மதராஸி படத்தில் நான் நடிக்க முக்கிய காரணம் ஏ.ஆர்.முருகதாஸ் தான் – பிஜு மேனன்
Actor Biju Menon: மலையாள சினிமாவில் மாஸ் ஹீரோவாக இருக்கும் பிஜு மேனன் அவ்வப்போது மற்ற மொழிகளான தமிழ், தெலுங்கு மற்றும் கன்னட மொழிகளிலும் தொடர்ந்து நடித்து வருகிறார். அந்த வகையில் நடிகர் பிஜு மேனன் தற்போது சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள மதராஸி படத்தில் நடித்துள்ளார்.

மலையாள சினிமாவில் கடந்த 1995-ம் ஆண்டு வெளியான புத்ரன் படத்தின் மூலம் நடிகராக அறிமுகம் ஆனவர் நடிகர் பிஜு மேனன் (Biju Menon). மலையாள சினிமாவில் 100க்கும் அதிமகான படங்களில் நடித்த இவர் நாயகனாக மட்டும் இன்றி வில்லன், சிறப்பு கதாப்பாத்திரம், காமெடியன் என பல கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளார். இவரது நடிப்பில் மலையாள சினிமாவில் வெளியான பலப் படங்கள் மலையாள சினிமா ரசிகர்களிடையே மட்டும் இன்றி தமிழ் உட்பட பல தென்னிந்திய சினிமா ரசிகரக்ளிடையே தொடர்ந்து நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் நடிகர் பிஜு மேனன் நடிப்பில் மலையாள சினிமாவில் வெளியான அய்யப்பனும் கோஷியும் படம் மாபெரும் வரவேற்பைப் பெற்றது. இந்தப் படத்தில் நடித்ததற்காகா சிறந்த துணை நடிகருக்கான தேசிய விருது நடிகர் பிஜு மேனனுக்கு கிடைத்தது குறிப்பிடத்தக்கது.
இதனைத் தொடர்ந்து நடிகர் பிஜு மேனன் நடிப்பில் மலையாளத்தில் வெளியான பலப் படங்கள் தென்னிந்திய ரசிகர்களிடையே கவனத்தைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. மேலும் நடிகர் பிஜு மேனன் கடந்த 2005-ம் ஆண்டு வெளியான மஜா படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகம் ஆனார். அதனைத் தொடர்ந்து பலப் படங்களில் நடிகர் பிஜு மேனன் தமிழ் சினிமாவில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.




முருகதாஸ் படத்தில் ஒரு அங்கமாக இருப்பது மகிழ்ச்சி:
இந்த நிலையில் நடிகர் பிஜு மேனன் தற்போது இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் உருவாகியுள்ள மதராஸி படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். சமீபத்தில் நடைப்பெற்ற படத்தின் இசை வெளியீட்டு விழா மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டு பேசிய நடிகர் பிஜு மேனன் முருகதாஸ் படத்தில் நடித்து இருப்பது மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்துவதாக தெரிவித்து இருந்தார்.
மேலும் இந்தப் படத்தில் இசையமைத்துள்ள இசையமைப்பாளர் அனிருத் எனக்கு மிகவும் பிடிக்கும். அவருடைய மிகப்பெரிய ரசிகன் நான் என்றும் அவர் தெரிவித்து இருந்தார். மேலும் இந்தப் படத்தில் நடிக்க முக்கிய காரணம் ஏ.ஆர்.முருகதாஸ் தான் என்றும் அவர் தெரிவித்து இருந்தார்.
Also Read… மதராஸி படத்தின் ட்ரெய்லரை பாராட்டிய 3 BHK பட நாயகி!
இணையத்தில் கவனம் பெரும் பிஜு மேனன் பேச்சு:
#BijuMenon
– I’m really happy to be a part of a Murugadoss film #Madharaasi has shaped up so well.
– I’ve always been a big fan of Anirudh.
– The main reason I chose this project was Murugadoss sir. My character has been written so beautifully.#Sivakarthikeyan pic.twitter.com/2wp3mlllKN— Movie Tamil (@_MovieTamil) August 24, 2025
Also Read… மதராஸி படத்தின் ட்ரெய்லரை பாராட்டிய 3 BHK பட நாயகி!