Samantha: படங்களில் நடிப்பதை குறைத்த சமந்தா.. காரணம் இதுதான்!
Samantha Cinema Career Slowdown : தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகைகளில் ஒருவராக இருப்பவர் சமந்தா ரூத் பிரபு. இவரின் நடிப்பில் கிட்டத்தட்ட 2 வருடங்களாக படங்கள் எதுவும் வெளியாகவில்லை. இந்நிலையில், படங்ககளில் நடிப்பதை குறைத்ததற்கு காரணம் என்ன என்பதை பற்றி அவர் தெளிவுபடுத்தியிருக்கிறார். அது குறித்து விவரமாக பார்க்கலாம்.

நடிகை சமந்தா ரூத் பிரபு (Samantha Ruth Prabhu) தமிழ், தெலுங்கு, இந்தி போன்ற மொழி படங்களில் முன்னணி கதாநாயகியாக நடித்திருக்கிறார். இவரின் நடிப்பில் இறுதியாக வெளியான திரைப்படம் குஷி (Kushi). கடந்த 2023ம் ஆண்டு தொடக்கத்தில் வெளியான இப்படத்தில் நடிகர் விஜய் தேவரகொண்டாவுடன் (Vijay Deverakonda) இணைந்து நடித்திருந்தார். இப்படமானது காதல் கதைக்களம் கொண்ட படமாக வெளியாகியிருந்தது . இந்த படத்தை தொடர்ந்து உடல் நலக்குறைவினால், நடிகை சமந்தா தொடர்ந்து படங்களில் நடிப்பதை தவிர்த்து வந்தார். இந்நிலையில், கிட்டத்தட்ட 2 வருடங்களாக இவரின் முன்னணி நடிப்பில் அந்த படங்களும் வெளியாகவில்லை. இவர் இந்தியில் சிட்டாடல் ; ஹன்னி பன்னி (Citadel; Honey Bunny )என்ற வெப் தொடரில் நடித்திருந்தார்.
மேலும் சமீபத்தில் சமந்தாவின் தயாரிப்பில் வெளியான சுபம் என்ற படத்தில் கேமியோ வேடத்தில் நடித்திருந்தார். இந்நிலையில், தொடர்ந்து படங்களில் நடிப்பதை குறைத்த காரணம் பற்றி நடிகை சமந்தா கூறியிருக்கிறார். இந்த தகவலானது தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.




இதையும் படிங்க : 100 மில்லியன் பார்வைகளை கடந்து சாதனைப் படைத்தது மோனிகா பாடல்
படங்களில் நடிப்பதை குறைத்த காரணம் பற்றி சமந்தா பேச்சு :
நடிகை சமந்தா ரூத் பிரபு, தொடர்ந்து படங்களில் நடிப்பதை குறைத்து பற்றி தெளிவு படுத்தியிருக்கிறார். தனது சினிமா ஆரம்பத்தில் தொடர்ந்து படங்களில் நடிப்பதில் மட்டுமே கவனம் செலுத்திய சமந்தா, தற்போது சினிமா வாழ்க்கையுடன், தனது சொந்த ஆரோக்கியத்தையும் கவனித்து வருவதாக கூறியுள்ளார். அதனால்தான் அவர் படத்தில் நடிப்பதை குறைத்து வருவதாகவும் கூறியிருக்கிறார்.
இதையும் படிங்க : ஏன் கல்யாணி… இணையத்தில் கவனம் பெறும் கூலி நடிகர் கண்ணா ரவி போஸ்ட்!
அதன் காரணமாகத்தான் படங்களின் எண்ணிக்கையை கணிசமாக குறைத்ததாகவும் கூறியுள்ளார். மேலும் தற்போது அவர் முழுவதுமாக உடல் மற்றும் மன ஆரோக்கியத்தை கவனித்து வருவதாகவும், அதன் காரணமாக ஒரே நேரத்தில் 4 முதல் 5 படங்களில் நடிக்கமாட்டேன் ” எனவும் சமத்தா ரூத் பிரபு தெளிவு படுத்தியிருக்கிறார். தற்போது இவர் பேசிய விஷயம் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.
நடிகை சமந்தா ரூத் பிரபுவின் லேட்டஸ்ட் இன்ஸ்டாகிராம் போட்டோஷூட் :
View this post on Instagram
நடிகை சமந்தா ரூத் பிரபு, படங்களில் நடிப்பதை அடுத்ததாக, படத்தை தயாரித்தும் வருகிறார். இவரின் தயாரிப்பில் வெளியான முதல் படம் சுபம். கடந்த 2025, மே மாதத்தில் இப்படம் வெளியானது. ஹாரர் மற்றும் நகைச்சுவை கதைக்களத்துடன் இப்படம் வெளியானது. இதில் மந்திரவாதி வேடத்தில் நடிகர் சமந்தா கேமியோ ரோலில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.