Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Bigg Boss Season 9 Tamil : வெளியானது பிக்பாஸ் சீசன் 9-ன் அறிவிப்பு – வைரலாகும் வீடியோ!

Bigg Boss Tamil Season 9 Announcement : ஒட்டுமொத்த தமிழ் ரசிகர்கள் மத்தியிலும் மிகவும் பிரபலமான ரியாலிட்டி ஷோதான் பிக்பாஸ். இந்நிலையில் தமிழில் இதுவரை 8 சீசன்கள் முடிந்த நிலையில், தற்போது 9 வது சீசனின் லோகோவை பிக்பாஸ் குழு வெளியிட்டுள்ளது.

Bigg Boss Season 9 Tamil : வெளியானது பிக்பாஸ் சீசன் 9-ன் அறிவிப்பு – வைரலாகும் வீடியோ!
பிக் பாஸ் சீசன் 9 தமிழ்
Barath Murugan
Barath Murugan | Updated On: 01 Sep 2025 19:12 PM IST

இந்தியாவில் மிகவும் பிரபலமான ரியாலிட்டி நிகழ்ச்சியாக இருந்து வருவது பிக்பாஸ் (Bigg Boss). இது “பிக் பிரதர்ஸ்” என்ற ஆங்கில தொலைக்காட்சி நிகழ்ச்சியின் அடிப்படையாகக் கொண்டு இந்தியாவில் பிக்பாஸ் என ஒளிபரப்பப்பட்டு வருகிறது. இந்த நிகழ்ச்சியானது தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி மற்றும் கன்னடம் என பான் இந்திய மொழிகளில் ஆண்டுதோறும் ஒளிபரப்பப்பட்டு வருகிறது. சமீபத்தில் மலையாளத்தில் பிக்பாஸ் புதிய சீசன் ஆரம்பமாகியிருந்தது. தமிழில் கடந்த 2017ம் ஆண்டு முதல் இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியானது தொடங்கிய நிலையில், இதுவரை மொத்தம் 8 சீசன்கள் முழுமையாக முடிந்துள்ளது. இதில் பிக்பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியை நடிகர் விஜய் சேதுபதி (Vijay Sethupathi) தொகுத்து வழங்கினார்.

இந்நிலையில், தற்போது “பிக்பாஸ் சீசன் 9” (Bigg Boss Season 9) தமிழ் குறித்த அறிவிப்பையும் பிக்பாஸ் குழு வெளியிட்டுள்ளது. இந்த 2025ம் ஆண்டு நிறைவடைவதற்கு இன்னும் சில மாதங்கள் மட்டும் உள்ள நிலையில், இந்த ஆண்டிற்கான பிக்பாஸ் புதிய சீஸனின் லோகோ வெளியாகியுள்ளது. பிக்பாஸ் சீசன் 9 தமிழ் நிகழ்ச்சியின் புதிய லோகோ வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.

இதையும் படிங்க : விஷ்ணு விஷாலின் கட்டா ‘குஸ்தி பார்ட் 2’.. புரோமோ வீடியோ இதோ!

பிக்பாஸ் சீசன் 9ன் புதிய லோகோ அறிவிப்பு

இந்த சீசனையும் நடிகர் விஜய் சேதுபதிதான் தொகுத்து வழங்கவுள்ளார் என்ற நிலையில், இந்த பிக்பாஸ் சீசன் 9 தமிழின் டீசர் விரைவில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பிக்பாஸ் சீசன் 9 தமிழ் எப்போது ஆரம்பமாகிறது?

தற்போது புதியதாக ஒளிபரப்பாகும் பிக்பாஸ் சீசன் 9 தமிழ் நிகழ்ச்சியையும் நடிகர் விஜய் சேதுபதிதான் தொகுக்கவுள்ளாராம். இந்த சீசன் 9, வரும் 2025ம் ஆனது அக்டோபர் மாதத்தில் தொடங்கும் என கூறப்படுகிறது.

பிக்பாஸ் சீசன் 8

கடந்த 2024ம் ஆண்டு இறுதியில் இந்த பிக்பாஸ் சீசன் 8 தமிழ் நிகழ்ச்சியானது ஆரம்பமானது. இந்த நிகழ்ச்சியில் கிட்டத்தட்ட, இதுவரை மற்ற சீசன்களில் இல்லாத வகையில், 23 மேற்பட்ட போட்டியாளர்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர். இதில் பல்வேறு பிரபலங்கள் கலந்துகொண்டிருந்தனர். இந்த சீசன் 8 மிகவும் பிரம்மாண்டமாகவும், மிகவும் சுவாரஸ்யமாகவும் இருந்தது என்றே கூறலாம்.

இதையும் படிங்க : சிவகார்த்திகேயன் ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ்.. ‘மதராஸி’ படத்தின் முன்பதிவு தொடக்கம்! 

இந்த பிக்பாஸ் சீசன் 8ல் வெற்றியாளராக முத்துக்குமரன் ட்ராபியை வாங்கியிருந்தார். இந்த நிகழ்ச்சியானது கடந்த 2025, பிப்ரவரி தொடக்கத்தில் நிறைவடைந்தது. இந்த சீசன் முடிந்து, கிட்டத்தட்ட 6 மாதம் கடந்த நிலையில், மீண்டும் அடுத்த சீசனுக்கான அறிவிப்புகள் வெளியாகியுள்ளது.