Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

ஜான்வி கபூர் விமானப்படை விமானியாக நடித்த குஞ்சன் சக்சேனா எந்த ஓடிடியில் பார்க்கலாம்?

Gunjan Saxena: இந்தி சினிமாவில் பிரபல நடிகை ஸ்ரீ தேவி மற்றும் பிரபல தயாரிப்பாளர் போனி கபூரின் மகளாக நடிகை ஜான்வி கபூர் அறிமுகம் ஆனார். தற்போது தென்னிந்திய மொழிகளிலும் நடித்து வரும் நடிகை ஜான்வி கபூரின் நடிப்பில் வெளியான குஞ்சன் சக்சேனா படத்தை எந்த ஓடிடியில் பார்க்கலாம் என்பது குறித்து தற்போது பார்க்கலாம்.

ஜான்வி கபூர் விமானப்படை விமானியாக நடித்த குஞ்சன் சக்சேனா எந்த ஓடிடியில் பார்க்கலாம்?
ஜான்வி கபூர்Image Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 01 Sep 2025 21:46 PM

இந்திய சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வந்தவர் நடிகை ஸ்ரீ தேவி. இவர் குறிப்பாக தமிழ் சினிமாவில் பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்துள்ளார். பிரபல தயாரிப்பாளர் போனி கபூரை திருமணம் செய்துகொண்ட பிறகு இந்தி சினிமாவிலேயே முழு கவனம் செலுத்தி வந்த இவர் அவ்வப்போது தமிழ் சினிமா பக்கம் எட்டிப்பார்ப்பார். இந்த நிலையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு விபத்து ஒன்றில் நடிகை ஸ்ரீ தேவி உயிரிழந்தார். இவரைத் தொடர்ந்து இவரது மூத்த மகள் ஜான்வி கபூர் (Actress Jahnvi Kapoor) சினிமாவில் நாயகியாக அறிமுகம் ஆனார். ஜான்வி கபூரின் நடிப்பு தொடர்ந்து விமர்சனத்திற்கு உள்ளானாலும் அவர் தொடர்ந்து படங்களில் நடித்து வருவதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் முன்னதாக நடிகை ஜான்வி கபூர் நடிப்பில் வெளியான குஞ்சன் சக்சேனா படத்தை எந்த ஓடிடியில் பார்க்கலாம் என்பது குறித்து தற்போது பார்க்கலாம்.

இயக்குநர் சரண் ஷர்மா எழுதி இயக்கிய படம் குஞ்சன் சக்சேனா. குஞ்சன் சக்சேனா என்ற பெண் விமான படை வீரரின் வாழ்க்கையை மையமாக வைத்து உருவான இந்தப் படம் கடந்த 12-ம் தேதி ஆகஸ்ட் மாதம் 2020-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியானது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தில் நடிகை ஜான்வி கபூர் நாயகியாக நடித்து இருந்த நிலையில் அவருடன் இணைந்து நடிகர்கள் பங்கஜ் திரிபாதி, அங்கத் பேடி, ஆர்யன் அரோரா, ஆயிஷா ராசா, மானவ் விஜ், வினீத் குமார் சிங், சந்தன் கே. ஆனந்த், யோகேந்திர விக்ரம் சிங், பார்பி ராஜ்புத், ஷாரிக் கான், ரச்சனா பருல்கர் என பலர் இந்தப் படத்தில் நடித்து இருந்தனர். திரையரங்குகளில் வெளியான போது படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.

குஞ்சன் சக்சேனா படத்தின் கதை என்ன?

குஞ்சன் சக்சேனா என்ற விமானப் படை விமானியின் வாழ்க்கையை தழுவி எடுக்கப்பட்டதுதான் இந்தப் படம். ஒரு பெண் விமானப்படையில் சேர்வதற்காக எவ்வளவு சிரமங்களை சந்தித்தார் என்பதே இந்தப் படத்தின் கதை. இதில் அந்த குஞ்சன் சக்சேனாவாக நடிகை ஜான்வி கபூர் நடித்து இருந்தார். உண்மை சம்பவத்தை மையமாக வைத்து உருவான இந்தப் படம் தற்போது நெட்ஃபிளிக்ஸ் ஓடிடியில் காணக் கிடைக்கின்றது.

Also Read… பிரித்விராஜ் நடிப்பில் கோல்ட் கேஸ் என்ற க்ரைம் த்ரில்லர் ஹாரர் படத்தை பார்த்து இருக்கீங்களா?

நடிகை ஜான்வி கபூரின் சமீபத்திய இன்ஸ்டாகிராம் பதிவு:

 

View this post on Instagram

 

A post shared by Janhvi Kapoor (@janhvikapoor)

Also Read… ‘நீங்க நல்லவர்தான்’ – வார்த்தையை விட்ட தொகுப்பாளர்.. கடுப்பாகி பதிலளித்த நடிகர் யோகிபாபு