Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Lokah : சூப்பர் வுமனாக கல்யாணி பிரியதர்ஷன்.. லோகா திரைப்படம் எப்படி இருக்கு?

Lokah X Review : தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகைகளில் ஒருவராக இருந்து வருபவர் நடிகை கல்யாணி பிரியதர்ஷன். இவரின் நடிப்பில் சூப்பர் வுமன் கதைக்களத்தில் உருவாகியிருக்கும் படம் லோகா. இந்த படமானது இன்று 2025, ஆகஸ்ட் 8ம் தேதியில் உலகமெங்கும் வெளியாகியிருக்கிறது. இந்நிலையில் இப்படத்தின் எக்ஸ் ரிவியூ குறித்து பார்க்கலாம்.

Lokah : சூப்பர் வுமனாக கல்யாணி பிரியதர்ஷன்..  லோகா திரைப்படம் எப்படி இருக்கு?
லோகா திரைப்படம்Image Source: X
Barath Murugan
Barath Murugan | Published: 28 Aug 2025 15:16 PM

நடிகை கல்யாணி பிரியதர்ஷன் (Kalyani Priyadarshan) தமிழ், மலையாளம் மற்றும் தெலுங்கு போன்ற மொழிகளில் பிரபல கதாநாயகியாக இருந்து வருகிறார். இவரின் முன்னணி நடிப்பில் மலையாள மொழியை அடிப்படியாக கொண்டு வெளியான திரைப்படம் லோகா : சாப்டர் 1 சந்திரா. இப்படத்தில் நடிகை கல்யாணி பிரியதர்ஷன் முன்னணி கதாநாயகியாக நடிக்க, அவருடன் நடிகர் நஸ்லென் (Naslen) இணைந்து நடித்துள்ளார். இந்த படமானது முழுக்க பேண்டஸி கதைக்களம் கொண்ட, சூப்பர் வுமன் கதைக்களத்துடன் வெளியாகியிருக்கிறது. தென்னிந்திய சினிமாவில் சூப்பர் வுமன் கதாப்பாத்திரத்தை  எடுக்கப்பட்டிருக்கும் முதல் படம் என்றும் பேசப்பட்டு வருகிறது. இப்படத்தை இயக்குநர் டோமினிக் அருண் (Dominic Arun) இயக்க, நடிகர் துல்கர் சல்மான் (Dulquer Salmaan) தயாரித்திருக்கிறார்.

இந்த படமானது இன்று 2025, ஆகஸ்ட் 28ம் தேதி முதல் உலகமெங்கும் வெளியாகியிருக்கிறது. இந்த படமானது தமிழ், தெலுங்கு மற்றும் மலையலாம் போன்ற மொழிகளில் வெளியாகியிருக்கிறது. இந்நிலையில், இப்படத்தின் கதைக்களம், நடிப்பு, VFX-ம் பின்னணி இசை போன்றவை குறித்து வெளியான எக்ஸ் விமர்சனங்கள் குறித்து பார்க்கலாம்.

இதையும் படிங்க : சௌந்தர்யா ரஜினிகாந்த் தயாரிப்பில் நாயகனாகும் அபிஷன் ஜீவிந்த்!

கல்யாணி பிரியதர்ஷன் மற்றும் நஸ்லெனின் லோகா படம் எப்படி இருக்கு?

இந்த லோகா திரைப்படத்தில், முதல் பாதி மிகவும் நன்றாக இருப்பதாகவும், இரண்டாம் பாதி ஓரளவு நன்றாக இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் இயக்குநர் டோமினிக் அருணின் திரைக்கதை மற்றும் பேண்டஸி கதைக்களம் நன்றாக வந்திருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த படத்தில் 5 மலையாள முன்னணி நடிகர்கள் கேமியோ வேடத்தில் நடித்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த படத்தில் நடிகர்கள் நடிப்பும் நன்றாக வந்திருப்பதாக கூறப்படுகிறது.

இந்த லோகா படமானது பெண் கதாபாத்திரத்தை வைத்து உருவாக்கப்பட்டிருக்கிறது. இந்த படத்தில் நடிகை கல்யாணி பிரியதர்ஷனும் அதிரடி ஆக்ஷ்ன் கதாபாத்திரத்தில் அருமையாக நடித்திருக்கிறாராம். மேலும் மலையாள சினிமாவில் டோவினோ தாமஸின் மின்னல் முரளி படத்துக்கு அடுத்ததாக வெளியான இரண்டாவது சூப்பர் ஹீரோ படமாக இந்த லோகா அமைந்திருக்கிறது.

இதையும் படிங்க : யு/ஏ சான்றிதழ் கோரி கூலி படக்குழு தொடர்ந்த வழக்கு தள்ளுபடி

மொத்தத்தில் லோகா படத்தை திரையரங்கு சென்று பார்க்கலாமா ?

இந்த லோகா திரைப்படமானது மலையாள சினிமாவில் வெளியாகியிருக்கும் 2வது சூப்பர் ஹீரோ படம். இந்த படத்தில் நடிகை கல்யாணி பிரியதர்ஷனின் நடிப்பும் நன்றாக வந்திருக்கிறது. மேலும் இப்படத்தில் ரசிகர்களுக்கு தொடர்ந்து நிறைய சர்ப்ரைஸ் கேமியோக்களும் இருக்கிறது. ஆக மொத்தத்தில், ஒரு தென்னிந்திய சினிமாவில் நல்ல சூப்பர் ஹீரோ படத்தை பார்க்கும் அனுபவம் கிடைக்கும் என கூறப்படுகிறது. திரையரங்கு சென்று ஒரு முறை பார்க்கலாம் என்று கூறப்படுகிறது.