Sivakarthikeyan : 15வது ஆண்டு திருமணநாள் கொண்டாட்டம்.. ஸ்பெஷல் வீடியோவை வெளியிட்ட சிவகார்த்திகேயன்!
Sivakarthikeyan And Arthis15th Wedding Anniversary : தமிழ் சினிமாவில் பிரபல நடிகர்களில் ஒருவராக இருந்து வருபவர் சிவகார்த்திகேயன். இவர் தனது மனைவியுடன், 15வது ஆண்டு திருமண நாளை கொண்டாடியிருக்கிறார். இது குறித்த வீடியோ ஒன்றை அவர் வெளியிட்டுள்ளார். இது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

நடிகர் சிவகார்த்திகேயன் (Sivakarthikeyan) நடிப்பில் இதுவரை 22 திரைப்படங்கள் வெளியாகியிருக்கிறது. இந்நிலையில், இவரின் நடிப்பில் 23வதாக உருவாகியிருக்கும் படம் மதராஸி. இந்த படத்தை ஏ.ஆர். முருகதாஸ் (AR Murugadoss) இயக்க, நடிகர் சிவகார்த்திகேயன் அதிரடி ஆக்ஷன் வேடத்தில் நடித்திருக்கிறார். இவரின் நடிப்பில் அமரன் (Amaran) படத்தை தொடர்ந்து முழுவதும் ஆக்ஷன் கதைக்களம் கொண் ட படமாக மதராஸி உள்ளதாக கூறப்படுகிறது. இப்படமானது வரும் 2025, செப்டம்பர் 5 ஆம் தேதி முதல் உலகமெங்கும் வெளியாகிறது. இந்நிலையில், நடிகர் சிவகார்த்திகேயன் சமீபத்தில் வெளியிட்ட வீடியோ ரசிகர்கள் மத்தியில் படு வைரலாகி வருகிறது.
சிவகார்த்திகேயன், தனது மனைவி ஆர்த்தி சிவகார்த்திகேயனுடன் (Aarthi Sivakarthikeyan) , தனது 15வது ஆண்டு திருமண நாளை (15th wedding Anniversary) சிறப்பாக கொண்டாடியிருக்கிறார். இவர்கள் இருவரும் திருமண நாளை கொண்டாடும் விதமாக, கேக் வெட்டி சிறப்பித்துள்ளனர். இந்நிலையில் தனது மனைவிக்காக, சிவகார்த்திகேயன் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோவானது தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாக பரவி வருகிறது.




இதையும் படிங்க : சூப்பர் வுமனாக கல்யாணி பிரியதர்ஷன்.. லோகா திரைப்படம் எப்படி இருக்கு?
நடிகர் சிவகார்த்திகேயன் 15வது திருமண நாளிற்கு வெளியிட்ட வீடியோ :
View this post on Instagram
சிவகார்த்திகேயன் மற்றும் ஆர்த்தி திருமணம் :
நடிகர் சிவகார்த்திகேயன் மற்றும் ஆர்த்தி சிவகார்த்திகேயன் பெற்றோரால் நிச்சயிக்கப்பட்டு திருமணம் செய்துகொண்டனர். ஆர்த்தி, நடிகர் சிவகார்த்திகேயனின் சொந்த தாய்மாமன் மகள் ஆவார். இவர்கள் இருவரும் கடந்த 2010 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 27ம் தேதியில் பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் முன்னிலையில் திருமணம் செய்துகொண்டனர்.
இதையும் படிங்க : யு/ஏ சான்றிதழ் கோரி கூலி படக்குழு தொடர்ந்த வழக்கு தள்ளுபடி
தற்போது இந்த தம்பதிகளுக்கு ஆராதனா என்ற பெண் குழந்தையும், குகன் மற்றும் பவன் என் இரு ஆண் குழந்தைகளும் இருக்கின்றனர். நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருந்து வரும் நிலையில், ரசிகர்கள் மத்தியில் அதிகம் பேசப்பட்டு வருகிறார்.
மதராஸி திரைப்படம் :
நடிகர் சிவகார்த்திகேயன் மற்றும் ருக்மிணி வசந்தின் முன்னனணி நடிப்பில் உருவாகியுள்ள படம் மதராஸி. இப்படத்தை இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கியிருக்கிறார். மேலும் இசையமைப்பாளர் அனிருத் இப்படத்திற்கு இசையமைத்திருக்கிறார். சுமார் 2 வருடங்களுக்கு பின் அனிருத் மற்றும் சிவகார்த்திகேயன் காம்போ இந்த மதராஸி படத்தில் இணைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த மதராஸி படமானது முழுவதும் ஆக்ஷ்ன் கதைக்களத்தில் உருவாகியுள்ளதாம். இந்த படமானது வரும் 2025, செப்டம்பர் 5ம் தேதி முதல் உலகமெங்கும் வெளியாகவுள்ளது. தற்போது இப்படத்தின் மீது ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்புகள் அதிகரித்து வருகிறது என்பது குறிப்பிடடதக்கது.