Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

R Madhavan : ஷூட்டிங் போன இடத்தில் வந்த சிக்கல்.. லடாக்கில் வசமாக மாட்டிக்கொண்ட நடிகர் மாதவன்!

R Madhavan Caught In Flood : இந்திய சினிமாவில் பிரபல நடிகர்களில் ஒருவராக இருந்து வருபவர் ஆர்.மாதவன். இவரின் இன்ஸ்டாகிராம் ஸ்டோரி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில் அவர் லடாக்கில் ஷூட்டிங்கின்போது, வெள்ளத்தில் நடுவே சிக்கிக்கொண்டதாக பதிவிட்டுள்ளார். இது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

R Madhavan : ஷூட்டிங் போன இடத்தில் வந்த சிக்கல்.. லடாக்கில் வசமாக மாட்டிக்கொண்ட நடிகர் மாதவன்!
நடிகர் மாதவன்Image Source: Social Media
Barath Murugan
Barath Murugan | Published: 28 Aug 2025 20:34 PM

நடிகர் ஆர்.மாதவன் (R. Madhavan) தமிழ் சினிமாவில் பல்வேறு படங்ககள் வெளியாகியிருக்கிறது. அந்த வகையில் இவர் தற்போது பாலிவுட் படங்களில் நடிப்பதிலும் ஆர்வம் செலுத்தி வருகிறார். இந்நிலையில், நடிகர் ஆர்.மாதவன் வெளியிட்ட இன்ஸ்டாகிராம் ஸ்டோரி (Instagram Story) ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. அந்த ஸ்டோரியில் லடாக்கில் (Ladakh) வெள்ளத்தின் நடுவே சிக்கியுள்ளதாக பதிவிட்டுள்ளார். இமாச்சலப் பிரதேசம் மாநிலத்தில் லடாக் அமைந்துள்ளது. லடாக்கில் சமீப காலமாக கனமழை பெய்துவரும் நிலையில், அங்கு பல இடங்களில் அதிக வெள்ளப்பெருக்கு (Flood) ஏற்பட்டிருக்கிறது. இந்நிலையில் லடாக்கில் உள்ள லேயில் பெய்த கனமழையில் நடிகர் ஆர். மாதவன் சிக்கியிக்கொண்டதாக அவர் பதிவிட்டுள்ளார். இந்த தகவலை அவர் தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பதிவிட்டுள்ளார்.

“17- ஆண்டுகளுக்கு பின் மீண்டும் லேயில் இது போன்று சிக்கியுள்ளதாகக் கூறியுள்ளார். 17 வருடங்களுக்கு முன் 3 இடியட்ஸ் படத்தின் ஷூட்டிங்கின்போது, இது போ லடாக்கில் வெள்ளத்தில் மாடிக்கொண்டதாக அவர் நினைவுகூர்ந்துள்ளார். மேலும் விமானங்கள் ரத்து செய்ததால் அங்கியிருந்து வெளியேறாமல் இருப்பதாகவும், லே ஒரு அழகான இடம் என்றாலும், இயற்கையின் சக்திக்கு முன் நாம் சிரியவர்கள்தான்” என்று நடிகர் ஆர். மாதவன் அந்த பதிவில் தெரிவித்துள்ளார்.

இந்த தகவலானது ரசிகர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது. நடிகர் ஆர். மாதவனுக்கு இப்படி ஒரு நிலைமையா ? என ரசிகர்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

இதையும் படிங்க : ரீ ரிலீஸாகும் மாதவனின் சூப்பர் ஹிட் படம் ரன் – படக்குழு வெளியிட்ட புது அப்டேட்!

நடிகர் ஆர். மாதவனின் இன்ஸ்டாகிராம் ஸ்டோரி புகைப்படம் :

Screenshot 2025 08 28 194512

நடிகர் ஆர். மாதவனின் புதிய தமிழ் திரைப்படங்கள் :

நடிகர் ஆர். மாதவனின் நடிப்பில் தமிழில் இறுதியாக வெளியான படம் டெஸ்ட். இப்படத்தில் நடிகை நயன்தாரா, சித்தார்த்துடன், மாதவனும் இணைந்து நடித்திருந்தார். இப்படமானது கடந்த 2025, மார்ச் மாதத்தில் நேரடியாக நெட்பிளிக்ஸில் வெளியானது. இந்த படத்தய் தொடர்ந்து மாதவன் இந்தியில் திரைப்படங்கள் மற்றும் வெப் தொடர்களில் நடிப்பதில் கவனம் செலுத்தி வருகிறார். மேலும் நடிகர் ஆர். மாதவன் , லோகேஷ் கனகராஜின் தயாரிப்பில் உருவாகும் பென்ஸ் படத்திலும் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

இதையும் படிங்க : 15வது ஆண்டு திருமணநாள் கொண்டாட்டம்.. ஸ்பெஷல் வீடியோவை வெளியிட்ட சிவகார்த்திகேயன்!

பென்ஸ் படத்தில் மாதவன் :

இயக்குநர் பாக்கியராஜ் கண்ணனின் இயக்கத்தில் உருவாகிவரும் படம் பென்ஸ். இப்படத்தில் ராகவா லாரன்ஸ் மற்றும் நிவின் பாலி இணைந்து நடித்து வருகின்றனர். இப்படத்தை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தயாரித்து வரும் நிலையில், LCU-வில் இப்படமும் இணைந்துள்ளது. இந்த படத்தில் நடிகர் ஆர். மாதவன் நடித்து வருவதாக கூறப்படுகிறது. அனலை இது குறித்து படக்குழு எந்தவித அறிவிப்புகளையும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.