Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

செந்தமிழ் பேசும் அழகு ஜூலியட்… இணையத்தில் வைரலாகும் நடிகை ஜெனிலியாவின் இன்ஸ்டா போஸ்ட்!

Genelia D Souza Deshmukh: பான் இந்திய நடிகையாக வலம் வருபவர் நடிகை ஜெனிலியா. இவர் தமிழ் சினிமாவில் நடித்து பல ஆண்டுகள் ஆகியும் தற்போதும் தமிழ் ரசிகர்களின் மனதில் நடிகை ஜெனிலியா இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் அவரது இன்ஸ்டாகிராம் பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

செந்தமிழ் பேசும் அழகு ஜூலியட்… இணையத்தில் வைரலாகும் நடிகை ஜெனிலியாவின் இன்ஸ்டா போஸ்ட்!
நடிகை ஜெனிலியாImage Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 27 Aug 2025 20:54 PM

கடந்த 2003-ம் ஆண்டு வெளியான துஜே மேரி கசம் என்ற இந்திப் படத்தின் மூலம் சினிமாவில் நடிகையாக அறிமுகம் ஆனவர் நடிகை ஜெனிலியா ( Genelia D’Souza Deshmukh). இந்தப் படத்தில் இவரது கணவர் தேஸ்முக் தான் நாயகனாக நடித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தை தொடர்ந்து 2003-ம் ஆண்டே இயக்குநர் சங்கர் இயகக்தில் வெளியான பாய்ஸ் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகம் ஆனர். இதில் ஐந்து நாயகன்கள் அறிமுகம் ஆன நிலையில் நடிகை ஜெனிலியாவிற்கு ஜோடியாக நடிகை சித்தார்த் நடித்து இருந்தார். இதில் நடித்த நடிகர்கள் பெரும்பாளானோர் அறிமுக நடிகர்களாகவே இருந்தனர். இதனைத் தொடர்ந்து நடிகை ஜெனிலியா தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், மராத்தி மற்றும் இந்தி என பல மொழிகளில் நடித்துள்ளார்.

தொடர்ந்து தமிழ் சினிமாவில் நடிகை ஜெனிலியா நடிப்பில் விஜயுடன் நடித்த சச்சின், பரத் உடன் நடித்த சென்னை காதல், ரவி மோகனுடன் நடித்த சந்தோஷ் சுப்ரமணியம், தனுஷுடன் உத்தம புத்திரன், விஜயுடன் வேலாயுதம் என இவர் நடித்த அனைத்துப் படங்களும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. குறிப்பாக நடிகை ரவி மோகனுடன் நடித்த சந்தோஷ் சுப்ரமணியம் படத்தில் ஜெனிலியா கதாப்பாத்திரம் இன்னும் ரசிகர்களுக்கு பிடித்த கதாப்பாத்திரமாகவே இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

கணவருடன் ரொமாண்டிக் புகைப்படங்களை வெளியிட்ட ஜெனிலியா:

நடிகை ஜெனிலியா 2011-ம் ஆண்டிற்கு பிறகு தமிழ் சினிமாவில் நடிக்கவில்லை என்றாலும் அவரது சமூக வலைதளப் பக்கத்தின் மூலம் ரசிகர்களிடையே இணைந்து இருக்கிறார். இந்த நிலையில் சமீபத்தில் இந்தியில் நடிகர் அமீர் கான் உடன் இணைந்து நடிகை ஜெனிலியா நடித்த சித்தாரே ஜமீன் பர் படம் தமிழ் ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றது.

இந்த நிலையில் சமீபத்தில் நடிகர் ரவி மோகனின் தயாரிப்பு நிறுவனமான ரவி மோகன் ஸ்டூடியோஸ் நிறுவனத்தின் திறப்பு விழாவின் தனது கனவர் தேஸ்முக் உடன் கலந்துகொண்டார். இது தொடர்பான வீடியோக்கள் இணையத்தில் வெளியாகி ரசிகரக்ளிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.

Also Read… எனக்கு ரௌடி ஆகனும்னு ஆசை இல்ல நான் படிக்கனும்… சுள்ளான் சேது டீசர் இதோ!

ஜெனிலியா வெளியிட்டுள்ள இன்ஸ்டாகிராம் பதிவு:

 

View this post on Instagram

 

A post shared by Genelia Deshmukh (@geneliad)

Also Read… லவ் அட் ஃபர்ஸ்ட் சைட் இன்னும் இருக்கு… லவ் இன்சூரன்ஸ் கம்பெனி படத்தின் ஃபர்ஸ்ட் பஞ்ச் இதோ!