நெல்சன் இயக்கத்தில் அந்தப் படம் எனக்கு மிகவும் பிடிக்கும் – ஓபனாக சொன்ன விஜய் சேதுபதி
Vijay Sethupathi: தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் விஜய் சேதுபதி. இவர் சமீபத்தில் விழா ஒன்றில் இயக்குநர் நெல்சன் திலீப் குமாருக்கு விருது கொடுத்தார். அதனைத் தொடர்ந்து நெல்சன் இயக்கத்தில் அவருக்கு மிகவும் பிடித்த கதாப்பாத்திரம் குறித்தும் வெளிப்படையாக பேசினார்.

கோலிவுட் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் விஜய் சேதுபதி (Actor Vijay Sethupathi). நாயகனாக சூப்பர் ஹிட் படத்தை கொடுத்துவிட்டு அடுத்தப் படத்திலேயே வில்லன் கதாப்பத்திரத்தையும் நடிப்பார். நாயகனாக நடிக்கும் பலர் நாயகன் என்ற அந்தஸ்தை தாண்டி அடுத்த கதாப்பாத்திரத்தில் அல்லது வேறு நடிகருக்கு வில்லனாகவோ நடிக்கத் தயங்குவார்கள் அப்படி நடித்தால் தனது ஹீரோ இமேஜ் பாதிக்கப்படும் என்று நினைப்பார்கள். ஆனால் இது எதுவுமே யோசிக்காத விஜய் சேதுபதி முதல் படத்தில் நாயகன் என்றால் அடுத்தப் படத்தில் வில்லன் என தொடர்ந்து அசத்தி வருகிறார். இந்த 2025-ம் ஆண்டு தொடங்கியதிலிருந்து நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் அடுத்தடுத்து இரண்டு படங்கள் திரையரங்குகளில் வெளியானது. அதன்படி முதலாவதாக ஏஸ் படம் வெளியானது.
இந்தப் படம் நன்றாக இருந்தும் சரியான புரமோஷன் இல்லாத காரணத்தால் படம் திரையரங்குகளில் வெற்றியடையவில்லை. ஆனால் படம் ஓடிடியில் வெளியான பிறகு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தை தொடர்ந்து நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் சமீபத்தில் திரையரங்குகளில் வெளியான படம் தலைவன் தலைவி. இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாகி விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் மாபெரும் வரவேற்பைப் பெற்றது. மேலும் உலக அளவில் தலைவன் தலைவி படம் ரூபாய் 100 கோடிகள் வசூலித்ததாகவும் கடந்த சில நாட்களுக்கு முன்பு படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.




இயக்குநர் நெல்சனின் படங்களைப் பாராட்டிய விஜய் சேதுபதி:
இந்த நிலையில் சமீபத்தில் விருது வழங்கும் விழா ஒன்றில் பிரபல இயக்குநர் நெல்சன் திலீப் குமாருக்கு நடிகர் விஜய் சேதுபதிதான் விருதை வழங்கினார். அந்த நிகழ்ச்சியில் விஜய் சேதுபதி நெல்சன் திலீப்குமாரின் இயக்கத்தில் வெளியான படங்கள் குறித்தும் படத்திற்கு நெல்சன் தேர்ந்தெடுக்கும் கதாப்பாத்திரங்கள் குறித்தும் பெருமையாக பேசினார்.
மேலும் நெல்சன் இயக்கத்தில் தனக்கு மிகவும் பிடித்தப் படம் ஜெயிலர் என்று தெரிவித்த நடிகர் விஜய் சேதுபதி இந்தப் படத்தை 6 அல்லது 7 முறைக்கு மேல் தான் பார்த்துள்ளதாகவும் அவர் தெரிவித்து இருந்தார். இந்த நிலையில் இந்த வீடியோ தற்போது இணையத்தில் கவனத்தை ஈர்த்து வருகின்றது.
Also Read… ரவி மோகன் தயாரிக்கும் முதல் படமான ப்ரோ கோட் படத்தின் ப்ரோமோ இதோ!
இணையத்தில் கவனம் பெறும் விஜய் சேதுபதியின் பேச்சு:
“I like #Nelson‘s writing so much. His characters & timing are so unique🌟🔥. I have watched #Jailer 6-7 times. Especially that wine shop, head chop mass scene🥶. I’ve watched in Home, Flight etc. I’m happy to present awad to Nelson🫶♥️”
– #VijaySethupathipic.twitter.com/UOnTfKxuig— AmuthaBharathi (@CinemaWithAB) August 30, 2025
Also Read… இட்லி கடை படத்திலிருந்து வெளியானது எஞ்சாமி தந்தானே பாடலின் லிரிக்கள் வீடியோ!