Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Lokesh Kanagaraj : லோகேஷ் கனகராஜிற்கு ஜோடியாகும் ரஜினி பட நடிகை? அட இவரா!

Lokesh Kanagaraj New Movie Update : தமிழ் சினிமாவில் பிரபல இயக்குநர்களில் ஒருவர் லோகேஷ் கனகராஜ். இவர் மேலும் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமாகவுள்ள நிலையில், அந்த படத்தின் நடிகை யார் என்பதை பற்றிய தகவல்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது .

Lokesh Kanagaraj : லோகேஷ் கனகராஜிற்கு ஜோடியாகும் ரஜினி பட நடிகை? அட இவரா!
லோகேஷ் கனகராஜ் திரைப்படம் Image Source: Instagram
Barath Murugan
Barath Murugan | Published: 28 Aug 2025 21:39 PM

இயக்குநர் லோகேஷ் கனகராஜின் (Lokesh Kanagaraj) இயக்கத்தில் இதுவரை வெளியான படங்கள் அனைத்தும் சூப்பர் ஹிட்டாகியிருக்கிறது. அந்த வகையில் இவரின் இயக்கத்தில் இறுதியாக வெளியான படம் கூலி (Coolie). சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை (Rajinikanth) வைத்து, இந்த படத்தை லோகேஷ் இயக்கியிருந்தார். இந்த கூலி படமானது கடந்த 2025, ஆகஸ்ட் 14 ஆம் தேதி பான் இந்திய படமாக வெளியாகியிருந்தது. இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தற்போது சினிமாவில் ஹீரோவாக அறிமுகமாகவுள்ளார். இயக்குநர் அருண் மாதேஷ்வரனின் (Arun Matheswaran) இயக்கத்தில் உருவாகும் புதிய படத்தில் ஹீரோவாக லோகேஷ் கனகராஜ் களமிறங்கவுள்ளார். தற்போது இப்படத்தின் ப்ரீ-ப்ரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், லோகேஷ் கனகராஜ் அதற்காக தயாராகி வருகிறார்.

இந்நிலையில், இப்படத்தில் லோகேஷ் கனகராஜிற்கு ஜோடியாக ஜெயிலர் பட நடிகை நடிக்கவுள்ளாராம். அது வேறு யாருமில்லை, ஜெயிலர் படத்தில் ரஜினிகாந்த்தின் மருமகளாக நடித்த நடிகை மிர்னா மேனன்தான் (Mirna Menon). இவர்தான் லோகேஷ் ஹீரோவாக அறிமுகமாகும் படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. இந்த தகவலானது எந்த அளவிற்கு உண்மை என்று தெரியவில்லை. படக்குழு இது குறித்து எந்தவித அறிவிப்புகளும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : ‘ஊரும் பிளட்’.. பிரதீப் ரங்கநாதனின் ‘டியூட்’ படத்தின் அதிரடி முதல் சிங்கிள் இதோ!

நடிகை மிர்னா மேனனின் லேட்டஸ்ட் இன்ஸ்டாகிராம் பதிவு :

 

View this post on Instagram

 

A post shared by Mirnaa (@mirnaaofficial)

இயக்குநர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் ஏற்கனவே தனுஷின் கேப்டன் மில்லர் என்ற திரைப்படம் வெளியாகியிருந்தது. இந்த படமானது இவருக்கு கலவையான விமர்சங்களை கொடுத்திருந்தது. இதை தொடர்ந்து தற்போது லோகேஷ் கனகராஜுடன் கைகோர்த்துள்ளார். இவர்கள் இருவரின் கூட்டணியில் உருவாகும் படம் அதிரடி ஆக்ஷ்ன் மற்றும் காதல் கலந்த கதைக்களத்துடன் உருவாகவுள்ளதாக கூறப்படுகிறது.

இதையும் படிங்க : 15வது ஆண்டு திருமணநாள் கொண்டாட்டம்.. ஸ்பெஷல் வீடியோவை வெளியிட்ட சிவகார்த்திகேயன்!

இந்த படத்தில் லோகேஷ் கனகராஜ் கதாநாயகனாக நடிக்கும் நிலையில் அவருடன் நடிகை மிர்னா மேனனும் நடிக்கவுள்ளார் என்று கூறப்படுகிறது. இது உண்மையா என்று தெளிவாக தெரியவில்லை. இந்த படத்தின் ஷூட்டிங் வரும் 2025 செப்டம்பர் அல்லது அக்டோபர் தொடக்கத்தில் ஆரம்பமாகும் என கூறப்படுகிறது. இந்த படத்தை இயக்குநர் லோகேஷ் கனகராஜும் இணைந்த தயாரிப்பதாகவும் கூறப்படுகிறது.

நடிகை மிர்னா மேனனின் தமிழ் திரைப்படங்கள் :

நடிகை மிர்னா மேனன் தமிழில் கடந்த 2022ம் ஆண்டு வெளியான ஜெயிலர் திரைப்படத்தின் மூலம் மக்களிடையே பிரபலமானார். இப்படத்தில் நடிகர் வசந்த் ரவிக்கு ஜோடியாக நடித்து வரவேற்பை பெற்றார். மேலும் ஜெயிலர் 2 படத்திலும் இவர் நடிப்பதாக கூறப்படுகிறது. மேலும் நடிகர் அசோக் செல்வனுடன் 18 மைல்ஸ் தாரணா என்ற படத்திலும் நடித்து வருகிறார். இப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகியிருந்தது. இப்படத்தை அடுத்ததாகதான், லோகேஷ் கனகராஜின் படத்தில் அவருடன் இணைந்து நடிக்கவிருப்பதாக பேசப்படுகிறது .