ஐடி ஊழியரை கடத்தி அடித்து துன்புறுத்திய விவகாரம் – நடிகை லட்சுமி மேனன் மீது வழக்குப் பதிவு
Actress Lakshmi Menon: மலையாளம் மற்றும் தமிழ் மொழிகளில் பலப் படங்களில் நடித்ததன் மூலம் ரசிகர்களிடையே பிரபலமானவர் நடிகை லட்சுமி மேனன். இவர் சமீபத்தில் பெரிய அளவில் படங்களில் எதுவும் நடிக்காமல் இருந்தார். இந்த நிலையில் இன்றைய தலைப்புச் செய்திகளில் நடிகை நித்யா மேனன் இடம் பிடித்துள்ளார்.

சினிமாவில் நடிகைகள் தொடர்ந்து அவர்களின் புதுப்படங்களின் அறிவிப்புகளின் காரணமாக செய்திகளில் இடம் பிடித்து வருகின்றனர். ஆனால் நடிகை லட்சுமி மேனன் (Actress Lakshmi Menon) மீது தற்போது கடத்தல் வழக்கு ஒன்று பதியப்பட்டுள்ளது. அதன்படி சமீபத்தில் கொச்சியில் உள்ள ஒரு ரெஸ்டோ பாரில் இரண்டு குழுவினர் இடையே ஏற்பட்ட பிரச்னையில் ஐடி ஊழியர் ஒருவரை கடத்தி துன்புறுத்தியதாக வழக்கு ஒன்று பதியப்பட்டுள்ளது. இதில் ஐடி ஊழியரை கடத்திய கும்பலில் நடிகை லட்சுமி மேனனும் இருந்ததாக கூறப்படுகின்றது. அதன்படி நடிகை லட்சுமி மேனனின் நண்பர்கள் மிதுன், அனீஷ் மற்றும் சோனா மோல் ஆகியோர் இந்த வழக்கில் முன்னதாக கைது செய்யப்பட்டனர். இந்த நிலையில் இவர்களின் குழுவின் நடிகை லட்சுமி மேனன் இந்தக் கும்பலைச் சேர்ந்தவர் என்ற புகாரைத் தொடர்ந்துஅவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டதாகக் கூறப்படுகின்றது.
இந்த வழக்கில் நடிகை லட்சுமி மேனனை அழைத்து வந்து நேரில் விசாரணை நடத்தப்படும் என்று காவல்துறையினர் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நடிகை லட்சுமி மேனன் இறுதியாக சப்தம் படத்தில் நடித்து இருந்த நிலையில் தற்போது இப்படி ஒரு வழக்கில் அவரது பெயர் அடிபடுவது ரசிகர்களிடையே வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.




மலையாளம் மற்றும் தமிழில் ஹிட் படங்களில் நடித்த நடிகை லட்சுமி மேனன்:
கடந்த 2011-ம் ஆண்டு வெளியான ரகுவின்தே ஸ்வந்தம் ரசியா என்ற மலையாள படத்தின் மூலம் சினிமாவில் நடிகையாக அறிமுகம் ஆனவர் நடிகை லட்சுமி மேனன். அதனைத் தொடர்ந்து மலையாள சினிமாவில் ஐடியல் கப்பில் என்ற படத்தில் நடித்தார். மலையாளத்தில் நடிகையாக அறிமுகம் ஆன அடுத்த ஆண்டே 2012-ம் ஆண்டு தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகம் ஆனார் லட்சுமி மேனன்.
அதன்படி 2012-ம் ஆண்டு நடிகர் சசிகுமார் நடிப்பில் வெளியான சுந்தரபாண்டியன் படத்தின் மூலம் நடிகை லட்சுமி மேனன் தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகம் ஆனார். அவர் அறிமுகம் ஆன முதல் படத்திலேயே ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது.
இந்தப் படத்தை தொடர்ந்து நடிகை லட்சுமி மேனன் தமிழ் சினிமாவில் கும்கி, குட்டிப்புலி, பாண்டியநாடு, நான் சிங்க மனிதன், மஞ்சப்பை, ஜிகர்தண்டா, கொம்பன், வேதாளம், வாசுவும் சரவணனும் ஒன்னா படிச்சவங்க, மிருதன், ரெக்க, புலிக்குத்திப் பாண்டி என பலப் படங்களில் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Also Read… மதராஸி படத்தில் நான் நடிக்க முக்கிய காரணம் ஏ.ஆர்.முருகதாஸ் தான் – பிஜு மேனன்
நடிகை லட்சுமி மேனனின் சமீபத்திய இன்ஸ்டாகிராம் பதிவு:
View this post on Instagram