Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

வீர வணக்கம் முதல் குற்றம் புதிது வரை… இந்த வாரம் தென்னிந்திய சினிமாவில் புது வரவு என்ன?

Theatre Release This Week: தென்னிந்திய சினிமாவில் ஒவ்வொரு வாரமும் புது படங்களில் வரவு அதிகரித்துக்கொண்டே தான் இருக்கின்றது. இந்த நிலையில் இந்த வாரம் தமிம் மற்றும் தெலுங்கு மொழிகளில் வெளியாக உள்ள முக்கியப் படங்கள் என்ன என்ன என்பது குறித்த ஒரு தொகுப்பை தற்போது பார்க்கலாம்.

வீர வணக்கம் முதல் குற்றம் புதிது வரை… இந்த வாரம் தென்னிந்திய சினிமாவில் புது வரவு என்ன?
வீர வணக்கம் - குற்றம் புதிதுImage Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 28 Aug 2025 19:41 PM

வீர வணக்கம்: இயக்குநர் அனில் வி நாகேந்திரன் எழுதி இயக்கிய படம் வீர வணக்கம். இந்தப் படத்தில் நடிகர்கள் பரத் மற்றும் சமுத்திரகனி (Samuthrakani) இருவரும் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். இவர்களுடன் இணைந்து நடிகர்கள் ரித்தேஷ், பிரேம் குமார், ரமேஷ் பிஷாரடி, சுரபி லட்சுமி, பி.கே. மேதினி, ஆதர்ஷ், சித்தங்கனா, ஐஸ்விகா என பலர் இந்தப் படத்தில் நடித்துள்ளனர். மேலும் இந்தப் படத்திற்கு எம் கே அர்ஜுனன், பெரும்பாவூர் ஜி.ரவீந்திரநாத், ஜேம்ஸ் வசந்தன், சி.ஜே.குட்டப்பன் மற்றும் அஞ்சல் உதயகுமார் ஆகியோர் இணைந்து இசையமைத்துள்ளனர். போராட்டகாரர்களுக்கும், ஆதிக்க சாதியினருக்கும் இடையே நடக்கும் பிரச்னையை மையமாக வைத்து இந்தப் படம் உருவாகியுள்ளது. இந்தப் படத்தின் ட்ரெய்லர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே கவனத்தைப் பெற்ற நிலையில் தற்போது படம் நாளை 29-ம் தேதி ஆகஸ்ட் மாதம் 2025-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

வீர வணக்கம் படத்தின் ட்ரெய்லர் இதோ:

ஹிருதயப்பூர்வம்: இயக்குநர் சத்யன் அந்திகாடு இயக்கியுள்ள படம் ஹிருதயப்பூர்வம். இந்தப் படத்தில் நடிகர் மோகன்லால் நாயகனாக நடித்துள்ளார். இந்த 2025-ம் ஆண்டு தொடங்கியதில் இருந்து நடிகர் மோகன்லால் நடிப்பில் முன்னதாகவே இரண்டு படங்கள் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே  மாபெரும் வரவேற்பைப் பெற்றது. இதனைத் தொடர்ந்து தற்போது 3-வது படம் திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. இந்தப் படத்தில் நடிகை மாளவிகா மோகனன் நாயகியாக நடித்துள்ள நிலையில் இவர்களுடன் இணைந்து நடிகர் சங்கீத் பிரதாப் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். இந்தப் படம் இன்று 28-ம் தேதி ஆகஸ்ட் மாதம் 2025-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.

ஹிருதயப்பூர்வம் படத்தின் ட்ரெய்லர் இதோ:

லோகா: நடிகை கல்யாணி பிரியதர்ஷன் மற்றும் நடிகர் நஸ்லேன் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து உள்ள படம் லோகா. இந்தப் படத்தை இயக்குநர் டாம்னிக் அருண் எழுதி இயக்கி உள்ளார். சூப்பர் ஹீரோ கதையை மையமாக வைத்து வெளியான இந்தப் படத்தில் நடிகை கல்யாணி பிரியதர்ஷன் சூப்பர் ஹீரோவாக நடித்துள்ளார். மேலும் இந்தப் படத்தின் ட்ரெய்லர் வெளியான போதே படத்தின் மீதான ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகரித்து இருந்தது. இந்த நிலையில் இந்தப் படம் இன்று 28-ம் தேதி ஆகஸ்ட் மாதம் 2025-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.

லோகா படத்தின் ட்ரெய்லர் இதோ:

ஓடும் குதிரை சாடும் குதிரை: நடிகர் ஃபகத் பாசில் நாயகனாக நடித்துள்ள படம் ஓடும் குதிரை சாடும் குதிரை. இந்தப் படத்தில் நடிகை கல்யாணி பிரியதர்ஷன் நாயகியாக நடித்துள்ளார். இந்தப் படத்தை இயக்குநர் அல்தாஃப் சலீம் எழுதி இயக்கி இருந்தார். மேலும் காமெடி ஜானரை மையமாக வைத்து உருவாகியுள்ள இந்தப் படம் நாளை 29-ம் தேதி ஆகஸ்ட் மாதம் 2025-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

ஓடும் குதிரை சாடும் குதிரை படத்தின் ட்ரெய்லர் இதோ: