Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

இந்த போட்டோஸ் எல்லாம் 7 வருஷத்துக்கு முன்னாடி எடுத்ததா? இணையத்தில் கவனம் பெரும் ராஷ்மிகா மந்தனாவின் இன்ஸ்டா போஸ்ட்!

Actress Rashmika Mandanna: ரசிகர்களால் நேஷ்னல் க்ரஷ் என்று அன்புடன் அழைக்கப்படுபவர் நடிகை ராஷ்மிகா மந்தனா. இவரது நடிப்பில் தொடர்ந்து வெளியாகும் படங்கள் விமர்சனா ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் மாபெரும் வரவேற்பைப் பெற்று வருகின்றது. இந்த நிலையில் நடிகை ராஷ்மிகா மந்தனாவின் சமீபத்திய இன்ஸ்டா பதிவு இணையத்தில் வைரலாகி வருகின்றது.

இந்த போட்டோஸ் எல்லாம் 7 வருஷத்துக்கு முன்னாடி எடுத்ததா? இணையத்தில் கவனம் பெரும் ராஷ்மிகா மந்தனாவின் இன்ஸ்டா போஸ்ட்!
விஜய் தேவரகொண்டா - ராஷ்மிகா மந்தனாImage Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 27 Aug 2025 00:35 AM

கன்னட சினிமாவில் நடிகையாக அறிமுகம் ஆகி தற்போது தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி என பான் இந்திய நடிகையாக வலம் வருகிறார் நடிகை ராஷ்மிகா மந்தனா (Actress Rashmika Mandanna). அறிமுகம் ஆனது என்னமோ கன்னட சினிமாவில் என்றாலும் இவர் அதிக அளவில் தெலுங்கு சினிமாவிலே படங்களில் நடித்துள்ளார். பலரும் நடிகை ராஷ்மிகா மந்தனா தெலுங்கு மொழி நடிகை என்றும் அவர் தாய் மொழி தெலுங்கு என்றும் நம்பும் அளவிற்கு அவர் தெலுங்கு சினிமாவில் அவர் பலப் படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து தெலுங்கு சினிமாவில் பலப் படங்களில் நடித்த நடிகை ராஷ்மிகா மந்தனா கடந்த 2021-ம் ஆண்டு வெளியான சுல்தான் என்ற படத்தில் நாயகியாக நடித்து இருந்தார். இது தமிழ் சினிமாவில் இவர் நடிகையாக அறிமுகம் ஆன முதல் படம் ஆகும்.

இந்தப் படத்தில் நடிகர் கார்த்தி நாயகனாக நடித்து இருந்தார். மேலும் படம் ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றதைத் தொடர்ந்து தமிழ் சினிமாவில் அதிகப் படங்களில் நடிப்பார் என்று ரசிகர்கள் அதிகம் எதிர்பார்த்து இருந்த நிலையில் அவர் அதிகப்படியான படங்களில் நடிக்கவில்லை. அதனைத் தொடர்ந்து கடந்த 2022-ம் ஆண்டு வெளியான குட் பை படத்தின் மூலம் இந்தி சினிமாவில் அறிமுகம் ஆனார். அதனைத் தொடர்ந்து இவர் இந்தி சினிமாவில் நடித்த மிஷன் மஞ்சு, அனிமல், சாவா, சிக்கந்தர் ஆகியப் படங்கள் ரசிகரக்ளிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றது. குறிப்பாக அனிமல் மற்றும் சாவா படம் விமர்சன ரீதியாக மட்டும் இன்றி வசூல் ரீதியாக 1000 கோடி ரூபாய்களை கடந்தது குறிப்பிடத்தக்கது.

நடிகை ராஷ்மிகா மந்தனா வெளியிட்ட இன்ஸ்டா பதிவு:

இந்த நிலையில் நடிகை ராஷ்மிகா மந்தனா சமீபத்தில் வெளியிட்ட இன்ஸ்டாகிராம் பதிவு ரசிகர்களிடையே கவனத்தைப் பெற்று வருகின்றது. அந்தப் பதிவில் நடிகை ராஷ்மிகா மந்தனா கூறியுள்ளதாவது, 7 வருஷத்துக்கு முன்னாடி எடுத்த படங்கள் எல்லாம் என்கிட்ட இருக்குன்னு நம்பவே முடியல. கீதா கோவிந்தம் எப்பவும் ரொம்ப ஸ்பெஷல் படமா இருக்கும்.

இந்தப் படத்தயாரிப்பில் ஈடுபட்ட எல்லாரையும் நான் நினைச்சுட்டு இருந்தேன், நாம எல்லாரும் சந்திச்சு ரொம்ப நாள் ஆச்சு. ஆனா அவங்க எல்லாரும் நல்லா இருக்காங்கன்னு நம்புறேன். ஏற்கனவே 7 வருஷம் ஆச்சுன்னு நம்பவே முடியல, ஆனா சந்தோஷம் 7 ஆண்டுகள் ஆகிறது கீதா கோவிந்தம் படத்திற்கு என்று அந்தப் பதிவில் நடிகை ராஷ்மிகா மந்தனா தெரிவித்துள்ளார்.

Also Read… மதராஸி படத்தின் ட்ரெய்லரை பாராட்டிய 3 BHK பட நாயகி!

நடிகை ராஷ்மிகா மந்தனா வெளியிட்டுள்ள இன்ஸ்டாகிராம் பதிவு:

Also Read… பாகுபலி தி எபிக் படத்தின் டீசரை வெளியிட்ட படக்குழு!