Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Madharaasi : ரத்தம் தெறிக்க தெறிக்க.. ஆக்ஷன் மோடில் சிவகார்த்திகேயன்.. வெளியானது மதராஸி படத்தின் ட்ரெய்லர்!

Madharaasi Movie Trailer : நடிகர் சிவகார்த்திகேயனின் 23வது படமாக உருவாகியிருப்பது மதராஸி. இப்படத்தை இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் இயக்க, ஸ்ரீ லட்சுமி மூவிஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. அதிரடி ஆக்ஷ்ன் கதைக்களத்துடன் உருவாகியிருக்கும் இப்படத்தின் ட்ரெய்லர் தற்போது வெளியாகியிருக்கிறது. இந்த ட்ரெய்லர் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Madharaasi : ரத்தம் தெறிக்க தெறிக்க.. ஆக்ஷன் மோடில் சிவகார்த்திகேயன்.. வெளியானது மதராஸி படத்தின் ட்ரெய்லர்!
மதராஸி திரைப்படம்
Barath Murugan
Barath Murugan | Published: 24 Aug 2025 19:12 PM

இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் (AR. Murugadoss) மற்றும் சிவகார்த்திகேயனின் (Sivakarthikeyan) கூட்டணியில் உருவாகியிருக்கும் படம் மதராஸி (Madharaasi). இப்படத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் அதிரடி ஆக்ஷன் ஹீரோவாக நடித்திருக்கிறார். இதில் அவருக்கு ஜோடியாக பிரபல கன்னட நடிகை ருக்மிணி வசந்த் (Rukmini Vasanth) நடித்திருக்கிறார். இவர் ஏற்கனவே தமிழில் ஏஸ் (Ace) என்ற படத்தில் நடித்திருக்கிறார். இந்த மதராஸி படமானது முழுமையாக ஆக்ஷன் படமாக உருவாகியிருக்கிறது. சிவகார்த்திகேயன் மற்றும் ஏ.ஆர். முருகதாஸ் கூட்டணியில் 2வது உருவாகியிருக்கும் படம் இது. இந்த படமானது கடந்த 2023ம் ஆண்டிலே SK 23 என அறிவிக்கப்பட்டிருந்தது. அதை தொடர்ந்து இப்படத்தின் ஷூட்டிங்கும் நடைபெற்று வந்தது.

இந்தியில் சிக்கந்தர் (Sikandar) மற்றும் தமிழில் மதராஸி என இரு படங்களையும் ஒரே நேரத்தில் இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கியிருந்தார். இந்த மதராஸி படமானது வரும் 2025, செப்டம்பர் 5ம் தேதியில் உலகமெங்கும் வெளியாகிறது. இந்நிலையில், இப்படத்தின் வெளியீட்டை முன்னிட்டு படத்தின் ட்ரெய்லரை படக்குழு வெளியிட்டிருக்கிறது. தற்போது வெளியாகியிருக்கும் இந்த மதராஸி படத்தின் ட்ரெய்லரானது ரசிகர்ளைடையே வரவேற்பை பெற்று வருகிறது.

இதையும் படிங்க : புரட்சி தளபதி விஷாலின் 35வது திரைப்படம்.. அதிரடியாக வெளியான டைட்டில் டீசர்!

மதராஸி படக்குழு வெளியிட்ட அதிரடி ஆக்ஷ்ன் ட்ரெய்லர் பதிவு :

இந்த மதராஸி படத்தில் சிவகார்த்திகேயன் ஹீரோவாக நடிக்க, அவருடன் நடிகர்கள் விக்ராந்த், ருக்மிணி வசந்த், வித்யூத் ஜம்வால், பைஜூ மேனன் மற்றும் பல்வேறு பிரபலங்கள் இணைந்து நடித்துள்ளனர். இந்த படமானது பான் இந்திய மொழி திரைப்படமாக உருவாகியிருக்கிறது. இந்த படத்திற்கு ராக்ஸ்டார் அனிருத் இசையமைத்திருக்கிறார். இவரின் இசையமைப்பில் இப்படத்திலிருந்து இதுவரை சலம்பல மற்றும் வழியிறனே என இரு பாடல்கள் வெளியாகியிருக்கிறது.

இந்நிலையில், இந்த படத்தின் ட்ரெய்லர் இன்று 2025, ஆகஸ்ட் 24ம் தேதியில் மிக பிரம்மாண்டமாக வெளியாகியிருக்கிறது. அமரன் படத்தை அடுத்ததாக சிவகார்த்திகேயனின் நடிப்பில் முழு ஆக்ஷ்ன் திரைப்படமாக இந்த மதராஸி படமானது உருவாகியிருக்கிறது.

இதையும் படிங்க : உலக அளவில் 100 கோடி வசூலித்த தலைவன் தலைவி படம் – உற்சாகத்தில் படக்குழு

மதராஸி படத்தின் முன் பதிவு தொடக்கம் எப்போது :

சிவகார்த்திகேயனின் மதராஸி படமானது வரும் 2025, செப்டம்பர் 5ம் தேதி முதல் உலகமெங்கும் வெளியாகிறது. இப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி போன்ற மொழிகளில் உருவாகியிருக்கிறது. இந்நிலையில், இப்படத்தின் டிக்கெட் முன் பதிவு வரும் 2025, செப்டம்பர் 1ம் தேதி மற்றும் 2ம் தேதியில் தொடங்கும் என கூறப்படுகிறது. மதராஸி படத்தின் ட்ரெய்லர் வெளியானதை தொடர்ந்து, படத்தின் மீது சிவகார்த்திகேயனின் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்புகள் அதிகமாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.