Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

அல்லு அர்ஜுன் – அட்லீயின் படத்தில் இணையும் தமிழ் பிரபலங்கள்.. கேமியோ ரோலில் அந்த நடிகரா?

A06x AA22 Movie Update : தமிழ் சினிமாவில் பிரபல இயக்குநர்களில் ஒருவராக திகழ்பவர்தான் அட்லீ. அந்த வகையில் அட்லீ மற்றும் அல்லு அர்ஜுன் கூட்டணியில் உருவாகி வரும் படத்தில், பிரபல தமிழ் நடிகர் ஒருவர் சிறப்பு வேடத்தில் நடிக்க உள்ளதாகக் கூறப்படுகிறது.

அல்லு அர்ஜுன் – அட்லீயின் படத்தில் இணையும் தமிழ் பிரபலங்கள்.. கேமியோ ரோலில் அந்த நடிகரா?
அல்லு அர்ஜுன் மற்றும் அட்லீImage Source: X
Barath Murugan
Barath Murugan | Published: 21 Aug 2025 15:25 PM IST

இந்திய சினிமாவில் பிரபல இயக்குநர்களில் ஒருவர் அட்லீ (Atlee). இவர் இயக்குநர் ஷங்கரிடம் உதவி இயக்குநராக பணியாற்றிய இவர், தமிழில் ராஜா ராணி (Rajaa Rani) என்ற படத்தை இயக்கி மக்களிடையே பிரபலமானார். அதைத் தொடர்ந்து தளபதி விஜய் (Thalapathy Vijay) நடிப்பில் தெறி (Theri) என்ற படத்தை இயக்கி சூப்பர் ஹிட் கொடுத்தார். தொடர்ந்து மெர்சல் மற்றும் பிகில் என அடுத்தடுத்த படங்களையும் இயக்கி ஹிட் கொடுத்திருக்கிறார். இதனைத் தொடர்ந்த பாலிவுட் பக்கம் சென்ற இவர், நடிகர் ஷாருக்கானை (Shahrukh Khan) வைத்து ஜவான் (Jawan) என்ற படத்தை இயக்கியிருந்தார். இப்படமானது சுமார் ரூ 1000 கோடிக்கும் மேல் வசூல் செய்து சூப்பர் ஹிட்டாகியிருந்தது. இந்த வெற்றியை அடுத்து பான் இந்திய நடிகரான அல்லு அர்ஜுனின் (Allu Arjun) நடிப்பிலும் புதிய படத்தில் இணைந்துள்ளார்.

இப்படமானது பான் இந்தியப் படமாக உருவாகிவரும் நிலையில்,முன்னணி கதாநாயகியாக தீபிகா படுகோன் நடித்து வருகிறார். இந்நிலையில், இந்த திரைப்படத்தில் தமிழ் நடிகர் ஒருவர் சிறப்பு வேடத்தில் நடிக்கவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகி வருகிறது. அந்த நடிகர் வேறு யாருமில்லை, நடிகர் விஜய் சேதுபதிதான். இவர் அட்லீயின் ஜவான் படத்தில் முக்கிய வில்லனாக நடித்தது குறிப்பிடத்தக்கது. இதைத் தொடர்ந்து மீண்டும் அட்லீ மற்றும் அல்லு அர்ஜுனின் படத்தில் நடிக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது.

இதையும் படிங்க : இணையத்தில் கவனம் பெறும் ஜெயிலர் 2 படம் குறித்த முக்கிய தகவல்

அல்லு அர்ஜுன் வெளியிட்ட A06 x AA22 படத்தின் அறிவிப்பு பதிவு :

 

View this post on Instagram

 

A post shared by Sun Pictures (@sunpictures)

A06 x AA22 படத்தில் இணையும் தமிழ் பிரபலங்கள் ;

அல்லு அர்ஜுன் மற்றும் அட்லீயின் கூட்டணியில் உருவாகிவரும் இந்த புதிய படமானது, 2 டைமென்ஷன் கதைக்களத்துடன் உருவாகவுள்ளதாம். இப்படத்தில் நடிகர் அல்லு அர்ஜுன் 3 வேடத்தில் நடிக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது. இப்படத்தில் தீபிகா படுகோன் முன்னணி வேடத்தில் நடிக்கும் நிலையில், அவருடன் நடிகைகள் மிருணாள் தாக்கூர், ஜான்வி கபூர் இணைந்து நடிக்கவுள்ளனர் எனக் கூறப்படுகிறது. மேலும் இப்படத்தில் தமிழ் நடிகர்களான யோகி பாபு மற்றும் நடிகர் விஜய் சேதுபதி போன்ற நடிகர்கள் நடிக்கவுள்ளதாகவும் இணையதளங்களில் தகவல்கள் வெளியாகி வருகிறது.

இதையும் படிங்க : இணையத்தில் வைரலாகும் ஆக்‌ஷன் கிங் அர்ஜுனின் புதுப் பட அப்டேட்!

A06 x AA22 படத்தின் ரிலீஸ் எப்போது :

இந்த புதிய படத்திற்காகத் தமிழ் இளம் இசையமைப்பாளர் சாய் அபயங்கர் இசையமைக்கவுள்ளார். இந்த படத்தின் ஆரம்பக்கட்ட ஷூட்டிங் ஹைதராபாத்தில் நடைபெற்ற நிலையில், அதை தொடர்ந்து அமெரிக்காவில் தொடங்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த படமானது முழுக்க ஹாலிவுட் நடிகர்களைக் கொண்டு மிகப் பிரம்மாண்டமாகத் தயாரிக்கப்பட்டு வருகிறது. இப்படமானது வரும் 2027 ஆம் ஆண்டு வெளியாகும் எனக் கூறப்படுகிறது.