சில நினைவுகள் காலத்தால் அழியாதவை… வைரலாகும் மிருணாள் தாக்கூரின் இன்ஸ்டாகிராம் பதிவு!
Actress Mrunal Thakur: மராத்தி சினிமாவில் நடிகையாக அறிமுகம் ஆகி தற்போது பான் இந்திய அளவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் நடிகை மிருணாள் தாக்கூர். இவர் தொடர்ந்து படங்களில் நடித்து வருவதன் மூலம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறார்.

கடந்த 2014-ம் ஆண்டு மராத்தி திரையுலகில் வெளியான படம் ஹெல்லோ நந்தன். இந்தப் படத்தில் நடித்ததன் மூலம் சினிமாவில் நாயகியாக அறிமுகம் ஆனார் நடிகை மிருணாள் தாக்கூர் (Mrunal Thakur). இவர் படங்களில் நடித்து மக்களிடையே அதிகம் பரிச்சையம் ஆனதைவிட சின்னத்திரையில் சீரியல்களில் நடித்து ரசிகர்களிடையே அதிகம் பிரபலம் ஆனார் என்பது குறிப்பிடத்தக்கது. இவரது நடிப்பில் இந்தி மற்றும் மராத்தி மொழிகளில் வெளியான சீரியல்கள் டப் செய்யப்பட்டு தமிழில் வெளியானபோது தமிழ் ரசிகர்கள் இவரை கொண்டாடித் தீர்த்தனர். தொடர்ந்து சீரியல்களில் நடித்து வந்த நடிகை மிருணாள் தாக்கூர் பின்பு சீரியலை விட்டுவிட்டு முழுவதுமாக படங்களில் நடிப்பதில் கவனம் செலுத்த தொடங்கினார். அதன்பிறகு இவரது நடிப்பில் வெளியாகும் படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வந்தது குறிப்பிடத்தக்கது.
2014-ம் ஆண்டு முதல் சினிமாவில் நாயகியாக நடித்து வரும் மிருணாள் தாக்கூருக்கு பெரிய அளவில் ஹிட் கொடுத்த படம் என்றால் அது சீதா ராமம் தான். ஆம் மராத்தி மொழியில் இவர் நடிகையாக அறிமுகம் ஆகி இருந்தாலும் அதிக அளவில் இந்தி மற்றும் தெலுங்கு மொழிகளில் படங்களில் நடித்து வருகிறார் நடிகை மிருணாள் தாக்கூர். இந்த நிலையில் நடிகை மிருணாள் தாக்கூர் நடிப்பில் கடந்த 2022-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 5-ம் தேதி திரையரங்குகளில் வெளியான படம் சீதா ராமம். இந்தப் படத்திற்கு பிறகு சினிமாவில் நடிகை மிருணாள் தாக்கூரின் மார்க்கெட் உயர்ந்தது என்றே கூறலாம்.




சீதா ராமம் படம் குறித்து நடிகை மிருணாள் தாக்கூர் போட்ட இன்ஸ்டா போஸ்ட்:
சீதா ராமம் படம் வெளியாகி 3 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில் நேற்று 01-ம் தேதி செப்டம்பர் மாதம் 2025-ம் ஆண்டு நடிகை மிருணாள் தாக்கூர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டு இருந்தார். அதில் சீதா ராமம் படத்தின் போது எடுத்த BTS புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களையும் இணைத்து இருந்த நிலையில் சில நினைவுகள் காலத்தால் அழியாதவை என்றும் தெரிவித்து இருந்தார். இது தற்போது இணையத்தில் ரசிகர்களிடையே கவனத்தைப் பெற்று வருகின்றது.
Also Read… எனக்கு முதல் ப்ளாக்பஸ்டர் படத்தை கொடுத்தது சிவகார்த்திகேயன் தான் – அனிருத்
நடிகை மிருணாள் தாக்கூர் வெளியிட்டுள்ள இன்ஸ்டாகிராம் பதிவு இதோ:
View this post on Instagram
Also Read… 9 வருடத்தில் 6 படங்கள்.. நான் பெருமையாக சொல்வேன்- லோகேஷ் கனகராஜ்!