நான் இயக்கிய படங்களில் எனக்கு பிடித்த பெண் கதாப்பாத்திரம் இதுதான் – இயக்குநர் வெற்றிமாறன்
Director Vetrimaaran: தமிழ் சினிமாவில் தொடர்ந்து வெற்றிப்படங்களை இயக்குவதன் மூலம் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர் இயக்குநர் வெற்றிமாறன். இவர் இயக்கும் படங்களில் பெண்களின் கதாப்பாத்திரம் மிகவும் முக்கியம் வாய்ந்ததாக இருக்கும். இந்த நிலையில் வெற்றிமாறன் இயக்கத்தில் அவருக்கு மிகவும் பிடித்த பெண் கதாப்பாத்திரம் குறித்து பேசியுள்ளார்.

கோலிவுட் சினிமாவில் மிகவும் அழுத்தமான படங்களை இயக்கி ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர் இயக்குநர் வெற்றிமாறன் (Director Vetrimaaran). இவரது இயக்கத்தில் வெளியாகும் படங்களில் ஆண்களின் கதாப்பாத்திரம் எவ்வளவு வலிமையானதாக உள்ளதோ அதே போல பெண்களின் கதாப்பாத்திரமும் மிகவும் வலிமையானதாக கட்டமைக்கப்பட்டு இருக்கும். இதன் காரணமாக வெற்றிமாறனின் படங்களில் நாயகனின் கதாப்பாத்திரங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெறுவதுபோல பெண்களின் கதாப்பாத்திரங்களும் ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெறுவது குறிப்பிடத்தக்கது. தமிழ் சினிமாவில் இயக்குநராக இருக்கும் வெற்றிமாறன் தயாரிப்பாளராகவும் தற்போது படங்களை தயாரித்து வருகிறார். இவரது தயாரிப்பில் தற்போது பேட் கேர்ள் என்ற படம் திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. இந்தப் படத்தின் புரமோஷன் பணிகளில் படக்குழுவினர் உடன் இயக்குநர் வெற்றிமாறனும் கலந்துகொண்டார்.
அந்தப் பேட்டியில் படம் குறித்து பேசிய இயக்குநர் அவரது இயக்கத்தில் வெளியான படங்கள் குறித்தும் பேசினார். மேலும் இவரது தயாரிப்பில் வெளியாகியுள்ள பேட் கேர்ள் படம் திரையரங்குகளில் வெளியாவதற்கு முன்பே தணிக்கையில் பல சர்ச்சைகளை சந்தித்தது. இதனைத் தொடர்ந்து இனி படங்களை தயாரிப்பதில்லை என தெரிவித்தது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மேலும் இயக்குநராக இருப்பதில் இருக்கும் சுதாந்திரம் தயாரிப்பாளராக இல்லை என்றும் அவர் தெரிவித்து இருந்தார்.




என் படங்களில் பிடித்த பெண் கதாப்பாத்திரம் இவர்தான்:
சமீபத்தில் பேட்டி ஒன்றில் கலந்துகொண்ட இயக்குநர் வெற்றிமாறனிடம் நீங்கள் இயக்கிய படங்களில் உங்களுக்கு மிகவும் பிடித்த பெண் கதாப்பாத்திரம் எது என்று செய்தியாளர் கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த இயக்குநர் வெற்றிமாறன் தனக்கு மிகவும் பிடித்த பெண் கதாப்பாத்திரம் இப்போ வரைக்கும் சந்திரா தான் என்று தெரிவித்து இருந்தார்.
இந்த சந்திரா கதாப்பாத்திரம் 2018-ம் ஆண்டு இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியான வடசென்னை படத்தில் நடிகை ஆண்ட்ரியா ஜெர்மையா நடித்த கதாப்பாத்திரம் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்தப் கதாப்பாத்திரத்தை ரசிகர்கள் கொண்டாடித் தீர்த்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Also Read… லோகா படம் உங்களுக்கு புடிச்சு இருக்கா? அப்போ மலையாளத்தில் மின்னல் முரளி படத்தை மிஸ் பண்ணிடாதீங்க
வைரலாகும் வெற்றிமாறனின் பேட்டி இதோ:
#Vetrimaaran
– My best female character was #VadaChennai Chandra character, but that character is not yet complete.
– Since there is still a mystery in that character, I feel I am not good at writing female characters.#STR49pic.twitter.com/eiGuDiltRD— Movie Tamil (@_MovieTamil) September 4, 2025
Also Read… லோகா மலையாள சினிமாவில் எங்களுக்கு பெரிய பட்ஜெட் படம் – நடிகர் துல்கர் சல்மான்