Sivakarthikeyan : மெட்ராஸ் மேட்னி படக்குழுவை நேரில் அழைத்து பாராட்டிய சிவகார்த்திகேயன்.. காளி வெங்கட் நெகிழ்ச்சி பதிவு!
Sivakarthikeyan Praises Madras Matinee Crew : இயக்குநர் கார்த்திகேயன் மணி இயக்கத்தில் கடந்த 2025 ஜூன் மாதத்தில் வெளியான படம் மெட்ராஸ் மேட்னி. இதில் காளி வெங்கட் மற்றும் ரோஷ்ணி ஹரிப்ரியன் முக்கிய வேடத்தில் நடித்திருந்தனர். இப்படக்குழுவை நடிகர் சிவகார்த்திகேயன் நேரில் அழைத்து பாராட்டியுள்ளார்.

தமிழ் சினிமாவில் கடந்த 2025 ஜூன் மாதத்தில் பல படங்கள் வெளியாகியிருந்தது. அதில் மாறுபட்ட கதைக்களத்துடன் வெளியான படம் தான் மெட்ராஸ் மேட்னி (Madras Matinee). இந்த படத்தை அறிமுக இயக்குநர் கார்த்திகேயன் மணி (Karthikeyan Mani) இயக்கியிருந்தார். இந்த படத்தில் முன்னணி வேடத்தில் நடிகர் காளி வெங்கட் (Kaali Venkat) மற்றும் நடிகை ரோஷ்ணி ஹரிப்ரியன் (Roshini Haripriyan) என பல்வேறு பிரபலங்கள் இணைந்து நடித்திருந்தனர். இந்த படமானது சைன்ஸ் பிக்ஷன் கதைக்களத்துடன் வெளியாகியிருந்தது. கடந்த 2025, ஜூலை 6ம் தேதியில் வெளியான இப்படம் ஓடிடியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
இந்நிலையில், இந்த படக்குழுவை நடிகர் சிவகார்த்திகேயன் (Sivakarthikeyan) நேரில் சந்தித்துள்ளார். இந்த மெட்ராஸ் மேட்னி படக்குழுவை நேரில் அழைத்து பாராட்டுகளை தெரிவித்திருக்கிறார். இது குறித்த நெகிழ்ச்சி பதிவை நடிகர் காளி வெங்கட் தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்த தகவலானது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. நடிகர் சிவகார்த்திகேயன் தயாரிப்பில் சமீபத்தில் வெளியான ஹவுஸ்மேட்ஸ் படத்தில் காளி வெங்கட் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.




இதையும் படிங்க : தீபாவளிக்கு ரிலீஸாகும் 2 படங்கள்.. கவனம் பெறும் பிரதீப் ரங்கநாதன்!
நடிகர் காளி வெங்கட் வெளியிட்ட எக்ஸ் பதிவு :
அன்பிற்கினிய @Siva_Kartikeyan அவர்கள் #MadrasMatinee திரைப்படத்தை படக்குழுவினருடன் கலந்துரையாடி பாராட்டியதில் பெருமகிழ்ச்சியடைகிறோம். அன்பும் நன்றியும்😍❤️🙏🏾 pic.twitter.com/qMyI8eOAGV
— Kaali Venkat (@kaaliactor) August 23, 2025
இந்த பதிவில் நடிகர் காளி வெங்கட் , நடிகர் சிவகார்த்திகேயன் பாராட்டியது குறித்தும், அவரை நேரில் சந்தித்த தருணம் குறித்தும் பகிர்ந்துள்ளார். தற்போது அது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.
விஜய் மற்றும் ரஜினிகாந்தை பின் தொடரும் சிவகார்த்திகேயன் :
நடிகர் சிவகார்த்திகேயன் சமீபகாலமாக தனக்கு பிடித்த படங்களைப் பாராட்டி வருகிறார். சிறு சிறு இயக்குநர்களை ஊக்குவிக்கும் விதத்தில், அவர் இதை செய்து வருவதாக கூறப்படுகிறது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நல்ல கதைக்களம் கொண்ட படத்தின் படக்குழுவையும் நேரில் அழைத்து பாராட்டுவது உண்டு. அதை போல தளபதி விஜய்யும் சரி, நடிகர் சூர்யாவும் சரி படக்குழுவினர்களை நேரில் அழைத்து பாராட்டி வருகின்றனர்.
இதையும் படிங்க : மதராஸியில் மாறுபட்ட சிவகார்த்திகேயன்.. ஏ.ஆர். முருகதாஸ் சொன்ன விஷயம்!
அந்த விதத்தில் அவர்களை பின் தொடரும் வகையில், நடிகர் சிவகார்த்திகேயனும் சமீப காலமாக படங்களையும், வளர்ந்து வரும் இயக்குநர்களையும் பாராட்டி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இது அவரின் ரசிகர்கள் மத்தியில் பாராட்டுகளை பெற்றிருந்தாலும், ஒரு சிலர் அவரை விமர்சித்து வருகின்றனர். ஆனால் விமர்சனங்கள் குறித்து கவலைப்படாமல் தொடர்ந்து கலைஞர்களை அவர் பாராட்டி வருகிறார்.