Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

LIK Movie : பிரதீப் ரங்கநாதனின் ‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’ பட டீசர் ரிலீஸ் எப்போது? அறிவிப்பை வெளியிட்ட படக்குழு!

Love Insurance Kompany Movie Teaser Update : தமிழ் சினிமாவில் பிரபல நடிகர்களில் ஒருவராக இருந்து வருபவர் பிரதீப் ரங்கநாதன். இவரின் நடிப்பில் வெளியாகி காத்திருக்கும் படம் லவ் இன்சூரன்ஸ் கம்பெனி. தற்போது இப்படத்தின் முதல் டீசர் வீடியோ ரிலீஸ் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளது.

LIK Movie : பிரதீப் ரங்கநாதனின் ‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’ பட டீசர் ரிலீஸ் எப்போது? அறிவிப்பை வெளியிட்ட படக்குழு!
லவ் இன்சூரன்ஸ் கம்பெனி திரைப்படம் Image Source: X
Barath Murugan
Barath Murugan | Published: 21 Aug 2025 21:05 PM

இயக்குநர் விக்னேஷ் சிவன் (Vignesh Shivan) இயக்கத்தில், தமிழ் சினிமாவில் வெளியாகக் காத்திருக்கும் படம் லவ் இன்சூரன்ஸ் கம்பெனி (Love Insurance Kompany). இப்படத்தில் முன்னணி கதாநாயகனாக நடிகர் பிரதீப் ரங்கநாதன் (Pradeep Ranganathan). இந்த படமானது பிரதீப் ரங்கநாதனின் 3வது படமாக உருவாகியுள்ளது. இந்த படமானது சைன்ஸ் பிக்ஷன் கதைக்களத்துடன் உருவாகியுள்ளது. இந்த படத்தின் அறிவிப்புகள் கடந்த 2024ம் ஆண்டு தொடக்கத்தில் அறிவிக்கப்பட்டது. இந்த படத்தில் நடிகர் பிரதீப் ரங்கநாதன் கதாநாயகனாக நடிக்க அவருக்கு ஜோடியாக நடிகை கீர்த்தி ஷெட்டி (Kirthi Shetty) நடித்துள்ளார். இப்படத்தின் மூலம் இவர் தமிழில் கதாநாயகியாக அறிமுகமாகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இதைத் தொடர்ந்து நடிகர் கார்த்தியின் (karthi) வா வாத்தியார் என்ற படத்திலும் நடித்துள்ளார்.

இப்படத்தின் ரிலீஸ் தேதி இன்று 2025, ஆகஸ்ட் 21ம் தேதியில் அறிவிக்கப்பட்ட நிலையில், படத்தின் முதல் டீசர் வீடியோ வரும் 2025, ஆகஸ்ட் 27ம் தேதியில் வெளியாகும் எனப் படக்குழு அறிவித்துள்ளது. தற்போது இந்த தகவலானது சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.

இதையும் படிங்க : லியோ படத்தில் என் கதாப்பாத்திரத்தை கேட்டதும் பயந்துட்டேன் – டான்ஸ் மாஸ்டர் சாண்டி!

லவ் இன்சூரன்ஸ் கம்பெனி படக்குழு வெளியிட்ட முதல் டீசர் வீடியோ அறிவிப்பு :

லவ் இன்சூரன்ஸ் கம்பெனி படத்தின் ரிலீஸ் தேதி எப்போது :

நடிகர் பிரதீப் ரங்கநாதனின் நடிப்பில் 3வது உருவாகியிருக்கும் படம்தான் லவ் இன்சூரன்ஸ் கம்பெனி. இந்த படத்தில் விக்னேஷ் சிவன் இயக்க, செவன் ஸ்க்ரீன் ஸ்டூடியோஸ் மற்றும் ரவுடி பிக்ச்சர்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளது. இப்படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்துள்ளார் . இவரின் இசையமைப்பில் இப்படத்தின் முதல் பாடலான தீமா தீமா என்ற பாடல் கடந்த 2024ம் ஆண்டு இறுதியிலே வெளியானது.

இப்படத்தில் நடிகர்கள் பிரதீப் ரங்கநாதன், கீர்த்தி ஷெட்டி, எஸ்.ஜே. சூர்யா, சீமான், கௌரி ஜி கிஷன் மற்றும் பல்வேறு நடித்துள்ளனர். இந்த படமானது ஆரம்பத்தில் 2025, செப்டம்பர் 18ம் தேதியில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து இப்படத்தின் ரிலீஸ் தேதி மாற்றப்பட்டதாக கூறப்பட்டுவந்த நிலையில், மீண்டும் புதிய ரிலீஸ் தேதியை அறிவித்துள்ளது. அதன்படி வரும் 2025, அக்டோபர் 17ம் தேதியில் இப்படமானது உலகமெங்கும் வெளியாகவும் எனப் படக்குழு அறிவித்துள்ளது.

இதையும் படிங்க : தோல்விகளால் எனது தந்தை சோர்வடைந்ததில்லை – ஸ்ருதி ஹாசன்!

டியூட் VS லவ் இன்சூரன்ஸ் கம்பெனி :

இந்நிலையில், படத்தின் முதல் டீசர் வீடியோ வரும் 2025, ஆகஸ்ட் 27ம் தேதியில் வெளியாகவுள்ளதாம். 2025, ஆண்டு தீபாவளியை முன்னிட்டு இப்படம் வெளியாகவுள்ளது. இவர் நடித்துவரும் புதிய படமான, டியூட் படமும் 2025 தீபாவளிக்குத்தான் வெளியாகும் எனப் படக்குழு அறிவித்திருந்தது. ஒருவேளை, டியூட் படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிப்போகலாம் எனவும் கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.