ராம் சரண் அம்மாவாக நடிக்கும் வாய்ப்பு.. நடிக்க மறுத்த நடிகை!
Actress Who Refused To Act With Ram Charan : தமிழ் சினிமாவில் பல முன்னணி நடிகைகள் இருந்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த 2024ம் ஆண்டு வெளியான லப்பர் பந்து படத்தின் மூலம், மிகவும் பிரபலமானவர் ஸ்வாசிகா. இவர் நேர்காணல் ஒன்றில் ராம் சரனுடன் நடிக்க மறுத்த படத்தை பற்றி ஓபனாக பேசியுள்ளார்.

மலையாள சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருந்து வருபவர் ஸ்வாசிகா (Swasika). இவர் தமிழ் ஆரம்பத்தில் சில படங்களில் துணை நடிகை வேடங்களில் நடித்திருக்கிறார் . குறிப்பாக சாட்டை (Saattai) திரைப்படத்தில் சமுத்திரக்கனியின் மனைவி வேடத்தில் நடித்திருந்தார். ஆரம்பகாலகட்டத்தில் இவருக்கு தமிழில் பெருமளவு பட வாய்ப்புகள் எதுவும் கிடைக்கவில்லை. இந்நிலையில், இவர் கடந்த 2024ம் ஆண்டு வெளியான லப்பர் பந்து (Lubber Pandhu) படத்தில், ஹரிஷ் கல்யாணிற்கு (Harish Kalyan) மாமியாராகவும், அட்டகத்தி தினேஷின் மனைவியாகவும் நடித்திருந்தார். இந்த படத்தில் நடித்து நடிகை ஸ்வாசிகா மிகவும் பிரபலமானார்.
இதை தொடர்ந்து இவர் தமிழில் அடுத்தடுத்த படங்களிலும் நடித்து வருகிறார். ரெட்ரோ (Retro) மற்றும் மாமன் (Maaman) போன்ற படங்களிலும் நடித்திருந்தார். இந்நிலையில், சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பேசிய இவர், ராம் சரணின் (Ram Charan) பெத்தி (Peddi) திரைப்படத்தில் நடிக்கும் வாய்ப்பை நிராகரித்தாக தெரிவித்துள்ளார். அது குறித்து விவரமாக பார்க்கலாம்.




இதையும் படிங்க : சோனு டூ சாந்தனு… ஹேப்பி பர்த்டே சாந்தனு பாக்யராஜ்!
ராம் சரணின் படத்தில் நடிக்க மறுத்த நடிகை ஸ்வாசிகா :
அந்த நேர்காணலில் பேசிய நடிகை ஸ்வாசிகா, “எனக்கு சினிமாவில் அடுத்தடுத்த திரைப்படங்களில் அம்மா வேடங்களில் நடிக்கும் வாய்ப்புகள்தான் அதிகமாக வருகின்றன. சமீபத்தில் கூட, தெலுங்கு நடிகர் ராம் சரணின் பெத்தி படத்தில், அவருக்கு அம்மாவாக நடிப்பதற்கு அழைப்பு வந்தது. அந்த விஷயம் எனக்கு மிகவும் அதிர்ச்சியாக இருந்தது.
இதையும் படிங்க : என்னால சினிமாவில் அப்படிதான் இருக்க முடியும் – நடிகை கல்யாணி பிரியதர்ஷன் சொன்ன விசயம்
அந்த படத்தில் நான் நடித்திருந்தால் எவ்வாறு இருக்கும் என தெரியவில்லை. ஆனால் சினிமாவில் நான் இந்த கட்டத்தில், அவருக்கு அம்மாவாக படிக்கவேண்டிய எந்த அவசியமும் இல்லை. எதிர்காலத்தில் அப்படி ஒரு வாய்ப்புகள் கிடைத்தால் அதை பற்றி யோசித்து பார்ப்பேன்” என்று நடிகை ஸ்வாசிகா அந்த நேர்கணலில் ஓபனாக பேசியுள்ளார். இந்த தகவலானது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.
நடிகை ஸ்வாசிகாவின் லேட்டஸ்ட் இன்ஸ்டாகிராம் போஸ்ட் :
View this post on Instagram
ராம் சரணின் பெத்தி திரைப்படம் :
நடிகர் ராம் சரணின் நடிப்பில் 16வதாக உருவாகி வரும் திரைப்படம் பெத்தி. இந்த படத்தில் நடிகர் ராம் சரண் கதாநாயகனாக நடிக்க, அவருடன் நடிகர்கள் ஜான்வி கபூர், ஜகபதி பாபு, திவ்யயெண்டு ஷர்மா மற்றும் சிவராஜ்குமார் உட்பட பல்வேறு பிரபலங்கள் நடித்து வருகின்றனர். இந்த படத்தை தெலுங்கு இயக்குநர் புச்சிபாபு சனா இயக்கி வருகிறார்.
மேலும் இப்படத்திற்கு இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் இசைஅயமைத்து வருகிறார். இந்த படமானது வரும் 2026ம் ஆண்டு மார்ச் 27ம் தேதியில் உலகமெங்கும் வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.