Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

டிசம்பரில் வெளியாகிறது கார்த்தியின் வா வாத்தியார்… படக்குழு கொடுத்த அப்டேட்

Vaa Vaathiyaar Movie: நடிகர் கார்த்தியின் நடிப்பில் அடுத்ததாக திரையரங்குகளில் வெளியாக காத்திருக்கும் படம் வா வாத்தியார். இந்தப் படம் குறித்த அப்டேட்கள் தொடர்ந்து வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்று வருகின்றது. இந்த நிலையில் படம் எப்போது திரையரங்குகளில் வெளியாகும் என்பது குறித்த அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது.

டிசம்பரில் வெளியாகிறது கார்த்தியின் வா வாத்தியார்… படக்குழு கொடுத்த அப்டேட்
வா வாத்தியார்Image Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 01 Sep 2025 12:06 PM

நடிகர் கார்த்தி (Actor Karthi) தற்போது தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருகிறார். தொடர்ந்து படங்களில் நடித்து வரும் நடிகர் கார்த்தியின் நடிப்பில் இறுதியாக திரையரங்குகளில் வெளியான படம் மெய்யழகன். இந்தப் படத்தை இயக்குநர் பிரேம் குமார் இயக்கி இருந்தார். இவர் முன்னதாக 96 என்ற மாபெரும் ஹிட் படத்தை இயக்கியதன் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகம் ஆனவர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்தப் படத்தில் நடிகர் கார்த்தி  உடன் இணைந்து நடிகர் அரவிந்த் சாமியும் முன்னணி வேடத்தில் நடித்து இருந்தார். ஃபீல் குட் படமாக உருவான இந்தப் படம் திரையரங்குகளில் வெளியான போது விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றது.

இந்தப் படம் தமிழ் சினிமா ரசிகர்களிடையே மட்டும் இன்றி தென்னிந்திய மொழி சினிமா ரசிகர்களிடமும் பிரபலங்களிடமும் நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்தப் படம் முழுக்க முழுக்க ஃபீல் குட் படமாக வெளியான நிலையில் அடுத்ததாக நடிகர் கார்த்தி ஆக்‌ஷன் ட்ராமா பக்கம் இறங்கியுள்ளார். அதன்படி அவர் தற்போது நடித்து முடித்துள்ள படம் வா வாத்தியார்.

டிசம்பரில் வருகிறார் வாத்தியார்… வா வாத்தியார் குழு கொடுத்த அப்டேட்:

இயக்குநர் நலன் குமாரசாமி எழுதி இயக்கியுள்ள படம் வா வாத்தியார். நடிகர் கார்த்தி இந்தப் படத்தில் நாயகனாக நடிக்க இவருடன் இணைந்து நடிகர்கள் கிருத்தி ஷெட்டி, சத்யராஜ், ஆனந்தராஜ், ராஜ்கிரண், ஷில்பா மஞ்சுநாத், கருணாகரன், ஜி.எம்.சுந்தர், வடிவுக்கரசி, மதுர் மிட்டல் என பலர் இந்தப் படத்தில் நடித்துள்ளனர்.

ஆக்‌ஷன் காமெடி பாணியில் உருவாகியுள்ள இந்தப் படத்தை பிரபல தயாரிப்பு நிறுவனமான ஸ்டூடியோ கிரீன் சார்பாக தயாரிப்பாளர் கே.இ.ஞானவேல் ராஜா தயாரித்துள்ளார். மேலும் இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ள நிலையில் படம் வருகின்ற டிசம்பர் மாதம் 2025-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாகும் என்று படக்குழு தற்போது அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இது ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.

Also Read… நெல்சன் இயக்கத்தில் அந்தப் படம் எனக்கு மிகவும் பிடிக்கும் – ஓபனாக சொன்ன விஜய் சேதுபதி

வா வாத்தியார் படக்குழு வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவு:

Also Read… 14 ஆண்டுகளை நிறைவு செய்தது அஜித் குமாரின் மங்காத்தா படம் – கொண்டாட்டத்தில் படக்குழுவினர்