அஜித் மேல எனக்கு வருத்தம் – லைலா சொன்ன விசயம்!
Actress Laila: தமிழ் சினிமாவில் தனது கியூட்டான சிரிப்பால் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர் நடிகை லைலா. இவரது நடிப்பில் வெளியான படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று இருக்கிறது. இந்த நிலையில் சமீபத்தில் நடிகர் அஜித் குமார் குறித்து லைலா பேசியது தற்போது வைரலாகி வருகின்றது.

இந்தி சினிமாவில் கடந்த 1996-ம் ஆண்டு வெளியான துஷ்மன் துனியா கா என்ற படத்தின் மூலம் சினிமாவில் நடிகையாக அறிமுகம் ஆனார் நடிகை லைலா (Actress Laila). இந்தி சினிமாவில் நடிகையாக அறிமுகம் ஆன இவர் அதனைத் தொடர்ந்து மலையாளம் மற்றும் தெலுங்கு மொழிகளில் தொடர்ந்து நாயகியாக நடித்து வந்தார். இந்த நிலையில் கடந்த 1999-ம் ஆண்டு வெளியான கள்ளழகர் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகம் ஆனார் நடிகை லைலா. இந்தப் படத்தில் நடிகர் விஜயகாந்த் நாயகனாக நடித்து இருந்த நிலையில் இயக்குநர் பாரதி இந்தப் படத்தை எழுதி இயக்கி இருந்தார். இந்தப் படத்தை தொடர்ந்து தமிழ் சினிமாவில் நடிகை லைலா பலப் படங்களில் நடித்து இருந்தார். இவரது நடிப்பில் தமிழ் சினிமாவில் வெளியான ரோஜாவனம், பார்த்தேன் ரசித்தேன், தீனா, தில், அள்ளித்தந்த வானம், நந்தா, காமராசு, உன்னை நினைத்து, மௌனம் பேசியதே, த்ரி ரோசஸ், பிதாமகன், உள்ளம் கேட்குமே, பரமசிவன், திருப்பதி, சர்தார், தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம், சப்தம் ஆகிய படங்களில் நடித்துள்ளார்.
இப்படி இவர் நடித்தப் படங்கள் தொடர்ந்து வெற்றிப் பெற்றது. தொடர்ந்து நாயகியாக நடித்து வந்த நடிகை லைலா தற்போது சிறப்பு கதாப்பாத்திரங்களில் நடித்து வருகிறார். அண்ணி, அம்மா என இவர் ஏற்று நடிக்கும் படங்கள் தற்போது ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்று வருகின்றது. இந்த நிலையில் சமீபத்தில் நடிகை லைலா அளித்தப் பேட்டி ஒன்று இணையத்தில் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்று வருகின்றது.




அஜித் சார் எனக்கு சமைச்சு கொடுக்கவே இல்லை நான் கோவமாக இருக்கிறேன்:
அந்தப் பேட்டியில் நடிகை லைலாவிடம் அஜித் உடன் தீனா படத்தின் போது எடுத்தப் புகைப்படத்தை காட்டி அவர் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த நடிகை லைலா அவர் மிகவும் ஹேண்ட்சமான ஆள். ஆன நான் அவர் மீது கோவமாக இருக்கிறேன்.
அவர் ஷூட்டிங் ஸ்பாட்டில் எல்லாருக்கும் சமைச்சு கொடுத்து இருக்கார். ஆனா என்னோட நடிக்கும் போது எனக்கு அவர் சமைச்சு கொடுக்கல. அதனால் அவர் மீது எனக்கு கோபம் இருக்கிறது. அவர் மறுபடியும் என்னோட நடிக்கனும். அப்போ எனக்கு சமைச்சு கொடுக்கனும் என்று நடிகை லைலா கூறியது தற்போது இணையத்தில் ரசிகர்களிடையே கவனத்தைப் பெற்று வருகின்றது.
Also Read… காமெடியும் ஃபேண்டசியும் கலந்த இந்த படகலம் படத்தை எந்த ஓடிடியில் பார்க்கலாம்?
நடிகை லைலாவின் சமீபத்திய இன்ஸ்டாகிராம் பதிவு:
View this post on Instagram
Also Read… ஜன நாயகன் படத்தின் முதல் சிங்கிள் தலைப்பு தெரியுமா? இணையத்தில் வைரலாகும் தகவல்!