பிரித்விராஜ் நடிப்பில் கோல்ட் கேஸ் என்ற க்ரைம் த்ரில்லர் ஹாரர் படத்தை பார்த்து இருக்கீங்களா?
Cold Case Movie: மலையாள சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் நடிகர் பிரித்விராஜ் சுகுமாரன். இவரது நடிப்பில் க்ரைம் த்ரில்லர் பாணியில் வெளியான படம் கோல்ட் கேஸ். இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாகி ரசிகரக்ளிடையே விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.

மோலிவுட்டின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் பிரித்விராஜ் சுகுமாரன் (Actor Prithviraj Sukumaran). இவர் நடிப்பில் கடந்த 2021-ம் ஆண்டு ஜூன் மாதம் 30ம் தேதி வெளியான படம் கோல்ட் கேஸ். இந்தப் படத்தை இயக்குநர் தனு பாலக் இயக்கி இருந்த நிலையில் திரைக்கதையை ஸ்ரீநாத் வி நாத் எழுதி இருந்தார். க்ரைம் த்ரில்லர் ஹாரர் பாணியில் உருவாகி இருந்த இந்தப் படத்தில் நடிகர் பிரித்விராஜ் சுகுமாரன் உடன் இணைந்து நடிகர்கள் அதிதி பாலன், பூஜா மோகன்ராஜ், அனில் நெடுமங்காட், சுசித்ரா பிள்ளை, ஆத்மிய ராஜன், லக்ஷ்மி பிரியா சந்திரமௌலி, மணக்கால், ராஜேஷ் ஹெப்பர், ஆனந்த், டாக்டர் திவ்யா, நிதா ப்ரோமி, ஷிபு லாபன், பிலாஸ் நாயர், ஜிபின் கோபிநாத், பார்வதி டி, குழந்தை எய்தல் இவானா ஷெரின், விஜயகுமாரி, அஸீஸ் நெடுமங்காடு, ஸ்ரீகாந்த் கே விஜயன் என பலர் இந்தப் படத்தில் நடித்துள்ளனர்.
மேலும் இந்தப் படத்தை பிரபல தயாரிப்பு நிறுவனங்களான ஆண்டோ ஜோசப் ஃபிலிம் கம்பெனி, பிளான் ஜே ஸ்டுடியோஸ், ஏபி இன்டர்நேஷனல் கீழ் ஆண்டோ ஜோசப், ஜோமோன் டி. ஜான், ஷமீர் முஹம்மது ஆகிய தயாரிப்பாளர்கள் இணைந்து தயாரித்து உள்ளனர். மேலும் இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் பிரகாஷ் அலெக்ஷ் இசையமைத்து இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்தப் படம் திரையரங்குகளில் வெளியான போது விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் மாபெரும் வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.
கோல்ட் கேஸ் படத்தின் கதை என்ன?
செய்தி நிறுவனத்தில் வேலை செய்யும் பெண் ஒருவரின் வீட்டில் செகனட்டில் வாங்கிய ஃப்ரிஜ் ஒன்றில் சில அமானிஷ்ய நிகழ்வுகள் நடைபெறுகிறது. அதனைத் தொடர்ந்து இந்த வழக்கை காவல்துறை அதிகாரியான பிரித்விராஜ் சுகுமாரன் விசாரணை செய்கிறார். அந்த வழக்கை விசாரிக்க சென்ற போது ஒரு பெண் காணாமல் போனது குறித்து தெரிய வருகிறது.
அந்த வழக்கை தொடர்ந்து விசாரித்து வரும் போது பல எதிர்பாராத திருப்பங்கள் ஏற்படுகிறது. இறுதியில் அந்த பெண்ணிற்கு என்ன நடந்தது அந்த ஃப்ரிட்ஜில் அமானிஷ்ய நிகழ்வுகள் ஏன் நடந்தது என்பதை கண்டுபிடிப்பதே படத்தின் க்ளைமேக்ஸ் ஆகும். இந்தப் படம் தற்போது அமேசான் ப்ரைம் ஓடிடியில் காணக் கிடைக்கின்றது.
Also Read… பைசன் படத்தின் முதல் சிங்கிள் ரிலீஸ் எப்போது? அப்டேட் இதோ!
கோல்ட் கேஸ் படத்தின் ட்ரெய்லர் இதோ:
Also Read… ‘நீங்க நல்லவர்தான்’ – வார்த்தையை விட்ட தொகுப்பாளர்.. கடுப்பாகி பதிலளித்த நடிகர் யோகிபாபு