ரீ ரிலீஸாகும் மாதவனின் சூப்பர் ஹிட் படம் ரன் – படக்குழு வெளியிட்ட புது அப்டேட்!
Run Movie Re Release: நடிகர் மாதவன் நடிப்பில் வெளியாகி ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றப் படம் ரன். தற்போது சினிமா துறையில் ரீ ரிலீஸ் கலாச்சாரம் அதிகரித்துள்ள நிலையில் மாதவனின் ரன் படத்தை மீண்டும் திரையரங்குகளில் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது. இது குறித்த அறிவிப்பையும் வெளியிட்டுள்ளது.

தமிழ் சினிமா மட்டும் இன்றி பான் இந்திய அளவில் ரீ ரிலீஸ் கலாச்சாரம் தற்போது அதிகரித்துள்ளது. முன்பு எல்லாம் ரேண்டமாக படங்கள் ரீ ரிலீஸ் செய்யப்பட்டுக்கொண்டிருந்த நிலையில் தற்போது நடிகர்களின் பிறந்த நாள் அல்லது ஏதேனும் முக்கியமான நாளிற்கு அவர்களின் படங்களை ரீ ரிலீஸ் செய்து வருகின்றனர். ஒரு சில படங்களை ரீ ரிலீஸ் செய்யக்கோரி ரசிகர்கள் சமூக வலைதளப் பக்கத்தில் கோரிக்கையும் வைத்து வருகின்றனர். இந்த நிலையில் தற்போது மாதவனின் (Actor Madhavan) நடிப்பில் வெளியாகி ஹிட் அடித்தப் படத்தை மீண்டும் திரையரங்குகளில் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது. அதன்படி நடிகர் மாதவனின் நடிப்பில் கடந்த செப்டம்பர் மாதம் 5-ம் தேதி 2002-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் மாபெரும் வரவேற்பைப் பெற்றப் படம் ரன்.
இந்தப் படத்தை இயக்குநர் லிங்குசாமி எழுதி இயக்கி இருந்தார். இதில் நடிகர் மாதவனுக்கு ஜோடியாக நடிகை மீரா ஜாஸ்மின் நடித்து இருந்தார். இவர்களுடன் இணைந்து நடிகர்கள் ரகுவரன், அதுல் குல்கர்னி, விவேக், அனு ஹாசன், ஜானகி சபேஷ், ராஜஸ்ரீ, கலைராணி, எஸ்.என்.லட்சுமி, மதன் பாப், விஜயன், நெல்லை சிவா, ரவி பிரகாஷ், போண்டா மணி, சாத்தப்பன் நந்தகுமார், சம்பத் ராம், பாவா லட்சுமணன், பெஞ்சமின் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
ரன் படத்தின் ரீ ரிலீஸ் எப்போது தெரியுமா?
ரொமாண்டிக் ஆக்ஷன் படமாக வெளியான இந்த ரன் படம் செப்டம்பர் 5-ம் தேதி வந்தால் 23 ஆண்டுகளை நிறைவு செய்கின்றது. இந்த நிலையில் இந்தப் படத்தை ரீ ரிலீஸ் செய்ய வேண்டும் என்று படத்தின் தயாரிப்பு நிறுவனம் முடிவு செய்துள்ளது. முன்னதாக பேட்டி ஒன்றில் கலந்துகொண்ட இயக்குநர் லிங்குசாமி ரன் படத்தின் ரீ ரிலீஸ் குறித்து பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் 23 வருடங்களை கடந்தும் இந்தப் படத்தின் மீதான மக்களின் வரவேற்பு அப்படியே இருக்கிறது. அதனால் விரைவில் உங்களுக்கு அருகில் உள்ள திரையரங்குகளில் இந்தப் படம் வெளியிடப்படும் என்று படக்குழு வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Also Read… ஜெயிலர் 2 படத்தில் ஃபைனல் ஷூட்டிங் எங்கு எப்போது? வைரலாகும் தகவல்
படக்குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:
“Aura” around this Film remains the same even after 23 years, set to re-release soon in theatres near you. #Runmovie #RUN@dirlingusamy @ActorMadhavan @AMRathnamOfl #meerajasmine @MegaSuryaProd pic.twitter.com/zIE165ekUB
— Thirrupathi Brothers (@ThirrupathiBros) August 27, 2025
Also Read… மதராஸி படத்தில் நான் நடிக்க முக்கிய காரணம் ஏ.ஆர்.முருகதாஸ் தான் – பிஜு மேனன்