூடுதல் பலமாக அமைந்திருந்தது என்றே கூறலாம். இந்த படத்தில் ஐ அம் டேஞ்சர் என்ற பாடலுக்கு, நாகார்ஜுனாவின் ஸ்டைலான நடிப்பைப் பார்த்து ஒட்டுமொத்த திரையரங்கையுமே அதிர்ந்தது. குறிப்பாக கூலி படத்தின் இரண்டாம் பாதியில் நாகார்ஜுனாவின் கதாபாத்திரத்தின் தாக்கம் அதிகமாக இருந்தது. படத்தில் முக்கிய வில்லனாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்துக்கு எதிராக சிறப்பான பங்களிப்பை வழங்கியிருந்தார்.
இதையும் படிங்க : தமிழ் படங்கள் ரூ.1000 கோடிகள் வசூலிக்காததற்குக் காரணம் இதுதான்- ஏ.ஆர். முருகதாஸ் பேச்சு!
1980கள் முதல் தற்போது வரை திரைப்படங்களிலும் தனது சிறப்பான நடிப்பை வெளிக்காட்டி ஒட்டுமொத்த ரசிகர்களையும் தனது வசம் வைத்திருக்கிறார். அந்த வகையில் இந்த கூலி படத்தில் நடிகர் நாகார்ஜுனாவின் கதாபாத்திரம், ஒட்டுமொத்த தமிழ் ரசிகர்களின் மத்தியிலும் வரவேற்பைப் பெற்றது. இதற்கான முக்கிய காரணமாக இருப்பது இயக்குநர் லோகேஷ் கனகராஜ்தான். அவரின் கதாபாத்திர வடிவமைப்பு இப்படத்திற்கு, மேலும் சிறப்பு சேர்த்திருக்கிறது. இதன் மூலம் தற்போது மீண்டும் நடிகர் நாகார்ஜுனா, தமிழ் மக்களிடையே பிரபலமாகியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.