OTT Release: லவ் மேரேஜ் முதல் கிங்டம் வரை.. இந்த வாரம் ஓடிடியில் வெளியான படங்கள்!
This Week OTT Release : பான் இந்திய சினிமாவில் கடந்த ஜூலை மாதத்தில் திரையரங்குகளில் தொடர்ந்து பல படங்கள் வெளியாகியிருந்தன.அதில் கிங்டம் முதல் லவ் மேரேஜ் வரை பல படங்கள் ஓடிடியில் வெளியாகியுள்ளது. தற்போது இப்படங்களை எந்த ஓடிடியில் பார்க்கலாம் என்பது குறித்து காணலாம்.

கிங்டம் திரைப்படம் : தெலுங்கு முன்னணி ஹீரோ விஜய் தேவரகொண்டாவின் (Vijay Deverakonda) நடிப்பில் வெளியான படம் கிங்டம் (Kingdom). இந்த படத்தை தெலுங்கு இயக்குநர் கௌதம் தின்னனுரி இயக்கியிருந்தார். இவரின் இயக்கத்தில் இந்த கிங்டம் படமானது கடந்த 2025, ஜூலை 31ம் தேதி முதல் உலகமெங்கும் வெளியாகியிருந்தது. இந்த படத்தில் விஜய் தேவரகொண்டா அதிரடி கதாநாயகனாக நடித்திருந்த நிலையில், அவருக்கு ஜோடியாக நடிகை பாக்யஸ்ரீ போர்ஸ் (Bhagyashri Borse) நடித்திருந்தார். மேலும் இப்படத்திற்கு தமிழ் இசையமைப்பாளார் அனிருத் ரவிச்சந்தர் (Anirudh Ravichander) இசையமைத்திருந்தார். இவரின் இசையமைப்பில் இப்படமானது சூப்பராக இருந்தது என்று கூறலாம்.
இந்த திரைப்படமானது வெளியாகி 5 வாரங்களை கடந்த நிலையில், தற்போது இப்படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்த அறிவிப்புகள் வெளியாகியுள்ளது. இந்த படமானது கடந்த 2025, ஆகஸ்ட் 27ம் தேதி முதல் நெட்பிளிக்ஸ் (Netflix) ஓடிடியில் வெளியாகியிருக்கிறது.
இதையும் படிங்க : அந்த மாதிரி கதை வந்தா தமிழ் படத்தில் நாயகனாக நடிப்பேன் – நடிகர் டொவினோ தாமஸ்!
கிங்டம் ஓடிடி ரிலீ அறிவிப்பு பதிவு :
In the kingdom of gold, blood and fire… a new king rises from the ashes 👑🔥
Watch #Kingdom on Netflix, in Telugu, Tamil, Kannada, Malayalam and as #Saamrajya in Hindi from 27th August! ❤️🔥@TheDeverakonda @anirudhofficial @gowtam19 @ActorSatyaDev #BhagyashriBorse @Venkitesh_VP… pic.twitter.com/l0e4zBry3S
— Sithara Entertainments (@SitharaEnts) August 25, 2025
லவ் மேரேஜ் திரைப்படம் :
தமிழ் பிரபல நடிகர்களில் ஒருவர் விக்ரம் பிரபு. இவரின் நடிப்பில் தமிழில் பல படங்கள் வெளியாகி நல்ல வரவேற்பை கொடுத்திருக்கிறது. அந்த வகையில், இந்த 2025ம் ஆண்டு ஜூன் 27ம் தேதியில் வெளியான படம் லவ் மேரேஜ். இப்படத்தை இயக்குநர் சண்முக பிரியன் இயக்கியிருந்தார். இதில் விக்ரம் பிரபுவுக்கு ஜோடியாக நடிகை சுமிதா பாட் இணைந்து நடித்திருந்தார். இந்த படமானது தெலுங்கில் வெளியான “அசோக வனம்லோ அர்ஜுன கல்யாணம்” என்ற படத்தின் தமிழ் ரீமேக் ஆகும்.
இந்த படமானது திரையரங்குகளில் வெளியாகி 2 மாதங்களை கடந்த நிலையில், ஓடிடி ரிலீஸ் பற்றிய தகவல்களும் வெளியாகியிருக்கின்றன. அதன்படி இப்படமானது கடந்த 2025, ஆகஸ்ட் 29ம் தேதி முதல் அமேசான் ப்ரைம் வீடியோ ஓடிடியில் வெளியாகியுள்ளது.
இதையும் படிங்க : உங்களுக்கு நான் ஈ படம் பிடிக்குமா? அப்போ இந்த லவ்லி படத்தை மிஸ் செய்யாதீர்கள்
வசந்தி திரைப்படம் :
தமிழில் லப்பர் பந்து திரைப்படத்தின் மூலம் மிகவும் பிரபலமான நடிகை ஸ்வாசிகா. இவரின் நடிப்பில் கடந்த 2021ம் ஆனது வெளியான திரைப்படம் வசந்தி. இந்த படத்தை கேரள பிரபல இயக்குநர் ஷினோஸ் ரஹ்மான் இயக்கியிருந்தார். இந்த படமானது பாலியல் தொழில் செய்யும் பெண்ணின் கதைக்களம் கொண்டு உருவாகியிருந்தது. இந்த படமானது பல விருதுகளை பெற்றிருக்கும் நிலையில், தற்போது ஓடிடியிலும் காண கிடைக்கிறது. இப்படமானது மனோரமா மேக்ஸ் என்ற ஓடிடியில் இருக்கிறது.
மாயக்கூத்து திரைப்படம் :
இயக்குநர் ஏ.ஆர். ராகவேந்திரா இயக்கத்தில் கடந்த 2025 ஜூலை 11ம் தேதியில் வெளியான திரைப்படம் மாயக்கூத்து. இப்படத்தில் டெல்லி கணேஷ், மு ராமசாமி, சாய் தீணா, எஸ்.கே. காயத்ரி உட்பட பல்வேறு பிரபலங்கள் இணைந்து நடித்திருந்தனர். மாறுபட்ட கதைங்கலத்தில் வெளியான இப்படம் திரையரங்குகளில் ஓரளவு வரவேற்பை பெற்றது. அதை தொடர்ந்து, தற்போது இப்படமானத் ஓடிடியிலும் வெளியாகியுள்ளது. இப்படம் சன் நெக்ஸ்ட் ஓடிடியில் தமிழ் மற்றும் பிற மொழிகளிலும் கிடைக்கிறது.
கெவி திரைப்படம் :
நடிகர்கள் ஆதவன், உமர் பாரூக், எஸ்.கே. காயத்ரி நடிப்பில் வெளியான படம் கெவி. இந்த படமானது அதிரடி திகில் கதைக்களத்துடன் வெளியாகியிருந்தது. இந்த படத்தை இயக்குநர் தமிழ் தயாளன் இயக்கியுள்ளார். இப்படமானது கடந்த ஜூலை மாதத்தில் வெளியாகியிருந்தது. அதை தொடர்ந்து தற்போது ஓடிடியிலும் ஒளிபரப்பப்பட்டு வருகிறது. இந்த படமானது சன் நெக்ஸ்ட் ஓடிடியில் கிடைக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.