இன்று மாலை வெளியாகிறது பிக்பாஸ் தமிழ் சீசன் 9 குறித்த முக்கிய அப்டேட்
Bigg Boss Tamil Season 9: இந்தியாவில் மிகவும் பிரபலமான ரியாலிட்டி நிகழ்ச்சியில் மிக முக்கியமானது பிக்பாஸ். இந்த பிக்பாஸ் நிகழ்ச்சி முதலில் இந்தியில் தொடங்கி சூப்பர் ஹிட் அடித்தது. அதனைத் தொடர்ந்து கடந்த 2017-ம் ஆண்டு முதல் தென்னிந்திய மொழிகளில் தொடங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

வெளி நாடுகளில் பிக் பிரதர் என்ற பெயரில் தொலைக்காட்சிகளில் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்த நிகழ்ச்சியை இந்தியாவில் பிக்பாஸ் என்ற பெயரில் ஒளிபரப்பத் தொடங்கினர். அதன்படி இந்தியில் முதன் முறையாக தொடங்கப்பட்ட இந்த பிக்பாஸ் (Bigg Boss) நிகழ்ச்சி 2006-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இதில் இந்தி திரையுலகில் கலர்ஸ் என்ற சேனலில் தொடர்ந்து ஒளிபரப்பாகி வருகிறது. 18 சீசன்கள் இந்தி பிக்பாஸ் முடிவடைந்த நிலையில் தற்போது 19-வது சீசன் கடந்த 24-ம் தேதி ஆகஸ்ட் மாதம் 2025-ம் ஆண்டு முதல் தொடங்கி ஒளிபரப்பாகி வருகின்றது. இந்தியில் 2006-ம் ஆண்டு தொடங்கி ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்ற பிக்பாஸ் நிகழ்ச்சி மற்ற மொழி ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வந்தது. குறிப்பாக இந்தி மட்டும் இன்றி தென்னிந்திய மொழி சினிமா பிரபலங்கள் பலர் இந்த பிக்பாஸ் நிகழ்சியில் பங்கேற்க ஆர்வம் காட்டி வந்தனர்.
இந்தியில் மாபெரும் வரவேற்பைப் பெற்று வந்த பிக்பாஸ் நிகழ்ச்சியை தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய தென்னிந்திய மொழிகளில் கடந்த 2017-ம் ஆண்டு முதல் தொடங்கினர். தமிழில் ஸ்டார் விஜய் இந்த நிகழ்ச்சியை ஒளிபரப்பும் உரிமையைப் பெற்றது. பிக்பாஸ் தமிழ் சீசன் 1 நிகழ்ச்சி தொடங்கியதில் இருந்து தொடர்ந்து 7 சீசன்களாக உலக நாயகன் கமல் ஹாசன் தான் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வந்தார். கடந்த 8-வது சீசனில் சில பல காரணங்கள் காரணமாக தன்னால் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க முடியவில்லை என்று விலகினார். அதனைத் தொடர்ந்து யார் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவார் என்று ரசிகர்கள் அதிகம் எதிர்பார்த்து காத்திருந்த நிலையில் நடிகர் விஜய் சேதுபதி பிக்பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். முதலில் பல விமர்சனங்களை சந்தித்த விஜய் சேதுபதி பிறகு அதனை எல்லாம் சரி செய்து சிறப்பாக இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.
பிக்பாஸ் தமிழ் சீசன் 9 நிகழ்ச்சி குறித்து மாஸ் அப்டேட் இதோ:
இந்த நிலையில் தொடர்ந்து 8 சீசன்களாக தமிழ் சினிமா ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்ற பிக்பாஸ் நிகழ்ச்சி தற்போது 9-வது சீசனை தொடங்க உள்ளது. முன்னதாக பல தகவல்கள் சினிமா வட்டாரங்களில் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்று வந்த நிலையில் தற்போது அதிகாரப்பூர்வ அப்டேட் வெளியாகி உள்ளது.
அதன்படி இன்று மாலை விஜய் தொலைக்காட்சி பிக்பாஸ் தமிழ் சீசன் 9-ன் லோகேவை வெளியிட உள்ளதாக அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இது ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Also Read… டிசம்பரில் வெளியாகிறது கார்த்தியின் வா வாத்தியார்… படக்குழு கொடுத்த அப்டேட்
விஜய் தொலைக்காட்சி வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவு:
இன்னைக்கு சாயங்காலம் 6 மணிக்கு…🤗 #BiggBossSeason9 #BiggBoss9 #BB9 #VijayTV #VijayTelevision pic.twitter.com/TBr7h1FZ05
— Vijay Television (@vijaytelevision) September 1, 2025