AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

Dude : டியூட் படத்தின் கலக்கல் அப்டேட்.. முதல் சிங்கிள் ரிலீஸ் எப்போது தெரியுமா?

Dude Movie Update : கோலிவுட் சினிமாவில் இயக்குநராக நுழைந்து, தற்போது பிரபல நடிகர்களில் ஒருவராக இருப்பவர் பிரதீப் ரங்கநாதன். இவரின் நடிப்பில் உருவாகிவரும் நான்காவது படம்தான் டியூட். தற்போது இப்படத்திலிருந்து சூப்பர் அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது. இது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Dude : டியூட் படத்தின் கலக்கல் அப்டேட்.. முதல் சிங்கிள் ரிலீஸ் எப்போது தெரியுமா?
டியூட் திரைப்படம் Image Source: X
Barath Murugan
Barath Murugan | Published: 22 Aug 2025 18:33 PM IST

தமிழில் ரவி மோகனின் (Ravi Mohan) கோமாளி என்ற படத்தின் மூலம், இயக்குநராக நுழைந்தவர் பிரதீப் ரங்கநாதன் (Pradeep Ranganathan). இப்படத்தின் வெற்றியை அடுத்ததாக லவ் டுடே என படத்தை இயக்கி, அதில் அவரே ஹீரோவாகவும் அறிமுகமானார். இதை அடுத்து மக்களிடையே பிரபலமான இவர், தொடர்ந்து படங்களில் கதாநாயகனாகவே நடித்து வருகிறார். இவரின் நடிப்பில் இந்த 2024 ஆம் ஆண்டு வெளியான படம் டிராகன் (Dargon). இந்த படமானது இவருக்குச் சிறப்பான வரவேற்பைக் கொடுத்திருந்தது என்றே கூறலாம். இப்படத்தைத் தொடர்ந்து விக்னேஷ் சிவனுடன் லவ் இன்சூரன்ஸ் கம்பெனி மற்றும் அறிமுக இயக்குநர் கீர்த்திஸ்வரனுடன் (Keerthiswaran) டியூட் (Dude) என இரு படங்களில் நடித்து வந்தார்.

தற்போது டியூட் படத்திலிருந்து சூப்பர் அப்டேட் வெளியாகியுள்ளது. அது என்னவென்றால், இப்படத்தின் முதல் பாடல் ரிலீஸ் குறித்து அறிவிப்புகள் வெளியாகியுள்ளது. இப்படத்தின் முதல் பாடலான “ஊரும் பிளட்” (Oorum Blood) என்ற பாடல் வரும் 2025, ஆகஸ்ட் 28 ஆம் தேதியில் வெளியாகும் எனப் படக்குழு அறிவித்துள்ளது. தற்போது வெளியான இந்த அறிவிப்பான ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

இதையும் படிங்க : மூக்குத்தி அம்மன் 2 படத்தைத் தொடர்ந்து கார்த்தியுடன் இணைகிறாரா சுந்தர்.சி?

டியூட் படக்குழு வெளியிட்ட நியூ அப்டேட் பதிவு :

டியுட் படத்தின் ரிலீஸ் எப்போது :

நடிகர் பிரதீப் ரங்கநாதன் முன்னணி கதாநாயகனாக நடித்துவரும் இப்படத்தில், அவருக்கு ஜோடியாக நடிகை மமிதா பைஜூ நடித்து வருகிறார். மேலும் இப்படத்தில் நடிகர் சரத்குமார், ரோகிணி மற்றும் மலையாள நடிகர் ஹிருது ஹூரன் என பல்வேறு பிரபலங்கள் இணைந்து நடித்துள்ளனர். இப்படத்தை, இயக்குநர் சுதா கொங்காராவின் உதவி இயக்குநரான கீர்த்திஸ்வரன் இயக்கி வருகிறார்.

இதையும் படிங்க : கல்யாணி பிரியதர்ஷனின் ‘லோகா’ – வெளியான சூப்பர் அப்டேட் !

மேலும் குட் பேட் அக்லி படத்தைத் தயாரித்திருந்த மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் இப்படத்தைத் தயாரித்து வருகிறது. மேலும் இப்படத்திற்கு இளம் இசையமைப்பாளரான சாய் அபயங்கர் இசையமைத்து வருகிறார். இந்தப் படமானது வரும் 2025 ஆம் ஆண்டு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியாகவுள்ளது.

டியூட் VS லவ் இன்சூரன்ஸ் கம்பெனி

நடிகர் பிரதீப் ரங்கநாதனின் டியூட் திரைப்படம் 2025ம் ஆண்டு தீபாவளிக்கு வெளியாகும் எனப் படக்குழு அறிவித்திருந்தது. மேலும் இவர் இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நடித்திருந்த லவ் இன்சூரன்ஸ் கம்பெனி படமும், இந்த 2025ம் ஆண்டு தீபாவளியை முன்னிட்டு வரும் 2025, அக்டோபர் 17 ஆம் தேதியில் உலகமெங்கும் வெளியாகவுள்ளது. இந்நிலையில், ஒரே நடிகரின் இந்த இரு படங்களும் தீபாவளிக்கு வெளியாகவுள்ள நிலையில், ரசிகர்கள் மத்தியில் குழப்பம் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக இந்த 2 படங்களின் பாக்ஸ் ஆபிஸ் வசூலும் பாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Follow Us