Aaryan : மீண்டும் அதிரடி போலீஸாக விஷ்ணு விஷால்.. ‘ஆர்யன்’ படத்தின் ரிலீஸ் எப்போது தெரியுமா?
Aaryan Movie Release Update : தமிழ் சினிமாவில் நடிகர் மற்றும் தயாரிப்பாளாராக இருந்து வருபவர் விஷ்ணு விஷால். இவரின் முன்னணி நடிப்பில் உருவாகியிருக்கும் படம் ஆர்யன். இந்த படமானது கடந்த 2023ம் ஆண்டு அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது வெளியிட்டிருக்கு தயாராகியுள்ளது. இப்படத்தின் ரிலீஸ் தேதியை விஷ்ணு விஷால் வெளியிட்டுள்ளார்.

நடிகர் விஷ்ணு விஷால் (Vishnu Vishal) நடிப்பில் தமிழ், தெலுங்கு போன்ற மொழிகளிலும் திரைப்படங்கள் வெளியாகியிருக்கிறது. அந்த வகையில் இவரின் நடிப்பில் இறுதியாக வெளியான படம் ஓஹோ எந்தன் பேபி (Oho Enthan baby). இந்த படத்தில் விஷ்ணு விஷாலின் சகோதரர் ருத்ரா என்பவர் ஹீரோவாக நடிக்க, விஷ்ணு விஷால் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார். இப்படத்தை விஷ்ணு விஷாலே தயாரித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படமானது ஓடிடியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்திற்கு முன்பேன் நடிகர் விஷ்ணு விஷால் நடித்திருந்த திரைப்படம் ஆர்யன் (Aaryan). இந்த படத்தை இயக்குநர் பிரவீன் கே (Praveen K) இயக்கியுள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த 2025 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் முழுமையாக நிறைவடைந்திருந்தது.
இந்த படத்தில் வாணி கபூர் மற்றும் ஷ்ரத்தா ஸ்ரீநாத் ஆகியோர் நாயகிகளாக நடித்துள்ளனர். இதில் அதிரடி போலீசாக விஷ்ணு விஷால் நடித்துள்ளார். ராட்சசன் படத்தை தொடர்ந்து, இந்த படமானது திரில்லர் கதைக்களத்துடன் உருவாகியுள்ளது. தற்போது இப்படத்தின் ரிலீஸ் தேதியை நடிகர் விஷ்ணு விஷால் பகிர்ந்துள்ளார். அதன்படி இப்படமானது 2025ம் ஆண்டு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அக்டோபர் 31ம் தேதி முதல் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
இதையும் படிங்க : இனிமேல் அப்படி நடிக்கமாட்டேன்.. நடிகர் விஷால் சொன்ன விஷயம்!
ஆர்யன் படத்தின் ரிலீஸ் குறித்து விஷ்ணு விஷால் வெளியிட்ட பதிவு :
#Aaryan – They say time tests you. 34 months tested me. This October, I’m back with my strength, my core, my cinema.
See you in theatres on October 31st. pic.twitter.com/OMKNPtfu5K
— VISHNU VISHAL – VV (@TheVishnuVishal) August 29, 2025
இந்த ஆர்யன் படத்தில் நடிகர் விஷ்ணு விஷாலுடன், ஷ்ரத்தா ஸ்ரீ நாத், மற்றும் வாணி கபூர் இணைந்து நடித்துள்ளனர். மேலும் நடிகர்கள் செல்வராகவன், வாணி போஜன், ஜீவா சுப்ரமணியன், மற்றும் சந்துரு என பல்வேறு பிரபலங்களும் இணைந்து நடித்துள்ளனர். இந்த் படமானது ஒரு திரில்லர் படமாக உருவாகியுள்ளது.
இந்த திரைப்படத்தை விஷ்ணு விஷால் புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின் கீழ், நடிகர் விஷ்ணு விஷால்தான் தயாரித்துள்ளார். மேலும் இப்படத்திற்கு இசையமைப்பாளார் சாம் சி.எஸ் இசையமைத்துள்ளார்.
இதையும் படிங்க : அந்த மாதிரி கதை வந்தா தமிழ் படத்தில் நாயகனாக நடிப்பேன் – நடிகர் டொவினோ தாமஸ்!
விஷ்ணு விஷாலின் புதிய திரைப்படங்கள்
நடிகர் விஷ்ணு விஷாலின் நடிப்பில் மட்டும் ஆர்யன் படத்துடன் கிட்டத்தட்ட 2 படங்ககள் உருவாகியுள்ளது. அதில் இரண்டு வானம், மோகன்தாஸ் போன்ற படங்களில் நடித்துள்ளார். இதில் இரண்டு வானம் படத்தில் விஷ்ணு விஷாலுக்கு ஜோடியாக நடிகை மமிதா பைஜூ நடித்துள்ளார். இந்த படத்தை தொடர்ந்து விஷ்ணு விஷால், ராட்சசன் 2 மற்றும் கட்டா குஷ்தி 2 போன்ற படங்களிலும் நடிக்கவுள்ளதாக தெரிவித்துள்ளார்.