விஷ்ணு விஷாலின் ‘ஆர்யன்’ படத்தின் ரிலீஸ் எப்போது? வைரலாகும் தகவல்!
Aaryan Movie Release Update : தமிழ் சினிமாவில் பிரபல நடிகர்களில் ஒருவராக இருந்து வருபவர் விஷ்ணு விஷால். இவரின் நடிப்பில் ராட்சசன் படத்தை அடுத்தாக, அதிரடி க்ரைம் திரில்லர் படமாக உருவாகியிருப்பது ஆர்யன். தற்போது இப்படத்தின் ரிலீஸ் தேதி குறித்த தகவல் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

நடிகர் விஷ்ணு விஷாலின் (Vishnu Vishal) நடிப்பில் தமிழ் பல படங்கள் வெளியாகியிருகிறது. இவரின் நடிப்பில் வெளியான பல படங்கள் இவருக்கு நல்ல வரவேற்பை கொடுத்திருக்கிறது. அந்த வகையில் இவரின் நடிப்பில் இறுதியாக வெளியான படம் ஓஹோ எந்தன் பேபி (Oho Enthan Baby). இந்த படத்தில் நடிகர் விஷ்ணு விஷாலின் சகோதரர் ருத்ரா (Rudra) முன்னணி வேடத்தில் நடித்திருந்தார். இவர் இப்படத்தின் மூலம்தான் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமாகியிருக்கிறார். ஓஹோ எந்தன் பேபி படத்தை இயக்குநர் கிருஷ்ணகுமார் ரவிக்குமார் இயக்கியிருந்தார். மேலும் நடிகர் விஷ்ணு விஷால்தான் இப்படத்தை தயாரித்திருந்தார். இந்த படமானது வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. இப்படத்திற்கு முன், நடிகர் விஷ்ணு விஷாலின் நடிப்பில் உருவாகியிருந்த படம்தான் ஆர்யன் (Aaryan). இப்படத்தை இயக்குநர் பிரவின் கே (Praveen K.) இயக்கியுள்ளார்.
தற்போது இப்படத்தின் ரிலீஸ் குறித்த தகவல்கள் வெளியாகிவருகிறது. இப்படமானது வரும் 2025, அக்டோபர் மாதத்தில் வெளியிட படக்குழு திட்டமிட்டு வருகிறதாம். இப்படமானது தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் மற்றும் மலையாளம் என பான் இந்திய மொழிகளில் வெளியாகவுள்ளதாம்.
இதையும் படிங்க : மீண்டும் இணைந்த மத கஜ ராஜா கூட்டணி.. ‘விஷால்35’ படத்தில் அஞ்சலி!
விஷ்ணு விஷாலின் ஆர்யன் திரைப்படம் :
நடிகர் விஷ்ணு விஷாலின் முன்னணி நடிப்பில் உருவாகியுள்ள படம் ஆர்யன். இப்படத்தை இயக்குநர் பிரவின் கே இயக்கியுள்ளார். மேலும் நடிகர் விஷ்ணு விஷால் தனது வி.வி. ஸ்டூடியோஸ் நிறுவனத்தின் கீழ் தயாரித்துள்ளார். இப்படம் கடந்த 2022 ஆம் ஆனது அறிவிக்கப்பட்ட நிலையில், அதை தொடர்ந்து படத்தின் ஷூட்டிங் நடைபெற்று வந்தது. இந்த படத்தில் விஷ்ணு விஷாலுடன் நடிகர்கள் ஷ்ரதா ஸ்ரீநாத், செல்வராகவன் மற்றும் வாணி போஜன் என பல பிரபலங்கள் இணைந்து நடித்துள்ளனர்.
இதையும் படிங்க : தீபாவளிக்கு ரிலீஸாகும் 2 படங்கள்.. கவனம் பெறும் பிரதீப் ரங்கநாதன்!
இந்த படத்திற்கு இசையமைப்பாளார் சாம் சி. எஸ் இசையமைத்துள்ளார். இந்த படத்தின் ஷூட்டிங் கடந்த 2025, பிப்ரவரி மாதத்தில் முழுமையாக நிறைவடைந்திருந்தது. அதைத் தொடர்ந்த இப்படமானது இறுதிக்கட்ட வேலைகளில் இருந்து வந்தது. இதை தொடர்ந்து இப்படத்தை படக்குழு வரும் 2025, அக்டோபர் மாதத்தில், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியிட திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இது குறித்து படக்குழு இன்னும் எந்தவித அறிவிப்புகளையும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
ஆர்யன் படம் குறித்து விஷ்ணு விஷால் வெளியிட்ட பதிவு :
View this post on Instagram
விஷ்ணு விஷாலின் புதிய திரைப்படங்கள் :
நடிகர் விஷ்ணு விஷாலின் நடிப்பில் ஆர்யன் படத்தை தொடர்ந்து, இரண்டு வானம் மற்றும் மோகன்தாஸ் ஆகிய படங்களில் நடித்து வந்தார். இதில் இரண்டாம் வானம் படத்தின் ஷூட்டிங் முழுமையாக நிறுவடைந்திருக்கும் நிலையில், இப்படமும் இந்த 2025 ஆம் ஆண்டிற்குள் வெளியாக அதிக வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது. இதில் விஷ்ணு விஷாலுடன், நடிகை மமிதா பைஜூ நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.