Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Vishal: இனிமேல் அப்படி நடிக்கமாட்டேன்.. நடிகர் விஷால் சொன்ன விஷயம்!

Vishal About Acting In Intimate Scene : பிரபல நடிகராகவும், நடிகர் சங்க தலைவராகவும் இருந்து வருபவர் விஷால். இவர் நேற்று 2025, ஆகஸ்ட் 29ம் தேதியில் சாய் தன்ஷிகாவுடன் நிச்சயதார்த்தம் செய்துகொண்டார். இதை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், தனது பேச்சுலர் வாழ்க்கை குறித்தும் பேசியிருக்கிறார்.

Vishal: இனிமேல் அப்படி நடிக்கமாட்டேன்.. நடிகர் விஷால் சொன்ன விஷயம்!
விஷால் மற்றும் சாய் தன்ஷிகா Image Source: X
Barath Murugan
Barath Murugan | Published: 30 Aug 2025 12:00 PM

நடிகர் விஷாலின் (Vishal) முன்னணி நடிப்பில் தமிழ் சினிமாவில் பல படங்களை வெளியாகியிருக்கிறது. அந்த வகையில் இவரின் நடிப்பில் 35வது திரைப்படமாக உருவாகிவருவது மகுடம் (Magudam). இப்படத்தை இயக்குநர் ரவி அரசு (Ravi Arasu) இயக்கி வருகிறார். இப்படத்தின் டைட்டில் டீசர் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை ஏற்றிருந்தது. இந்நிலையில், நேற்று 2025 ஆகஸ்ட் 29ம் தேதியில் நடிகர் விஷால் தனது 48வது பிறந்தநாளை சிறப்பாக கொண்டாடியிருந்தார். இந்நிலையில், அவரின் பிறந்தநாளில் நடிகை சாய் தன்ஷிகாவை (Sai Dhanshika) நிச்சயதார்த்தம் செய்துகொண்டார். இது தொடர்பான புகைப்படங்களும் இணையத்தில் வைரலாகி வந்தது.

அதை அடுத்ததாக செய்தியாளர்களிடம் பேசிய விஷால், பல விஷயங்களை பகிர்ந்து கொண்டார் . அதில் அவர், இன்றுடன் எனது கடைசி பேச்சுலர் வாழ்க்கை, மேலும் சினிமாவில் இனிமேல் முத்த காட்சிகளில் நடிக்கமாட்டேன் என பல விஷயங்களை பகிர்ந்துள்ளார். அது குறித்து விவரமாக பார்க்கலாம்.

இதையும் படிங்க : லவ் மேரேஜ் முதல் கிங்டம் வரை.. இந்த வாரம் ஓடிடியில் வெளியான படங்கள்!

இனிமேல் படங்களில் நடிப்பது குறித்து விஷால் பகிர்ந்த விஷயம் :

தனது நிச்சயதார்த்தம் முடித்ததும் செய்தியாளர்களை சந்தித்த விஷால், “எனக்கு தொலைபேசியின் வாயிலாகவும், இணையத்தின் வாயிலாகவும் வாழ்த்து கூறிய அனைவருக்கும் மிக்க நன்றி. இன்னும் 2 மாதங்களில் நடிகர் சங்கத்தின் கட்டிடம் திறப்பு விழா கோலாகலமாக நடைபெறவுள்ளது. நடிகர் சங்க கட்டிடம் திறந்ததும் எங்களின் திருமணம் நடக்கும்.

இதையும் படிங்க : நடிகை சாய் தன்ஷிகாவை விட நடிகர் விஷால் இத்தனை வயது மூத்தவரா?

மேலும் பேச்சுலர் வாழ்க்கை இன்றுடன் நிறைவடைந்ததை தொடர்ந்து, என் வாழ்க்கையில் நிறைய மாற்றங்கள் வர உள்ளது. சினிமாவில் காதல் கதைக்களம் கொண்ட படங்களில் நடிப்பேன். ஆனால் முத்தக்காட்சிகளில் இனிமேல் நடிக்கமாட்டேன்” என  விஷால் கூறியுள்ளார். இது தொடர்பான தகவல்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

விஷால் பகிர்ந்த நிச்சயதார்த்தம் புகைப்படங்கள் பதிவு :

நடிகர் விஷால் மற்றும் சாய் தன்ஷிகா இருவரும் காதலித்து வருவதாக கடந்த 2025, ஜூன் மாதத்தின் இறுதியில் அறிவித்திருந்தனர். அதை தொடர்ந்து விஷாலின் பிறந்தநாளில் திருமணம் செய்வதாகவும் அறிவித்திருந்தனர். ஆனால் இன்னும் நடிகர் சங்கத்தின் கட்டிட வேலைகள் முழுவதும் நிறைவடையாத நிலையில், நேற்று 2025, ஆகஸ்ட் 29ம் தேதியில் இருவரும் நிச்சயதார்த்தம் செய்துகொண்டுள்ளார். இது தொடர்பான புகைப்படங்கள் தற்போது ரசிகர்கள் மத்தியில் படு வைரலாகி வருகிறது.