Vishnu Vishal : கட்டா குஸ்தி ரவுண்ட் 2 திரைப்படம்.. ப்ரோமோ வீடியோ ரிலீஸ் அப்டேட் இதோ!
Gatta Kusthi 2 Movie Update : பிரபல நடிகர் மற்றும் தயாரிப்பாளராக இருந்து வருபவர் விஷ்ணு விஷால். இவரின் நடிப்பில் கடந்த 2022ம் ஆண்டு வெளியாகி ஹிட்டடித்த படம் கட்டா குஸ்தி. இப்படத்தின் பாகம் 2 உருவாகுவதாக விஷ்ணு விஷால் கூறிய நிலையில், ப்ரோமோ வீடியோ ரிலீஸ் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

நடிகர் விஷ்ணு விஷால் (Vishnu Vishal) நடிப்பில் தமிழ் சினிமாவில் பல படங்கள் வெளியாகியிருக்கிறது. இவரின் நடிப்பில் கடந்த 2022ம் ஆண்டு வெளியாகி பெரும் வரவேற்பை பெற்ற திரைப்படம் கட்டா குஸ்தி (Gatta Kusthi). இந்த திரைப்படத்தை இயக்குநர் செல்ல அய்யாவு (Chella Ayyavu) இயக்கியிருந்தார். இவரின் இயக்கத்தில் இப்படத்தில் நடிகர்கள் விஷ்ணு விஷால் மற்றும் ஐஸ்வர்யா லட்சுமி (Aishwarya Lekshmi) இணைந்து நடித்திருந்தனர். இந்த படமானது கடந்த 2022ம் ஆண்டு வெளியான நிலையில், மக்களிடையே பாசிடிவ் விமர்சனங்களை பெற்றிருந்தது. இந்த படமானது குஸ்தி போட்டியை முன்னிலையாக வைத்து உருவாகியிருந்தது. காதல், அதிரடி ஆக்ஷ்ன் மற்றும் எதிர்பாராத காமெடி போன்ற கதைக்களத்துடன் இந்த திரைப்படமானது வெளியாகியிருந்தது. இந்த படத்தின் பாகம் 2 (Gatta Kusthi 2) விரைவில் உருவாகவுள்ளதாக நடிகர் விஷ்ணு விஷால் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், தற்போது இந்த கட்டா குஸ்தி பார்ட் 2 படத்தின் ப்ரோமோ வீடியோ ரிலீஸ் குறித்த அறிவிப்புகள் வெளியாகியுள்ளது. இந்த படத்தின் ப்ரோமோ வீடியோ நாளை 2025, செப்டம்பர் 1ம் தேதியில், மாலை 5 மணியளவில் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. தற்போது இந்த தகவலானது இணையத்தில் வைரலாகி வருகிறது.




இதையும் படிங்க : ஐஸ்வர்யா ராய்க்கு ஜோடியாக நடிக்க மறுத்த முன்னணி நடிகர்கள் – ராஜிவ் மேனன் சொன்ன விசயம்!
கட்டா குஸ்தி 2 படத்தின் ப்ரோமோ வீடியோ ரிலீஸ் குறித்து படக்குழு வெளியிட்ட பதிவு :
Time for a rematch 👊#SecondRound starts tomorrow at 5PM!@VVStudioz @VelsFilmIntl pic.twitter.com/JUlwNtGy9T
— Vels Film International (@VelsFilmIntl) August 31, 2025
இந்த கட்டா குஸ்தி 2 படத்தை இயக்குநர் செல்ல அய்யாவுதான் இயக்கவுள்ளார். மேலும் இந்த படத்தை வேல்ஸ் பிலிம்ஸ் நிறுவனமும் விஷ்ணு விஷால் ப்ரொடக்ஷன் நிறுவனமும் இணைந்து தயாரிக்கவுள்ளது. இப்படத்தில் நடிகர் விஷ்ணு விஷால் நடிப்பது உறுதியாகியுள்ள நிலையில், மற்ற நடிகர்கள் யார் யார் என்பது பற்றிய அறிவிப்புகள் இன்னும் வெளியாகவில்லை. இந்த படத்தின் ப்ரோமோ வீடியோ ரிலீஸ் அறிவிப்பு வெளியாகியிருக்கும் நிலையில், அந்த வீடியோவில் இப்படத்தின் நடிகர்கள் யார் யார் என்பது பற்றிய அறிவிப்புகள் இடம்பெறலாம் என கூறப்படுகிறது.
இதையும் படிங்க : சிவா மனசுல சக்தி பார்ட் 2 உருவாகிறதா? வைரலாகும் ஜீவாவின் பதிவு!
இந்த கட்டா குஸ்தி 2 படமும், குஸ்தி போட்டியை வைத்து உருவாகும் கதைக்களத்துடன் இருக்கும் என கூறப்படுகிறது. இப்படத்தின் ப்ரோமோ வீடியோ வெளியானால்தான் முழு விவரங்களும் தெரியவரும் என்பது உண்மை.
விஷ்ணு விஷாலின் நடிப்பில் உருவாகும் பார்ட் 2 திரைப்படங்கள் :
நடிகர் விஷ்ணு விஷால், ஓஹோ எந்தன் பேபி என்ற படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சியின்போது, தனது நடிப்பில் அடுத்தாக உருவாகும் பார்ட் 2 படங்களை குறித்து அறிவித்திருந்தார். அதில் அவர் கட்டா குஸ்தி 2 திரைப்படம் உருவாகும் என தெரிவித்திருந்தார். இந்நிலையில், இப்படத்தின் அறிவிப்புகளும் வெளியாகியிருக்கிறது.
இதை தொடர்ந்து அதிரடி சைக்கோ திரில்லர் திரைப்படமான ராட்சசன் 2 படமும் உருவாகவுள்ளதாகவும் அறிவித்திருந்தார். இப்படங்களை தொடர்ந்து விஷ்ணு விஷாலின் நடிப்பில் இரண்டு வானம், ஆர்யன் மற்றும் மோகன்தாஸ் போன்ற திரைப்படங்கள் உருவாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.