தளபதி விஜயின் ஜன நாயகன் படத்தில் பிரபல நடிகர் தொடபான காட்சிகள்?
Jana Nayagan Movie: நடிகர் தளபதி விஜய் நடிப்பில் தற்போது ரசிகர்கள் மிகவும் எதிர்பார்த்து காத்திருக்கும் படம் ஜன நாயகன். வருகின்ற பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ள இந்தப் படத்தின் பணிகள் தற்போது விறு விறுப்பாக நடைப்பெறு வருகின்றது.

கோலிவுட் சினிமாவில் உட்ச நட்சத்திரமாக இருப்பவர் நடிகர் விஜய் (Actor Vijay). இவரது நடிப்பில் இதுவரை 68 படங்கள் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. தமிழ் சினிமா மட்டும் இன்றி தென்னிந்திய சினிமா முழுவதும் பல கோடி ரசிகர்களை வைத்து நடிகர் விஜய் தற்போது தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சியை தொடங்கியுள்ளார். வருகின்ற 2026 சட்டமன்ற தேர்தலில் போட்டியிட உள்ளதாக அறிவித்த விஜய் முழு நேரமும் அரசியலில் கவனம் செலுத்த வேண்டும் என்பதற்காக இனி படங்களில் நடிக்க மாட்டேன் என்றும் இவரது நடிப்பில் தற்போது 69-வது படமாக உருவாகும் ஜன நாயகன் தான் இவர் நடிக்கும் இறுதிப் படம் என்றும் சமீபத்தில் அறிவித்தார். இந்த அறிவிப்பு அவரது ரசிகர்களுக்கு பேரதிர்ச்சியாக இருந்தது.
சினிமாவில் தன்னை இவ்வளவு பெரிய உயரத்தில் அமர வைத்து அழகு பார்த்த தமிழக மக்களுக்கு எதாவது நல்லது செய்ய வேண்டும் நோக்கத்தில் தான் அரசியல் கட்சி தொடங்கியதாக கூறிய விஜய் முழு நேர அரசியலில் ஈடுபட வேண்டும் என்று இப்படி ஒரு முடிவை எடுத்ததாக அவரது சுற்று வட்டாரங்கள் தொடர்ந்து பேட்டிகளில் தெரிவித்து வந்தது குறிப்பிடத்தக்கது.




ஜன நாயகன் படத்தில் எம்ஜிஆர் தொடர்பான கட்சிகள்?
இந்த நிலையில் நடிகர் விஜய் நடிப்பில் தற்போது உருவாகி வரும் படத்திற்கு ஜன நாயகன் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தை இயக்குநர் எச்.வினோத் இயக்கி வருகிறார். மேலும் விஜய் நாயகனாக நடிக்கும் இந்தப் படத்தில் அவருக்கு ஜோடியாக நடிகை பூஜா ஹெக்டே நடித்துள்ளார். இவர்களுடன் இணைந்து நடிகர்கள் பாபி தியோல், கௌதம் வாசுதேவ் மேனன், மமிதா பைஜு, பிரகாஷ் ராஜ், நரேன், பிரியாமணி, ரெபா மோனிகா ஜான், பாபா பாஸ்கர், மோனிஷா பிளெஸ்ஸி, டீஜய் அருணாசலம், இர்பான் ஜைனி, ரேவதி, ஸ்ரீநாத், அருண் குமார் ராஜன், நிழல்கள் ரவி, என்.ஆனந்த் என பலர் இந்தப் படத்தில் நடித்துள்ளனர்.
நடிகர் விஜய் இந்தப் படத்தில் காவல் துறை அதிகாரியாக நடித்துள்ளது முன்னதாக படக்குழு வெளியிட்டுள்ள அறிமுக வீடியோவின் மூலம் தெரியவந்தது. இந்த நிலையில் இந்தப் படத்தில் பழம்பெரும் நடிகர் எம்ஜிஆர் தொடர்பான காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளதாக சினிமா வட்டாரங்களில் தகவல்கள் பரவி வைரலாகி வருகின்றது.
Also Read… ஹார்ஸ்டாரில் மிஸ் செய்யாமல் பார்க்கவேண்டிய படம் ஃபலிமி!
ஜன நாயகன் படக்குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:
9th January 2026 🌋🌋 pic.twitter.com/0BBZxrQnVe
— Jana Nayagan (@JanaNayaganVJ) August 14, 2025
Also Read… ஜெயிலர் 2 படத்தில் ஃபைனல் ஷூட்டிங் எங்கு எப்போது? வைரலாகும் தகவல்