Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

செத்தவன் எப்படிடா அத பண்ணுவான்? பாம் படத்தின் ட்ரெய்லர் இதோ

Bomb Movie Official Teaser | நடிகர் அர்ஜுன் தாஸ் நடிப்பில் தற்போது உறுவாகியுள்ள படம் பாம். இந்தப் படத்தின் அறிவிப்பு வெளியானதில் இருந்தே படத்தின் மீதான ரசிகர்களின் கவனம் அதிகரித்தது. காரணம் படத்தின் பெயர் தான். இந்த நிலையில் தற்போது படத்தின் ட்ரெய்லர் வெளியாகி இணையத்தில் கவனம் பெற்று வருகின்றது.

செத்தவன் எப்படிடா அத பண்ணுவான்? பாம் படத்தின் ட்ரெய்லர் இதோ
பாம்Image Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 29 Aug 2025 19:51 PM

நடிகர் அர்ஜுன் தாஸ் (Actor Arjun Das) நடிப்பில் தற்போது திரையரங்குகளில் வெளியாக காத்திருக்கும் படம் பாம். வித்யாசமான கதைகளத்தில் காமெடியை மையமாக வைத்து உருவாகியுள்ள இந்தப் படத்தை இயக்குநர் விஷால் வெங்கட் எழுதி இயக்கி உள்ளார். இவர் முன்னதாக சில நேரங்களில் சில மனிதர்கள் என்ற படத்தை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவருடன் இணைந்து மணிகண்டன் மாதவன் மற்றும் அபிஷேக் சபரிகிரிசன் ஆகியோர் இணைந்து பாம் படத்திற்கு திரைக்கதை எழுதியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்தப் படத்தில் நடிகர் அர்ஜுன் தாஸ் உடன் இணைந்து நடிகர்கள் ஷிவாத்மிகா ராஜசேகர், காளி வெங்கட், நாசர், அபிராமி, சிங்கம்புலி, பால சரவணன், டிஎஸ்கே, பூவையார் என பலர் இந்தப் படத்தில் நடித்துள்ளனர்.தொடர்ந்து ஆக்‌ஷன் மற்றும் ரொமாண்டிக் படங்களில் நடிகர் அர்ஜுன் தாஸை பார்த்த ரசிகர்கள் இந்தப் படத்தில் அவரது கதாப்பாத்திரதை பார்த்து படத்தின் மீது எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளதாக சமூக வலைதளங்களில் தெரிவித்து வருகின்றனர்.

மேலும் இந்தப் படத்தை பிரபல தயாரிப்பு நிறுவனமான ஜெம்ப்ரியோ பிக்சர்ஸ் சார்பில் தயாரிப்பாளர்கள் சுதா சுகுமார் மற்றும் சுகுமார் பாலகிருஷ்ணன் இருவரும் இணைந்து இந்தப் படத்தை தயாரித்து உள்ளனர். மேலும் இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் டி இமான் இசையமைத்துள்ள நிலையில் படம் வருகின்ற 12-ம் தேதி செப்டம்பர் மாதம் 2025-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளது. படம் வெளியாக இன்னும் 15 நாட்களே உள்ள நிலையில் படத்தின் ட்ரெய்லரைப் படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது.

இணையத்தில் கவனம் பெறும் பாம் படத்தின் ட்ரெய்லர்:

ட்ரெய்லரில் நடிகர் காளி வெங்கட் வீட்டின் வெளியே அமர்ந்து இருக்கும் போதே உயிரிழந்து விடுகிறார். அவரை எழுப்ப அவரது நண்பரான அர்ஜுன் தாஸ் முயற்சித்து வருகிறார். இந்த நிலையில் ஊர் தலைவரான சிங்கம்புலிக்கு தகவல் தெரிவிக்கப்படுகின்றது.

அவர் அமரும் நாற்காழியுடன் காளி வெங்கட்டின் வீட்டை நோக்கி வருகிறார். அதே நேரத்தில் அர்ஜுன் தாஸ் காளி வெங்கட்டை எழுப்ப முயற்சிக்கும் போது அவர் குசு விடுகிறார். இறந்ததாக நினைத்த காளி வெங்கட் குசு விட்டது அனைவரையும் அதிர்ச்சுக்குள்ளாக்கியது. அதெப்படி செத்துப்போனவன் குசு விடுவான் என்று அந்த ட்ரெய்லர் முடிகிறது.

ட்ரெய்லரின் தொடக்கத்திலேயே இது ஒரு கற்பனை கதை என்பதை பதிவு செய்துள்ள படக்குழு வித்யாசமான கதையை மையமாக வைத்து இந்தப் படத்தை உருவாகியுள்ளதால் படத்தின் மீதான ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. படம் எப்படி உள்ளது என்பதை பொருத்து இருந்து பார்ப்போம்.

Also Read… ராட்சசன் படத்தில் நடிக்க அந்த நடிகர் தான் காரணம் – நடிகை அமலா பால் சொன்ன விசயம்!

பாம் படக்குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:

Also Read… ரஜினியுடன் இணைந்து நடிக்க மறுத்ததற்கு இதுதான் காரணம் – சத்யராஜ் கொடுத்த விளக்கம்!