Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

கூலி படத்தின் சிக்கிடு பாடலின் BTS வீடியோவை வெளியிட்ட படக்குழு!

Chikitu Song: நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் திரையரங்குகளில் சமீபத்தில் வெளியான படம் கூலி. இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்துள்ள நிலையில் பாடல்கள் அனைத்தும் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது. இந்த நிலையில் படத்தில் இருந்து சிக்கிடு பாடலின் BTS வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.

கூலி படத்தின் சிக்கிடு பாடலின் BTS வீடியோவை வெளியிட்ட படக்குழு!
சிக்குடுImage Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 02 Sep 2025 20:03 PM

நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் தற்போது திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்று வரும் படம் கூலி. இந்தப் படம் சுதந்திர தினத்தை முன்னிட்டு கடந்த 14-ம் தேதி ஆகஸ்ட் மாதம் 2025-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியானது. படத்தில் நடிக்கும் நடிகர்கள் மற்றும் படக்குழுவினரின் அப்டேட்கள் தொடர்ந்து வெளியாகி ரசிகர்களிடையே மாபெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இந்தப் படத்தை இயக்க்குநர் லோகேஷ் கனகராஜ் எழுதி இயக்கி இருந்தார். படம் வெளியாவதற்கு முன்பே இந்தப் படத்திற்காக நிறைய உழைப்பை கொடுத்துள்ளேன். நிச்சயமாக ரஜினிகாந்த் சாரின் சிறப்பான ஆக்‌ஷன் கட்சிகளை திரையரங்குகளில் பார்த்து ரசிப்பீர்கள் என்று அவர் தெரிவித்து இருந்தார். அதன்படி லோகேஷ் கனகராஜ் கூறியது போல படம் வெளியான போது ரசிகர்கள் இந்தப் படத்தை கொண்டாடி தீர்த்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்தப் படத்தில் நடிகர் ரஜினிகாந்த் உடன் இணைந்து நடிகர்கள் உபேந்திரா, சத்யராஜ், ஸ்ருதி ஹாசன், நாகர்ஜுனா, அமீர் கான், சௌபின் ஷாகிர், கண்ணா ரவி, ரச்சிதா ராம் என பலர் இந்தப் படத்தில் நடித்து இருந்தனர். மேலும் இந்தப் படத்திற்கு இசையமைபாளர் அனிருத் ரவிச்சந்திரன் இசையமைத்து இருந்தார். படம் ரசிகரக்ளிடையே பாராட்டைப் பெற்றது போல பாடல்களும் ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.

இணையத்தில் வைரலாகும் சிக்கிடு பாடலின் BTS வீடியோ:

படம் திரையரங்குகளில் வசூல் சாதனை படைத்து வரும் நிலையில் தொடர்ந்து படத்தின் வீடியோக்களை படக்குழு அவ்வபோது வெளியிட்டு வருகின்றது. இந்த நிலையில் கூலி படத்தில் உள்ள சிக்கிடு பாடலுக்கு நடிகர் ரஜினிகாந்த் நடனம் ஆடும் சிக்குடு பாடலின் BTS வீடியோவைப் படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது. இது தற்போது இணையத்தில் ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.

Also Read… வெளியானது பிக்பாஸ் சீசன் 9-ன் அறிவிப்பு – வைரலாகும் வீடியோ!

கூலி படக்குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:

Also Read… சிவகார்த்திகேயன் பட இயக்குநருடன் இணையும் நடிகர் சூரி? வைரலாகும் தகவல்