பெரும்பான்மையான நடிகர்கள் ஏ.ஆர்.முருதாஸ் இயக்கத்தில் நடிக்க ஆசைப்படுகிறார்கள் – நடிகை ருக்மினி வசந்த்
Actress Rukmini Vasanth: தமிழ் சினிமாவில் தற்போது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த நாயகியாக வலம் வருகிறார் நடிகை ருக்மினி வசந்த். இவரது நடிப்பில் தற்போது மதராஸி படம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் ருக்மினி வசந்த் சமீபத்தில் அளித்தப் பேட்டி ஒன்று இணையத்தில் வைரலாகி வருகின்றது.

கன்னட சினிமாவில் நடிகையாக அறிமுகம் ஆகி தற்போது தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் நடிகை ருக்மினி வசந்த் (Actress Rukmini Vasanth). இவர் கடந்த 2019-ம் ஆண்டு பிர்பல் ட்ரிலாஜி என்ற படத்தின் மூலம் கன்னட சினிமாவில் நடிகையாக அறிமுகம் ஆனார். தொடர்ந்து இவர் இந்தி சினிமாவிலும் அறிமுகம் ஆகி நடித்தார். ஆனால் நடிகை ருக்மினி வசந்தை தென்னிந்திய சினிமாவில் பிரபலம் ஆக்கியது கன்னட சினிமாவில் வெளியான சப்த சாகரடாச்சே எல்லோர் – சைட் ஏ என்ற படம் தான். இந்தப் படத்தில் நடிகர் ரக்ஷித் ஷெட்டி நாயகனாக நடித்து இருந்தார். இந்தப் படத்தில் நடித்ததற்காக நடிகை ருக்மினி வசந்த் பாராட்டுகளைப் பெற்றது மட்டும் இன்றி விருதுகளையும் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தப் படத்தை தொடர்ந்து தமிழ், தெலுங்கு மற்றும் கன்னட மொழிகளில் பிசியாக நடித்து வருகிறார் நடிகை ருக்மினி வசந்த். இந்த நிலையில் தமிழில் இயக்குநர் ஆறுமுகக் குமார் இயக்கத்தில் வெளியான ஏஸ் படத்தில் நாயகியாக அறிமுகம் ஆனார். இந்தப் படத்தில் நடிகர் விஜய் சேதுபதி நாயகனாக நடித்து இருந்தார். படம் கடந்த மே மாதம் 23-ம் தேதி 2025-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றது. மேலும் இந்தப் படத்தில் நடிகை ருக்மினி நடிப்பை ரசிகர்கள் பாராட்டியது குறிப்பிடத்தக்கது.
இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் குறித்து புகழ்ந்து பேசிய நடிகை ருக்மினி வசந்த்:
ஏஸ் படத்தை தொடர்ந்து இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள மதராஸி படத்தில் நாயகியாக நடித்துள்ளார் நடிகர் ருக்மினி வசந்த். இந்தப் படத்தின் ட்ரெய்லர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் படம் வருகின்ற 5-ம் தேதி செப்டம்பர் மாதம் 5-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக காத்திருக்கின்றது.
இந்த நிலையில் சமீபத்தில் பேட்டி ஒன்றில் கலந்துகொண்ட நடிகை ருக்மினி வசந்த் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடித்தது குறித்து பேசினார். அதில் சினிமாவில் பெரும்பான்மையான நடிகர்கள் குறிப்பாக நடிகைகள் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடிக்க விருப்பம் தெரிவிக்கின்றனர்.
அதற்கு காரணம் ஏ.ஆர்.முருகதாஸ் ஒரு ஆக்ஷன் படத்தை இயக்கினாலும் அதில் நாயகிகளுக்கு நல்ல கதையை வைத்து இருப்பார். இதனால் பெரும்பான்மையான நடிகைகள் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடிக்க வேண்டும் என ஆசைப்படுகிறார்கள் என்றும் தெரிவித்து இருந்தார்.
Also Read… LCU-வில் இணையும் நடிகர் ரவி மோகன் – வைரலாகும் தகவல்
இணையத்தில் வைரலாகும் ருக்மினி வசந்தின் பேட்டி:
#RukminiVasanth Recent
– #ARMurugadoss is on the wish list of almost every actor, especially actresses.
– Whether it’s an action film or a thriller, he always ensures his female characters have strong importance.#Madharaasipic.twitter.com/55g8xwserM— Movie Tamil (@_MovieTamil) August 30, 2025
Also Read… ஜெயிலர் 2 படத்தில் ஃபைனல் ஷூட்டிங் எங்கு எப்போது? வைரலாகும் தகவல்