லோகா படம் உங்களுக்கு புடிச்சு இருக்கா? அப்போ மலையாளத்தில் மின்னல் முரளி படத்தை மிஸ் பண்ணிடாதீங்க
Minnal Murali: தற்போது மலையாள சினிமாவில் வெளியாகி ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்று வரும் படம் லோகா சாப்டர் 1 சந்திரா. சூப்பர் ஹீரோ கதையை மையமாக வைத்து வெளியான இந்தப் படம் போலவே மலையாள சினிமாவில் முன்னதாக சூப்பர் ஹீரோ கதையை மையமாக வைத்து வெளியான மின்னல் முரளி படத்தை எந்த ஓடிடியில் பார்க்கலாம் என்பது குறித்து தற்போது பார்க்கலாம்.

மலையாள சினிமாவில் கடந்த ஆகஸ்ட் மாதம் 28-ம் தேதி 2025-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியான படம் லோகா சாப்டர் 1: சந்திரா. சூப்பர் ஹீரோ கதையை மையமாக வைத்து வெளியான இந்தப் படம் ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் மாபெரும் வரவேற்பைப் பெற்று வருகின்றது. மேலும் இந்தப் படம் ரூபாய் 101 கோடிகளுக்கு அதிகமாக வசூலித்துள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்தப் படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வரும் நிலையில் முன்னதாக இதே மாதிரி மலையாள சினிமாவில் வெளியான சூப்பர் ஹீரோ படம் குறித்தும் அந்தப் படத்தினை எந்த ஓடிடியில் பார்க்கலாம் என்பது குறித்தும் தற்போது பார்க்கலாம். மின்னல் முரளி என்ற இந்தப் படத்தை நடிகரும் இயக்குநருமான பேசில் ஜோசஃப் இயக்கி இருந்தார்.
இந்த மின்னல் முரளி படத்தில் நடிகர் டொவினோ தாமஸ் நாயகனாக நடித்து இருந்தார். மேலும் இந்தப் படத்தில் டொவினோ தாமஸ் உடன் இணைந்து நடிகர்கள் குரு சோமசுந்தரம், பாலசந்திரன், ஆர்யா சலீம், அஜூ வர்கீஸ், தென்னல் அபிலாஷ், ஹரிஸ்ரீ அசோகன், பைஜு, சினேகா பாபு, ஃபெமினா ஜார்ஜ், ஜூட் ஆண்டனி ஜோசப், மாமுக்கோயா, பிஜுகுட்டன், அஸீஸ் நெடுமங்காடு, ராஜேஷ் மாதவன், ஜிபின் கோபிநாத், ஹரிஷ் பெங்கன், தேவி சந்தனா, விஷ்ணு சோமன், சியாம் கார்கோஸ், கலாபவன் ஜோஷி, சுர்ஜித் கோபிநாத், பாலி வல்சன், ரோஹித் சங்வான், சுதீஷ் என பலர் இந்தப் படத்தில் நடித்து இருந்தனர்.
டொவினோ தாமஸின் மின்னல் முரளி படத்தின் கதை என்ன?
90களின் தொடக்கத்தில் இந்தப் படத்தின் கதை நடப்பது போல படம் காட்சிப்படுத்தப்பட்டு இருந்தது. அப்போது தான் இந்த சூப்பர் ஹீரோக்களின் கதைகளை மக்கள் அதிகமாக தெரிந்துகொள்ளும் காலம். இந்த நிலையில் கேரளாவில் உள்ள குருக்கன்மூலா என்ற கிராமத்தில் வசிக்கும் அனீஷிற்கு (டொவினோ தாமஸ்) அப்போதுதான் காதல் தோல்வி ஏற்பட்டு இருக்கும். வெளி நாட்டிற்கு செல்வதற்காக முயற்சி செய்துக்கொண்டிருக்கும் அவருக்கு ஒருநாள் மழை நாளில் மின்னல் தாக்கிவிடும்.




அந்த மின்னல் தாக்கியபிறகு அவருக்கு அபரிமிதமான சக்தி ஒன்று கிடைக்கும். அந்த சக்தியை பயன்படுத்தி பல நல்ல காரியங்களை செய்துவருவார். இது அவரின் அக்கா மகன் ஜோஷ்மோனுக்கு மட்டும் தெரியும். ஜோஷ்மோன் தான் சூப்பர் ஹீரோக்கள் குறித்து அனீஷிற்கு சொல்லிக்கொடுப்பான். பிறகு இந்த சக்தி உள்ள மனிதனுக்கு மின்னல் முரளி என்று பெயர் வைப்பார்கள். இப்படி ஊருக்கு நல்லது செய்வதுடன் தனக்கு கிடைத்த சக்தியை நினைத்து மகிழ்ச்சியில் இருக்கிறார் அனீஷ்.
Also Read… கூலி படத்தின் சிக்கிடு பாடலின் BTS வீடியோவை வெளியிட்ட படக்குழு!
அதே நேரத்தில் ஊரில் சில கொலைகள் மற்றும் கொள்ளைகள் நடக்கும். அதனை செய்வதும் மின்னல் முரளி என்று எழுதிவைத்து விடுவார்கள். இதனால் குழப்பமடைந்த அனீஷ் மற்றும் ஜோஷ்மோன் யார் அந்த நபர் என்பதை தேடுவார்கள். இறுதியில் அவரை எப்படி கண்டுபிடித்தார் என்பதே படத்தின் கதை.
மின்னல் முரளி படத்தின் ட்ரெய்லர் இதோ:
Also Read… சிம்பு – வெற்றிமாறன் படத்தில் நடிக்கிறீர்களா? நகைச்சுவையாக பதிலளித்த நெல்சன் திலீப்குமார்!