ஐஸ்வர்யா ராய்க்கு ஜோடியாக நடிக்க மறுத்த முன்னணி நடிகர்கள் – ராஜிவ் மேனன் சொன்ன விசயம்!
Kandukondain Kandukondain Movie: தமிழ் சினிமாவில் வெளியாகி ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றப் படம் கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன். இந்தப் படத்தில் நடிகை ஐஸ்வர்யா ராய்க்கு ஜோடியாக நடிக்க பல முன்னணி நடிகர்கள் மறுத்ததாக இயக்குநர் ராஜிவ் மேனன் சமீபத்திய பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.

இயக்குநர் ராஜிவ் மேனன் (Rajiv Menon) இயக்கத்தில் கடந்த மே மாதம் 5-ம் தேதி 2000-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியான படம் கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன். இந்தப் படத்தின் திரைக்கதையை ராஜிவ் மேனன் எழுத்தார் சுஜாதா உடன் இணைந்து எழுதியுள்ளார். இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் மாபெரும் வரவேற்பைப் பெற்றது. இந்தப் படத்தில் நடிகர்கள் மம்முட்டி, அஜித்குமார், ஐஸ்வர்யா ராய் மற்றும் தபு ஆகியோர் முண்ணனி கதாப்பாத்திரத்தில் நடித்து இருந்தனர். இவர்களுடன் இணைந்து நடிகர்கள் அப்பாஸ், மணிவண்ணன், ஸ்ரீவித்யா, ரகுவரன், நிழல்கள் ரவி, ஷாமிலி, அனிதா ரத்னம், உன்னிகிருஷ்ணன் நம்பூதிரி, ருக்குமணி, மோகன் ராமன், டாக்டர் மாத்ருபூதம், சத்ய பிரியா, எஸ்.என்.லட்சுமி. ஸ்ரீஜா, நீலு, வரதராஜன், உமா பத்மநாபன், மலேசியா வாசுதேவன், அரவிந்த், கங்கை அமரன், சுந்தரமூர்த்தி, ரவிராஜ் என பலர் இந்தப் படத்தில் நடித்துள்ளனர்.
மேலும் இந்தப் படத்தை பிரபல தயாரிப்பு நிறுவனமான வி கிரியேஷன்ஸ் சார்பில் தயரிப்பாளர் கலைப்புலி எஸ் தாணு தயாரித்து இருந்தார். மேலும் இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்து இருந்த நிலையில் படம் ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றது போல பாடல்களும் மாபெரும் வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இந்தப் படத்தின் இயக்குநர் ராஜிவ் மேனன் சமீபத்தில் அளித்தப் பேட்டி ஒன்று ரசிகர்களிடையே கவனத்தைப் பெற்று வருகின்றது.
மம்முட்டிதான் ஐஸ்வர்யா ராயின் ஜோடியாக நடிக்க சம்மதித்தார்:
இயக்குநர் ராஜிவ் மேனன் சமீபத்தில் யூடியூப் சேனலுக்கு அளித்தப் பேட்டி ஒன்றில் பேசிய போது கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் படத்தில் மேஜர் பாலா கதாப்பாத்திரத்திற்கு நடிக்க வைக்க நடிகரை தேர்வு செய்வதில் தான் மிகுந்த சிரமம் இருந்ததாக தெரிவித்துள்ளார்.




இறுதியாக அந்த கதாப்பாத்திரத்தில் நடிக்க நடிகர் மம்முட்டி சம்மதித்தார். ஆனால் அவருக்கு முன்னதாக பல முன்னணி நடிகர்களிடம் அந்தப் கதாப்பாத்திரத்தில் நடிப்பதற்காக கேட்டோம் ஆனால் யாரும் சம்மதிக்கவில்லை. இறுதியாக மம்முட்டிதான் அதில் நடிக்க சம்மதித்தார் என்று இயக்குநர் ராஜிவ் மேனன் தெரிவித்து இருந்தார். இது ரசிகர்களிடையே வைரலாகி வருகின்றது.
Also Read… ரவி மோகன் தயாரிக்கும் முதல் படமான ப்ரோ கோட் படத்தின் ப்ரோமோ இதோ!
கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் படத்தின் பாடல்:
Also Read… நெட்ஃபிளிக்ஸில் ஸ்கேட்டர் கேர்ள் என்ற ஸ்போர்ஸ் படத்தை பார்க்காமல் தவறவிடாதீர்கள்